09-07-2005, 09:25 PM
இருண்ட காலம் - சிறுகுறிப்பு வரைக.
Thursday, March 31, 2005
பழக்கத்தில் இருக்கும் நமது வார்த்தைகளோடு நாம் கேள்விகள் இன்றிப் பழகிவிட்டொம். ஒரு வார்த்தை, ஒருமுறை நம்மைச்சேர்ந்தபின் அது நம்முடைய வார்த்தையாகிறது. அல்லது நம்முடைய ஒரு கேள்வியைக் கொடுத்து ஒரு வார்த்தையை வாங்குகிறோம். அது பின் நமது சொந்தப் பொருளாகிறது. அதை கீறல் விழாமல் பாதுகாக்கிறோம். அது உடைய நேரிடும் போது வருந்துகிறோம். உடைந்துவிடுமோ என்று பயப்படுகிறோம். எனவே நமது வார்த்தையை பயத்தைச் சுற்றி பாதுகாக்கிறோம். அந்த வார்த்தை அதனால் துணியில் சுற்றப்பட்ட வாளைப்போல மொண்னையாக இருக்கிறது.
இருண்ட காலம் என்ற சொற்பிரயோகம் பொதுவாக வரலாற்று அறிஞர்களால் ஒரு தேசத்தின் வரலாற்றின் சில பகுதிகளைக் குறிப்பிடப் பயன்படுகிறது. இருண்ட காலத்தில் பெரியசெய்திகளோ, பெரிய வரலாற்று ஆதாரங்களோ கிடைக்காததுமட்டுமல்ல, நாம் இன்றைக்கு புரிந்துகொள்கிற, பாராட்டுகிற, கொண்டாடுகிற மாதிரியான நம்பிக்கைகள், வழக்குகள் இல்லாததும் அந்தக் காலப்பகுதிகளை சரியாக புரிந்துகொள்வதில் சிரமங்களை ஏற்படுத்துகிறது.
தமிழக வரலாற்றில் இருண்ட காலம் என்று சொல்லப்படுகிற காலம் பேரரசுகள் உதயமாகிற காலத்துக்கு முந்திய காலப்பகுதி. வீரமும், போரும், மானமும், பாடாண்தினையின் ஒருபகுதியாய் இருந்தது. மூதாதையர்கள் தெய்வங்களாகவும், வாழ்க்கை ஒரு கொண்டாட்டமாகவும் பல பழங்குடியினக்கூறுகளைக் கொண்டிருந்தது. சங்கப்பாடல்களில் இருந்து இதை அறியலாம். புலாலையும், கள்ளையும் பாணனுடன் பகிர்ந்துகொள்ளும் குறுநில மன்னனை புகழ்கிறாள் அவ்வை. வாழ்வின் அறங்கள் எளியவை; நேர்மையானவை. குற்ற உணர்ச்சிக்கு வழிகோலும் உடலின்ப மறுப்பும், வன்கொலையும், அதிகாரத்தை முன் வைத்த போரும் அப்போது பெரிய அளவில் இல்லை. அப்போது பரவத்தொடங்கிய சமணமும் பெளத்தமும் கொல்லாமை, புலாலுண்ணாமை, என்று தொடங்கி திருமணத்தை முதன்மைப்படுத்தத் தொடங்கி கற்பு- பரத்தைத்தன்மையை முன்வைக்கத்தொடங்கின. ஏனெனில் துறவிகளைப் பேண பாரம்பரிய வழக்குகளை ஏற்றுக்கொண்ட குடும்பங்களும், அமைப்புகளும் தேவையாயிருந்தன. அப்போதுதான் திருக்குறள் முதலான அறநூல்களும், சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட ஐம்பெருங்காப்பியங்களும் தோன்றின. அப்பொழுதை இருண்டகாலம் என்பது பேரரசுகளின் காலத்தை ஒப்புநோக்கியே. இப்பேரரசுகள் உருவாகின்ற காலத்தில் தான் சாதியமைப்பு இறுகத்தொடங்கி நிறுவனமயமாக்கம் வர்ணாஸ்ரமத்தின் உதவியால் வலுப்படுத்தப்பட்டது. குறுநில மன்னர்கள், குழுக்கள், இவையெல்லாம் ஒன்று அழிக்கப்பட்டன அல்லது