09-09-2005, 08:24 AM
preethi Wrote:இங்கு என்னுடைய நோக்கம் யாரின் மனதையும் நோகடிப்பதல்ல. எனக்கு எது சரியாகப் படுகிறதோ அதை சொல்லுகிறேன். எல்லோரும் என்னுடைய கருத்தையுடையவர்களாக இருப்பார்கள் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை. என்னுடைய எதிர்பார்ப்பெல்லாம் குறைந்த பட்சம் ஈழத்தமிழர்கள், பிராமணருக்கும், தமிழருக்குமிடையிலான, இந்த ஒட்டுண்ணிக்கும், கிருமிகாவிக்குமுள்ள உறவை கொஞ்சம் கூர்ந்து பார்க்க மாட்டார்களா என்பது தான்.....................
இதுக்கு மேல கதை ஓண்டு வேற சொன்னீங்கள்.. சுவையாய் இருந்தது..(கிழவிக்கதை தான்) அது சரி ஈழத்தில இருந்து எந்தப் பாப்பணன் கனடாவந்து கோயில் கட்டினான்.... கட்டினது பார்ப்பணன் இல்லதவை... அதுசரி 5$ க்கு அரிச்சனைச் சிட்டை காசு ஐயருக்கு போகுதெண்டு யார் சொன்னவை உங்களுக்கு... அந்தக் காசுக்காகத்தான் கோயில் கட்டிவைச்சிருக்கினம் தமிழர்... இதில எங்கை அய்யா வந்தான் பார்ப்பணன்... தமிழரை அண்டிப்பிளைப்பவர்தான் அவர்கள் அதுக்காக இப்பிடியா????...
இப்பெல்லாம் வேதப்பாடசாலைகள பிராமணர் இல்லதவருக்கும் வேதங்கள் சொல்லிக் கொடுக்குது... வேண்டுமானால் சொல்லுங்கோ விலாசம் இந்தியா ஈழம் எங்கு வேணுமெண்டாலும் தாறன்.. நீங்களே பூசையும் செய்யலாம் உங்கட கோயில்தானே.... :wink:
கிழவியை ஏசியது தவறுதான் அது தனிமனிதனின் தவறு அதுகாக ஒரு இனத்தை துவேசிக்கிறதும் தவறுதான்...
அது தவிர கோயிகளில இங்கிலண்டில இல்ல கனடாவில இருக்கிற ஐயர்களில 90% வீதமானவர் இந்தியர்.. நீங்கள் குடுக்கிற 600$ சம்பளத்தை நம்பி இருக்கிற தேவை ஈழத்து ஐயனுக்கு இல்லை.. காரணம் மேற்கு நாடுகளின் மதவுரிமைச்சட்டம்.. மதத்தலைவர் அல்லது பூசகர்களுக்கு வளங்குகிறது... இங்குவந்து தஞ்சம் கோரினால் ஐயர் அல்லது பூசகர் என்பதற்காக வதிவுரிமை சலுகைகள்.. வதிவிடம் என்பதெல்லாம் வளங்கி வாழ வைக்கிறார்கள்..
குழப்பமாயிருந்தால் இங்கு சட்டத்தரணிகள்.. குருவிகள், நித்திலா விடம் கேழுங்கோ....
[b]கள உறவுகள் மன்னிக்கவும்
ஐயர் மாரிற்கு தாயகத்தில பற்றில்ல எண்டு எந்த ஆதாரத்தில சொல்லுறீங்கள்...... தேசியத்தலைவரை மதிக்கவில்லையா???? பிற்போக்குத்தனமாய் வருடப்பிறப்பன்று தலைவரின் குறிப்பை எடுத்துப் பார்த்து தமிழரின் எதிர்காலம் பற்றி பந்தி பந்தியாய் எழுதுவினமே அதுவா ???
அதை விட நிறைய மாவீரரை என்னால் சொல்ல முடியும்... அதில் கரும்புலிகளும் அடங்கும் (உங்களின் விதண்டா வாதத்துக்கு அவர்கள் வேண்டாம்) இவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா??? இல்லை நாட்டில் பற்றில்லாமலா இருக்கிறார்கள்... முடிந்தால் ஒரு ஐயரின் பெயர் சொல்லுங்கள் துரோகியாய் இருக்கிறார் அல்லது காட்டிக்குடுத்தார் எண்டு...
::

