Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அரசியல்துறை போராளிகளை அழைத்துவரக் கோரிமக்கள் முறைப்பாடு
#1
சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளிலிருந்து வெளியேறிய விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் போராளிகளை மீள அழைத்துவரக் கோரி போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவிடம் மன்னார் மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.


மன்னார், பேசாலை மீனவர் அமைப்புகளின் 12 பேர் கொண்ட பிரதிநிதிகள், வர்த்தகர்கள், விவசாயிகள் அமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு நேற்று வெள்ளிக்கிழமை மன்னாரில் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவைச் சந்தித்தது.

இச்சந்திப்பு ஒரு மணிநேரம் நீடித்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் போராளிகள் வெளியேறியதால் தாங்கள் அச்சத்துடன் வாழ்வதாகவும், நிராயுதபாணிகளாக அரசியல் பணி மேற்கொள்ளும் விடுதலைப் புலிகளுக்கு உரிய பாதுகாப்பு அளித்து மீள அழைத்துவருமாறும் இச்சந்திப்பின் போது கோரிக்கை மனு கையளிக்கப்பட்டது.

மக்களின் கோரிக்கை குறித்து கண்காணிப்புக் குழு நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்வதாக கண்காணிப்புக் குழு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
<span style='font-size:14pt;line-height:100%'>PUTHINAM</span>
Reply


Messages In This Thread
அரசியல்துறை போராளிகளை அழைத்துவரக் கோரிமக்கள் முறைப்பாடு - by mayooran - 09-10-2005, 04:20 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)