09-09-2005, 04:58 AM
Mathan Wrote:இரண்டாவது முறைவாக அதிபராக பதவியேற்றுள்ள எஸ்.ஆர்.நாதனுக்கு வாழ்த்துக்கள். சிங்கப்பூர் அதிபர் பதவி இலங்கை அதிபர் பதவி போல அல்லாமல் ஒரு பெயரளவிலான பொறுப்பாக இருந்தாலும் கூட ஒரு தமிழர் அந்த பதவியில் இருப்பதில் மகிழ்ச்சி தான். அது தவிர சிங்கப்பூரில் கல்வி உட்பட பல அமைச்சர் பதவிகளில் தமிழர்கள் உள்ளனர்.
சிங்கப்புூர்தமிழர்கள் தம்மை தமிழர் என்று சொல்வதில்லை. இந்தியர்கள் என்றே சொல்கிறார்கள். காரணம் சிங்கப்புூர் அரசு அவ்வாறு தான் அவர்களை வகைப்படுத்தி வைத்திருக்கிறது. ஆனால் தமிழ் அரச மொழிகளில் ஒன்றாக நன்கு பயன்படுத்தப்படுகிறது.
சிங்கப்புூரில் பெரும்பான்மை சீனர்கள். சிறுபான்மை மலே. இந்தியர்கள் இரண்டாவது சிறுபான்மை. இலங்கையில் முஸ்லிம்கள் போல. இலங்கை முஸ்லிம்கள் எப்படி சிங்களவருடன் சேர்ந்து தமிழருக்கு எதிராக செயற்படுவதன் மூலம் அரசியல் இலாபம் பெறுகிறார்களோ அவ்வாறே இந்தியர்களும் சீனர்களுடன் சேர்ந்து அரசியல் இலாபம் பெறுகிறார்கள். ஆக மலே இனத்தவர் சிங்கப்புூர் இந்தியர்களை, இலங்கைத்தமிழர் முஸ்லிம்களை பார்ப்பது போல சந்தேகமாகவே பார்ப்பார்கள்.
சிங்கப்புூரில் இலங்கையர் நான்காவது இரகம்.அதாவது சீனர்கள், மலேக்கள், இந்தியர்கள் அல்லாதோர். சிங்கப்புூரில் குடியேற அல்லது பல்கலைக்கழக அனுமதி அல்லது அப்பாட்மென்றில் வீடு வாங்க போனால் நாட்டின் இனவிகிதாசாரம் மாறாத படி தான் அனுமதி வழங்கப்படும். இந்த இனவிகிதாசார ஒதுக்கீடு (சிறிலங்காவின் தரப்படுத்தல் போன்றது) செய்யப்படும் போது இலங்கையரும் அமெரிக்கரும் ஒரே இரகம். அதாவது சீனர்கள், மலேக்கள், இந்தியர் அல்லாத இரகம்.

