11-05-2003, 04:14 PM
mohamed Wrote:தயாரிப்பாளர் நிச்சயமாக இந்தியா தான்! அமரிக்கா தனது அதிருப்திளை வெளியிட்டள்ளது. புலிகளின் இடைக்கால தீர்வுத்திட்டத்தையும் வரவேற்றுள்ளது. 1958 பின் 77 பின் 83 பின் 2004??? நினைக்கவே பயமாக உள்ளது. மிண்டும் ஒரு யத்தமா? மீண்டும் ஒரு கலவரமா? மீண்டும் இனவாதாமா? சந்திரிக்காவின் ஸ்ரண்ட கொஞசம் கூடித்தான் போட்டுது. ஆனால் அதன் விளைவுகள் மிகப்பயங்கரமாக முடியலாம்!!!!இவையெல்லாவற்றுக்கும் விதையிட்டவர் JR மாமா. ஆகவே சந்திரிகாவை நோக ரணிலால் முடியவில்லை.
இதை வாய்க்குள் சிரிப்பை அடக்க முடியாமல் கொழும்பு பல்கலைக் கழக அரசியல் பகுதியின்கலாநிதி லக்சிரி பெர்ணாந்து பேட்டியின் போது பதிலாக
AJeevan Wrote:[size=15]பாராளுமன்ற சட்ட வரையறைகளின் 44வது சட்ட விதியின் 2வது சரத்தின்படிதான் இவ் அமைச்சர்களின் பதவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.என்று சொன்னார்.
[size=15][u]பாராளுமன்ற சட்ட வரையறைகளின் 44வது சட்ட விதியின் 1வது சரத்தின்படி இவ் அமைச்சர்களின் பதவிகள் பறிமுதல் செய்யப்படிருந்தால் இவ் அமைச்சர்கள் தொடர்ந்து பதவிவகிக்கவே முடியாது என்றார்.
மேற்படி 2வது சரத்து நாட்டுக்கு அச்சுறத்துல் ஒன்று ஏற்படும் வேளைகளில் அதிபரால் பயன்படும் விதத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் விளக்கமளித்தார்.
தற்போதும் கூட மேற்கண்ட அமைச்சர்கள் கபினட் அமைச்சர் பதவிகளிலும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள பதவிகள் தவிர்ந்த, ஏனைய அமைச்சு பதவிகளிலும் பதவியில் இருக்கிறரர்கள்.
உதாரணமாக: பாக்கீர் மாக்கர் அவர்களிடமிருந்த செய்தித் தொடர்புத்துறை மாத்திரமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவரது தபால்-தந்தி தொடர்புக்கான அமைச்சு தொடர்ந்தும் அவர் வசமேயுள்ளது............
இவை ஐ.தே.கட்சியின் நலனுக்காக ரணிலின் மாமாவால் வரையப்பட்ட கோடுதான்.அவர் எந்தக் கட்சி பதவிக்கு வந்தாலும் அதிக வாக்காளர்களைக் கொண்ட ஐ.தே.கட்சியின் ஒருவர் அதிபர் பதவியில் இருக்கும்படி யாப்பை உருவாக்கினார்.
பிரேமதாசாவின் மரணத்துக்கு பிறகு சிதறுண்ட ஐ.தே.கட்சியும், வாக்குகளும் சிதறுண்ட போது, அதிபர் முறையை ரத்து செய்வதாக ஆட்சிக்கு வந்த சந்திரிகாவே தமது நோக்கத்தை மாற்றிக் கொண்டு தாமே அதிபராக முடி தரித்துக் கொண்டார்.
ரணில் கூட இதே கொள்கையைத்தான் பின்பற்ற முயல்வார் என்பது உறுதி.ஆட்சிக்கு வரும் வரை ஒவ்வொருவரும் வாக்குறிகளைக் கொடுப்பது ஒன்றும் புதுமையல்ல.
செய்தித் தொடர்பு ஊடகங்களில் தலைமைகளில் மாற்றங்கள் நிகழ்வுறும் போது, இன்னும் சில நிமிடங்களில் அமெரிக்க அதிபரை ரணில் சந்திக்கவிருக்கிறார்.ரணில் செவ்வாய் கிழமை இலங்கை திரும்புகிறார்.
