11-05-2003, 01:35 PM
suppiah suthanthararajah Wrote:ஜீவா!ஜீவனுள்ள உஙகள் குறும் படம் பார்த்தேன்.நன்றி அன்பு சுப்பையா,
புலம் பெயர் ஜீவகன்களின் அவலஙகள் சித்தரிக்கப்பட்டுள்ளன
அத்தனையும் யதார்த்தமானவை-பாராட்டுக்கள்-உஙகள்
ஆக்கஙக்கள் பற்றி-ஆர்வம்பற்றி;
மகா-வாசுதன்(சுவிஸ்) கூறியுள்ளார்.
வரவேற்புக்கு நன்றி-சுதத்திரன்
:roll:
உங்கள் எழுத்துக்கள் நீங்கள் வாழ்வது கனடா என அடையாளம் காட்டுகிறது.
மகா-வாசு(தேவன்)-சுவிஸ் , கலைக்காகவும் இசைக்காகவும் எண்ணற்ற இழப்புகளைச் செய்தவர்கள்.
நேர்மையான நண்பர்கள்...............
இவர்கள் சுவிஸில் மேடையேறாத இடமேயில்லை எனலாம். அன்றைய காலகட்டத்தில் முன்னணி இசைக்குழு இவர்களுடயதுதான்.
நான் எது செய்தாலும் ஏசவும்,விமர்சிக்கவும்,பாராட்டவும் தயங்காத நல்லுறவுகள்.வெளியாரிடம் என்னை விட்டக் கொடுக்காதவர்கள்.
இவர்களது வார்த்தைகள் இதயத்திலிருந்து வரும்.நான் ஒருவகையில் இவர்களது சகோதரன் போன்றவன்.
கனடாவில் இருக்கும் உறவினருக்கு என் அன்பை தெரிவியுங்கள்.
நட்புடன் உங்கள்
அஜீவன்

