Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிங்கள அமைப்பின் விருந்தினராக ஆனந்தசங்கரி!
#1
[வெள்ளிக்கிழமை, 9 செப்ரெம்பர் 2005, 19:52 ஈழம்] [எ.அபூர்வா]
சிங்கள அமைப்பு ஒன்று நடாத்தும் கதிர்காமரின் இரங்கல் கூட்டத்திற்கான பிரதம விருந்தினராக ஆனந்தசங்கரி கலந்து கொள்கிறார்.


கதிர்காமரின் கொலையை யார் செய்தார்கள் என்பது தொடர்பாக பலத்த சந்தேகங்கள் நிலவி வரும் இவ்வேளையில், இக்கொலையை விடுதலைப் புலிகளே செய்தார்கள் என்று குற்றஞ்சாட்டி மேற்படி அமைப்பு கனடாவில் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்திலேயே ஆனந்தசங்கரி பிரதம விருந்தினராக கலந்து கொள்கிறார்.

கொழும்பு சிங்களப் பத்திரிகைகளும், ஆங்கிலப் பத்திரிகைகளும் கதிர்காமரின் கொலை இடம்பெற்ற விதம், அதற்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் அச்சமயத்தில் அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு என்பன பற்றிய சந்தேகங்களை வெளியிட்டு கதிர்காமரின் கொலை தொடர்பாக நியாயமான சந்தேகங்களை வெளியிட்டுள்ளன.

குறிப்பாக கதிர்காமரை சுட்ட துப்பாக்கியானது அரச படைகளும், கொழும்புப பாதாள உலகக் குழுக்களும் பாவனையில் வைத்துள்ள ஒருவகைத் துப்பாக்கியே என்ற என்ற உண்மை இரசாயனப் பகுப்பாய்வு முடிவுகளின் போது வெளியானதும்,

சம்பவம் நடந்த சமயம் ஐந்து பாதுகாவலர்களே அவ்விடத்தில் இருந்ததும், கதிர்காமர் சுடப்பட்ட பின்னரான சுமார் மூன்று மணித்தியாலங்களாக வீதித்தடைகளோ அல்லது தேடுதல்களோ மேற்கொள்ளப்படவில்லையென்பதும் உள்ளிட,

பல புதிய தகவல்களை வெளியிட்டு வரும் கொழும்புப் பத்திரிகைகள் கதிர்காமரின் கொலை தொடர்பான சந்தேகங்களை இப்போதும் முக்கியத்துவப்படுத்தி வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையிலேயே, இக்கொலையை விடுதலைப் புலிகளே செய்தார்கள் என்ற வகையில் மேற்படி சிங்கள அமைப்பு தான் வைக்கும் அஞ்சலிக்கூட்டத்திற்கு ஆனந்தசங்கரியை பிரதம விருந்தினராக அழைத்துள்ளது.
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
சிங்கள அமைப்பின் விருந்தினராக ஆனந்தசங்கரி! - by வினித் - 09-09-2005, 04:12 PM
[No subject] - by ஜெயதேவன் - 09-09-2005, 04:56 PM
[No subject] - by கறுணா - 09-09-2005, 08:29 PM
[No subject] - by வினித் - 09-09-2005, 08:31 PM
[No subject] - by cannon - 09-10-2005, 10:49 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)