செய்தித் தொடர்பு ஊடகங்களில் தலைமைகளில் புதிய மாற்றங்கள்:
ரூபவாஹினிக்கு :
ஹரின் பீரிஸ்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டஸ்தாபனம்:
ஹட்சன் சமரசிங்ஹ
ITN :
நியுட்டன் குணரத்ண
லேக்ஹவுஸ்:
சேகரால் குணசேகர
அத்துடன் லேக்ஹவுஸ் நிறுவனத்துக்குள் புகுந்த சந்திரிகாவின் குழுவினர், தலைப்பு செய்திகளையும்,ஆசிரியர் தலையங்கத்தையும், G.L.பீரிஸ் அவர்களது செய்தியையும் மாற்றி லக்ஸ்மன் கதிர்காமரின் செய்தியை பிரசுரிக்குமாறு பணித்துள்ளனர்.
லேக்ஹவுஸின் ஆசிரியர் தலையங்கத்தில் இன்றைய கால கட்ட நிலைபற்றி வரையப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே கதிர்காமர் ஊடாக நாட்டில் ஒரு யுத்தம் உருவாக வழியமைக்கப்பட மாட்டாது என அதிபர் சந்திரிகா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் 124 பேர் பிரதமர் ரணிலின் அரசுக்கு ஆதரவாக கையெழுத்திட்டுள்ளதாக ஐ.தே.கட்சியின் மகின்ந்த சமரசிங்க தெரிவித்தார்.
இவர்களில் ஐ.தே.க,சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ,லங்கா காங்கிரஸ், மலையக கட்சிகள், மற்றும் தமிழ் அமைப்புகள் அடங்கும்.
பாராளுமன்ற இடைநிறுத்தம் காரணமாக வெளியிட இருந்த வரவு - செலவு அறிக்கையில் 4 இலக்க எண்ணிக்கை சம்பள முறையொன்றைக் கொண்டு வர இருந்ததாகவும், விவாசாயிகளுக்கான புதிய கொடுப்பனவுகள் இணைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிகிறது.
வட - கிழக்கு மக்களும் விடுதலைப்புலிகளும் நம்பிக்கை இழந்து போயுள்ளதை அவர்களது முகங்கள் காட்டுவதாக சங்கநாயக விமலசார பிக்குவானவர் விசனத்துடனும் வேதனையோடும் BBCக்கு கருத்து தெரிவித்தார்.
இவை இப்படியிருக்க கொழும்பு பங்குச் சந்தை 5 முதல் 15 சத விழுக்காடுகள் வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றும் நேற்றுமான இரு தினங்கள் மட்டும் 67 பிலியன் ருபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது வருடமொன்றுக்கான இலங்கை பாதுகாப்பு செலவுக்கு அதிகமான தொகை என்பது குறிப்பிடத்தக்கது. தவிரவும் இலங்கையில் முதலீடு செய்யத் தலைப்பட்ட பல நிறுவனங்கள் ஸ்தீரமற்ற அரசியல் மாற்றங்களால் யோசிக்கவும்,பின்வாங்கவும் தொடங்கியுள்ளனர்.மீண்டும் பழைய நிலையை உருவாகுவதற்கு வெகு காலமெடுக்கும் என்றே கருதப்படுகிறது.
இந்தியாவும், அமெரிக்காவும் பேச்சு வார்த்தைகள் முலம் சரி செய்யலாம் என கூறினும்,
இந்தியா ஒரு போதும் பிரிவினையை ஆதரிக்காது.இலங்கை பிளவுபட்டால் ,அதுவே இந்தியா பிளவுபட எதிர்காலத்தில் ஒரு முன் உதாரணமாக அமையலாம் என்பது அவர்களது தீர்க்கதரிசனம்.
லண்டன் கிரிகட் குழுவினரது பயணம் குறிப்பிட்டபடி நடைபெறும்.மாற்றம் எதுவுமில்லை.
விடுதலைப்புலிகளின் வெளிப்பகுதி காரியாலங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், அவசர அவசரமாக முக்கிமானவர்கள் கிளிநொச்சியில் ஒரு சந்திப்பில் கலந்து கொள்ளச் சென்றுள்ளதாகவும் தெரிகிறது.
யாழ்பாணத்தில் ஒருவித மந்த நிலையும் , அதிர்ச்சியும் காணப்படுவதால் யாழ்பாணத்துக்குச் சென்ற பலர் விமான சீட்டுகளைப் பெறுவதில் தலைப்பட்டுள்ளனர்.
எது எப்படியோ, சமாதானத்துக்கு முட்டுக் கட்டை போட்டுள்ள காரணத்தால், ரணில் அரசுக்கும் , விடுதலைப்புலிகளுக்கும் உலக அரங்கில் நல்லதொரு பெயர் கிடைக்க சந்திரிகா வழி செய்து விட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

