09-07-2005, 09:20 PM
http://tamil.sify.com/uyirmmai/mar05/fulls...php?id=13693867
ஏடுகளில் படிந்த இருண்ட காலம்
பிரேம் - ரமேஷ்
நூல்களை அழித்தல் ஒரு வரலாற்று நிகழ்வு. மேற்குலகின் கிறித்துவத் திருச்சபை தனது மேலதிகாரத்தை நிறுவி பிற கிறித்துவப் பிரிவுகளையும், மாற்றுச் சிந்தனை மரபுகளையும் அழித் தொழிப்பதைக் கடமைகளில் ஒன்றாகக்கொண்ட அக்கால கட்டத்தில் நூல்களை எரித்தல் தின நிகழ்வாக மாறியிருந்தது. நூல்களை வைத்திருப்பதே தண்டனைக்குரிய குற்றமாகக்கொள்ளப்பட்டது. டான் குக் úஸôத்தில் நூல்களைப் பரிசோதித்து எரிப்பதைப்பற்றிய அத்தியாயம் மிகப் புகழ்பெற்றது. நூல்கள், நூலகங்கள், நூல்களை வைத்திருந்தவர்கள், வாசிப்பவர்கள் அனைவருக்கும் எரியூட்டல் காத்திருந்தது. எரிக்கப்பட்டவைகளில் இருந்து எஞ்சியவை பிறகு வரலாறாகியிருக்கின்றன. உம்பர்தோ ஈகோவின் ‘ரோஜாவின் பெயர்’ நாவýன் மையக்களம் ஒரு துறவோர் மட நூலகம். அதன் இறுதி நிகழ்வு நூலகத்திற்கு எரியூட்டுதல். எரிக்கப்படுபவை பல ஆயிரக்கணக்கான நூல்கள். நூல்களை எரித்தல் ஒரு வரலாற்று உத்தி, தமிழக வரலாற்றில் இப்படித்தான் நிகழ்ந்தது ஒரு காலகட்டத்தில்.
சமண, பெüத்தச் சுவடிகளின் தரமும் தகுதியும் இரண்டு முறைகளில் சோதிக்கப்பட்டன; நெருப்பில் இடப்பட்டும், ஓடும் நீரில் இடப்பட்டும். தமிழ் அறிவின், அறத்தின் அடையாளமான திருக்குறள் கூட இவ்வாறு நீருக்கும் நெருப்புக்கும் தப்பியே இன்றுவரை நிலைத்திருக்கிறது. தமிழைக் காக்கவும் தமிழர்தம் அறிவைக் காக்கவும் எழுந்த சைவமும் வைணவமும் தமிழின் பல்லாயிரக்கணக்கான நூல்களை நெருப்பில் இட்டன, வெள்ளப்பெருக்கில் இட்டன. இருந்தும் தமிழ்மனம் தனது நினைவுகளுக்குள் சிலவற்றைக் காத்தன. காத்தவற்றில் சிலவே இன்று தமிழ் வரலாற்றின் தடையங்களாக எஞ்சியிருக்கின்றன. ஆனால் எஞ்சுதல் அவ்வளவு எளிமையானதா என்ன?
பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை தமிழர்களின் வரலாறு என்று ஏதும் இருந்திருக்கிறதா என்றால்; விடை இலகுவானது அல்ல. தமிழ் நிலம் மறதியிýருந்து கண்டெடுக்கப்பட்ட ஒரு கனவு நிலம். சங்க இலக்கியத் தொகையும், சில காப்பியங்களும் இல்லையென்றால் தமிழ் வரலாற்று நினைவு என்பது என்ன? பக்தியிலக்கியங்களும், கம்ப ராமாயணமும், சில சிற்றிலக்கியங்களும் தமிழ் நினைவைக் கட்டமைத்து நின்றவை. இவற்றிýருந்து பெறப்படும் தமிழ் வாழ்வுக் களங்களும், புலங்களும் முற்றிலும் வேறானவை. அன்றைய காலகட்டத்தில் ‘திருக்குறள்’ கூட தீண்டாமைக் குட்பட்ட ஏடுதான் அல்லவா. திணைச் சமூக வாழ்வும், நினைவும் கனவும் இல்லாத ஒரு தமிழ் வரலாறும், சிலப்பதிகார மணி மேகலை இல்லாத தமிழர் அற வரலாறும் எவ்வடிவில் இருந்திருக்கும்? எல்லாம் காலத்தின் விளையாட்டு. நினைவில் எஞ்சியவை வரலாறாகின்றன. வரலாறு மீண்டும் நினைவாக எஞ்சுகிறது. மீந்த சுவடிகளிýருந்து உயிர்த்தெழுந்த நமது தமிழ் நினைவுகளில்தான் எத்தனை எத்தனை சிக்கல்களும் சிடுக்குகளும்.
