Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலிகளை இராணுவ ரீதியாக ஒடுக்கமுடியாது
#1
தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக கட்டுப்படுத்திவிடலாம் என்பது நிகழுமென நம்பமுடியாதது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று சிறிலங்காவுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் ரெரசிட்டா ஸ்காஃபர் அம்மையார் தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவின் வாசிங்டனில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் ஸ்காஃபெர் அம்மையார் பேசியதாவது:

இலங்கை அமைதிப் பேச்சுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளே தொடர்ந்து முக்கிய பங்காற்றி வருகின்றனர். விடுதலைப் புலிகளுடன் சிறிலங்கா அரசு நேரடிப் பேச்சுக்களை அவசியம் மேற்கொள்ள வேண்டும்.

விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக கட்டுப்படுத்தலாம் என்பது நிகழுமென நம்ப முடியாதது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

அனுசரணைப் பணியிலிருந்து நோர்வேயை மாற்றிவிடுவதால் இனப்பிரச்சனையின் தன்மை மாறிவிடப் போவதில்லை. இலங்கை பிரச்சனைக்குத் தீர்வுகாண பாரிய அரசியல் மாற்றங்கள் உருவாக வேண்டும். தற்போதைய அரசுத் தலைவர் தேர்தல் பரப்புரைகள் மூலம் அமைதி முயற்சிக்கான வாய்ப்புகளை தூர எறிந்துவிடக் கூடாது என்றார் ரெரசிட்டா ஸ்காஃபர் அம்மையார்.

இலங்கை இனப்பிரச்சனைக்கு சிறிலங்கா அரசுதான் பொறுப்பேற்று தீர்வுகாண வேண்டும் என்று கூறிய அமெரிக்கப் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஜோன் ரிச்சர்ட்சன், ரெரசிட்டா ஸ்காஃபர் அம்மையார் கூறிய கருத்துகளையே வழிமொழிந்து பேசினார்.

நிகழ்ச்சியில் பேசிய சிறிலங்காவின் சமாதான செயலக பணிப்பாளர் ஜயந்த தனபால, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும். தற்போதைய அமைதி பேச்சு முறையை முற்றிலும் புதியதாக மாறியமைக்க வேண்டியது அவசியமாகிறது என்றார்.

அமெரிக்க காங்கிரசார் ஜெர்ரி வெல்லெர், டெனி டெவிஸ் மற்றும் அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் பேர்னாட் குணதிலக்க ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

puthinam
Reply


Messages In This Thread
புலிகளை இராணுவ ரீதியாக ஒடுக்கமுடியாது - by sri - 09-10-2005, 08:41 AM
[No subject] - by kurukaalapoovan - 09-10-2005, 09:43 AM
[No subject] - by Mathan - 09-10-2005, 10:31 AM
[No subject] - by MUGATHTHAR - 09-10-2005, 10:34 AM
[No subject] - by kurukaalapoovan - 09-10-2005, 10:43 AM
[No subject] - by kurukaalapoovan - 10-09-2005, 12:43 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)