Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிங்கப்பூர் அதிபராக ராமநாதன் பதவி ஏற்பு
#10
நீங்கள் கூறுவது சரி ஜுட்.
காரணம் சிங்கப்புூர் நாட்டை உருவாக்கிய போது
அதை இன்றைய நிலைக்கு பொருளாதார வளத்தாலும் கல்வி மற்றும் அனைத்து வளங்களாலும்
கொண்டு வந்த மதிப்பிற்குரிய லீ குவான்யு அவர்களது
தீர்க தரிசனமே இன்றைய வளம் கொழிக்கும் லஞ்ச ஊழல்கள் அன்ற இந்த சிறு சிங்கப்புூர்.

சிங்கப்புூர்
உருவான போது எந்த விகிதாசாரத்தில் அங்கு மக்கள் வாழ்ந்து வாழ்ந்தார்களோ அதே விகிதாசாரம் அதிகரிக்காமல் இருப்பதற்கான திட்டத்தை வகுத்தார்.

மிக சிறிய ஒரு நாடு.
குடிக்கும் தண்ணி கூட மலேசியாவிலிருந்தே பெறப்பட்டது.

1965ம் ஆண்டு சிங்கப்புூல் இருந்த இனங்களின் மக்கள் தொகை விகிதாசாரப்படி என்றும் சிங்கப்புூர் இருக்க வேண்டும்.

அடுத்து மக்கள் ஒன்றாக ஒரு குழுவாக எங்காவது தனித்து வாழாமல் இதே விகிதாசாரப்படி வீட்டுக் குடி மனைகளிலும் பரந்து பட்டு கலந்தே வாழ வேண்டும்.

இது இன-மத பேதங்களையோ கலவரங்களையோ ஏற்படுத்த வழி வகுக்காது.

தவிரவும் மல்ட்டி கல்சரல் எனப்படும் கலந்து வாழும் இனமாக மக்கள் வாழ வேண்டும் என்பதே மதிப்பிற்குரிய லீ குவான்யு அவர்களது கனவாக இருந்தது.

அன்றைய கால கட்டத்தில் சீனர்-மலாயர் மற்றும் இந்தியர்களே பெரும் பான்மையாக இருந்தனர்.
இலங்கை கூட இந்து சமுத்திரத்தின் பிராந்தியமாக கருதப்பட்டதால் இலங்கையரும், இந்தியர்களாகவே கருதப்பட்டனர்.
இந்தியர்களில் கூட தமிழர்கள் அதிக விகிதாசாரமாக இருந்ததால் தமிழ் சிங்கப்புூர் ஆட்சி மொழிகளுள் ஒன்றாக கருத்தில் கொள்ளப்பட்டது.

அது போலவே பாடசாலைகளிலும் இந்திய மொழிகளில் தமிழ் மட்டுமே பாட மொழியாக இருக்கிறது.

இன்றும் சிங்கப்புூரில் இருக்கும் இன விகிதாசார அடிப்படை விகிதாசாரத்தில் மேற் கூறப்பட்ட இனத்தின் விகிதாசாரம் குறையும் போது அந்த இனத்தைச் சேர்ந்த கல்வியறிவுள்ளவர்களை சீன-மலே-இந்திய மொழி பேசும் நாடுகளில் இருந்து வந்து பணிபுரிவோரை அல்லது மணம் செய்வோரை
சிங்கப்புூர் ஏற்று இன விகிதாசாரத்தை சமப்படுத்தி வருகிறது.

ஏனைய இனத்தவர்களாகக் கருதப்படும் யுரேசியர்கள் அதற்கடுத்ததாகவே கருத்தில் கொள்ளப்படுகிறார்கள்.

[b]<span style='color:green'>இதுவே இன்றைய அமைதியான சிங்கப்புூர் இருப்பதற்கு வழிவகுத்துள்ளது.

Quote:குறிப்பு:- பொதுவாக நீங்கள் சிங்கை போலீசாரின் ரோந்து நடவடிக்கையைப் பார்த்தால்,
சீன-மலாய மற்றும் இந்திய இனத்திலான கூட்டாகவேதான் போலீசார் எங்காவது செல்வதை பார்க்க முடியும்.

ஒரு இனத்தவன் மற்றுமொரு இனத்தவனால் பாதிக்கப்படக் கூடாதென்பதைக் கருத்தில் கொண்டு உருவான திட்டமே இது.

ஒரு தமிழன் அல்லது இந்தியன் ஒரு சீனனாலோ அல்லது மலாய்க்காரனாலோ பாதிக்கப் படாமல் இருப்பதற்கு காரணம் அங்கு ஒரு தமிழன் அல்லது இந்தியன் இருப்பதுதான்.
இது போலவே ஏனைய இனத்தவருக்கும் அவரவர் இனத்தைச் சார்ந்த போலீசார் இருப்பதால் அவர்களும் பாதிப்படைவதில்லை.
</span>

[b]<span style='font-size:25pt;line-height:100%'>மன்சுலா சிங்கப்புூரா</span>

http://reenic.utexas.edu/asnic/countries/s...re-History.html
Reply


Messages In This Thread
[No subject] - by ஊமை - 09-03-2005, 08:02 PM
[No subject] - by கீதா - 09-03-2005, 08:11 PM
[No subject] - by Vasampu - 09-04-2005, 12:25 AM
[No subject] - by Rasikai - 09-04-2005, 11:47 AM
[No subject] - by KULAKADDAN - 09-04-2005, 02:21 PM
[No subject] - by Mathan - 09-05-2005, 04:16 AM
[No subject] - by AJeevan - 09-08-2005, 11:44 PM
[No subject] - by Jude - 09-09-2005, 04:58 AM
[No subject] - by AJeevan - 09-09-2005, 06:15 PM
[No subject] - by Mathan - 09-11-2005, 10:49 AM
[No subject] - by Mathuran - 09-11-2005, 10:54 AM
[No subject] - by AJeevan - 09-11-2005, 12:00 PM
[No subject] - by Mathan - 09-11-2005, 05:53 PM
[No subject] - by narathar - 09-11-2005, 06:47 PM
[No subject] - by AJeevan - 10-16-2005, 07:48 PM
[No subject] - by RaMa - 10-17-2005, 04:44 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)