09-09-2005, 10:57 AM
அக்கரை
எம்மின மக்கள் இங்கு படும்பாடு
வேற்ரொரு மக்கள் பட்டதில்லை!
பாடுபட்டு உழைத்த மக்கள் எல்லாம்
இங்கு படாத பாடுபடுகின்றனர்!
சொகுசு வாழ்வு வாழ வந்த மக்கள்
கொசு வாழ்வு வாழுகின்றனர்!
ஒடுங்க ஒரு இடமில்லாது
ஓடித்திரிகின்றனர் வீதியிலே!
வீடு வேலை என்று ஓடிகின்றனர்
இவர் ஓட்டம் எதுவரை!
உயிர் ஓட்டம் உள்ளவரை
அலுத்துவிட்டது வெளிநாடு!
இவர் இனி சொர்க்கமென கருதுவது
இவர் தம் தாய் நாடே!
அக்கரைக்கு இக்கரை பச்சை
என ஓடிவந்தவர்க்கு
இப்போது அக்கரை
பச்சையாகத் தெரிகின்றது.
எம்மின மக்கள் இங்கு படும்பாடு
வேற்ரொரு மக்கள் பட்டதில்லை!
பாடுபட்டு உழைத்த மக்கள் எல்லாம்
இங்கு படாத பாடுபடுகின்றனர்!
சொகுசு வாழ்வு வாழ வந்த மக்கள்
கொசு வாழ்வு வாழுகின்றனர்!
ஒடுங்க ஒரு இடமில்லாது
ஓடித்திரிகின்றனர் வீதியிலே!
வீடு வேலை என்று ஓடிகின்றனர்
இவர் ஓட்டம் எதுவரை!
உயிர் ஓட்டம் உள்ளவரை
அலுத்துவிட்டது வெளிநாடு!
இவர் இனி சொர்க்கமென கருதுவது
இவர் தம் தாய் நாடே!
அக்கரைக்கு இக்கரை பச்சை
என ஓடிவந்தவர்க்கு
இப்போது அக்கரை
பச்சையாகத் தெரிகின்றது.
.
.
.