பேரரசுகளின் ஆளுமையை ஏற்றுக்கொண்டு பகுதிகளாயின. குன்றுகளின் தலைவர்கள் அழிக்கப்பட்டு அரசுகள் நதிக்கரைகளில் நிறுவப்பட்டன. இத்தகைய நிறுவனமயமாக்கத்துக்கு வருணாஸ்ரமம் ஏற்படுத்தும் சமூக படிநிலையமைப்பைச் செய்வது மிக அவசியமானது; பலனளிப்பது என்பதை அதிகாரத்தை விஸ்தரிக்க விழைந்த மன்னர்களுக்கும் புரிந்துபோனது. அதைத் திறம்படச் செய்வதற்காக பெரிய கோயில்கள், வேதக்கல்வி, இறையிலி நிலங்கள், இவையெல்லாம் உண்டாயின. இந்த வகை வாழ்வியலை முன்னிருத்திய பக்தி இயக்கங்கள் பேரரசர்களை (பாண்டிய, பல்லவ, சோழ) எளிதில் ஈர்த்தன. பெருவெற்றிகளையும் போரையும் ஊக்குவிக்காத சமண, பெளத்தமதங்கள் பேரரசுருவாக்கங்களுக்கு துணைபுரிவதாக இல்லை. ஆனால் இந்த வேதவழியை முன்னிருத்திய சைவ, வைணவ மதங்கள் மன்னனைக் கடவுளுக்கு இணையாக்கினர், சூரிய வம்சம், உலகளந்தான் என்றெல்லாம் மெய்கீர்த்தியும், புகழ் மாலைகளும் எழுதப்பட்டன. பெரும் யாகங்களும், பிற தேசங்களை, மக்களை கொள்ளையடித்த செல்வங்களும், கடத்தி வரப்பட்டு, பொருட்பெண்டீராக்கப்பட்ட அயல்தேச பெண்களும், பெரும் ஆலயங்களும், தலபுராணங்களும், விழாக்கூறுகளும், குற்ற உணர்வும், பக்தியும், அளவற்ற கருணையும், அதிகாரம் கோலோச்சும் மடங்களும், சமயாச்சாரியார்களும், பத்தினிகளும், பத்தினிகளை விஞ்சிய பக்தைகளும், தாசிகளும், சாதியமைப்பும், பரந்து விரிந்த வேளாண்மையும், மலைக்கடவுளான செவ்வேள் குமரன் முருகனின் சைவ மதப்பிணைப்பும், ஊர்ப்பெயர்கள் கூட சம்ஸ்கிருத மயமாக்கப்படும் மேற்குடியாக்கமும், என்று மிக நுட்பமான நிறுவனமயாக்கல் நடந்து வந்தது. இதை எவ்வளவு செம்மையாகச் செய்கிறார்களோ அவ்வளவு தூரம் அது பேரரசாகியது. சோழப்பேரரசு, மற்ற இரண்டு அரசுகளைவிட பலம் பொருந்தியதாகவும், படை வலிவோடும், போரிடும் திறனோடும், பெரும் ஆலயங்களை பெருமளவில் கொண்டதாகவும் இருந்தது. இவை ஒன்றோடு ஒன்று உட்கலந்தவை. இந்த குணாதிசயங்களை, சமூகக்கூறுகளை எல்லா காலத்திலும் எந்த வல்லரசிலும் (குறிப்பாக இன்றைய அமெரிக்கா உட்பட) காணமுடியும்.
அதேசமயம் இந்த சைவ, வைணவ சமயங்கள் தங்கள் தோற்றுவாய்களான வேதகால வழிமுறைகளுக்கு மாறாக உடலினை மறுக்கும், சமண, பெளத்த சமயக்கூறுகளையும், புலாலின்மை, உடலின்பத்தைக் குற்றப்படுத்துவது, கள்ளுண்ணாமை போன்றவற்றை உள்வாங்கிக் கொண்டன. இதுவும் மிகவும் பரவலாகவும், செல்வாக்கோடும் சமண, பெளத்த மதங்கள் விளங்கின என்பதற்கான சான்றாகக் கொள்ளமுடியும். இப்படியாக பெளத்தமும், சமணமும் நேரடியாக தொடுக்கப்பட்ட தாக்குதலின் மூலம் இந்த மண்ணில் இருந்தே அகற்றப்பட்டன.
http://ntmani.blogspot.com/2005_03_01_ntma...ni_archive.html