பேரறிஞர் என்ற சொல்லுக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய உ. வே. சா பற்றி நினைக்கும் போதெல்லாம் வியப்பும் அச்சமும் ஏற்படுகின்றன. உழைப்பும் அர்ப் பணிப்பும் உடைய அந்த மனிதர் ஒரு அதிசய நிகழ்வுதான். வேறு பலரும்கூட அவர் செய்ய நினைத்தவற்றை செய்து கொண்டிருந்தபோதும், அவரால் சில சாத்தியப்பட்டன. சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை என தமிழின் பெரும் மாற்றுத் தடையங்களை மீட்டெடுத்ததின் மூலம் அவரையறியாமலேயே தமிழ் அறிவு மரபின் போக்கையும் இருப்பையும் மாற்றியமைத்த, அந்த நிகழ்வு இன்றும் நாளையும் மிகப்பெரும் முக்கியத்து வமுடையது. ஆனால் இதற்குள்ளும் வரலாற்றின் கொடூர விளையாட்டு நிகழ்ந்து முடிந்திருக்கிறது.
சங்க இலக்கியம் என்ற தொகைகள் உண்மையில் முறைப்படுத்தப்பட்ட சில அறிஞர் குழுக்களால், கல்வி நிறுவனங்களால் தொகுக்கப்பட்டவை. இந்தத் தொகுப்பிற்கு சில ஓழுக்க, அறநெறி நோக்கங்கள் இருந்தன. பெüத்த, சமண அறிஞர்களின் வழிகாட்டுதலால் இந்த நூல்கள் தொகுக்கப்பட்டதால் மக்களின் பல்வேறுபட்ட முரண்கள் சிதைவுகள், கிளைத்தல்கள் இவற்றில் தணிக்கை செய்யப்பட்டன. அதனால்தான் சங்க இலக்கியங்களில் இருந்து தமிழர் வாழ்வின் பல முக்கியக் கூறுகளை இன்றுவரை நம்மால் அறிய முடியாத நிலை இருந்து வருகிறது. தொகுக்கப்பட்ட சில ஆயிரம் பாடல்களுக்கு வெளியே தொகுக்கப்படாமல் ஒதுக்கப்பட்ட பல ஆயிரம் பாடல்கள் மறைந்துபோயின. சான்றோர் கவிதைகள் பன்முகப்பட்ட ஒரு சமூகத் தொகையின் சில கூறுகளை மட்டும்தான் பதிவு செய்யக்கூடும். அவை பெரும் சிறப்பும் அழகும் கொண்டவை. ஆனால் தமிழர் வாழ்வியல் இவற்றுக்குள் மட்டும் அடக்குவது இல்லை. இந்த அடங்காத் தன்மைகளின் அடையாளக் கூறுகளை நாம் ஆய்வு செய்து தடங்காட்ட முடியுமென்றாலும்; அழிந்து போனவை அழிந்துபோனவைதான். பெüத்த, சமண அறப்பற்று இவ்வாறாக தமிழர்தம் விரிவான ஒரு இலக்கியப் பரப்பை, பெருந்திணை மற்றும் புறத்திணைக் களத்தை வரலாற்றிýருந்து அழித்துவிட்டது. தான் செய்வது இன்னதென்று அறியாமலேயே ஆனால் இரண்டாம் முறை, செய்வது தெரிந்தே தமிழ் நூல்கள் சைவத்தாலும் வைணவத்தாலும் அழிக்கப்பட்டன.
அந்தக் காலம் மிகச் சிக்கலானது. பெüத்தமும், சமணமும், மக்கள் சமயங்களாக இருந்தன. பிற சமயங்களும் அவற்றுடன் இணையாக இருந்து வந்திருக்கின்றன. பேரரசுகளின் ஏகாதிபத்திய ஒடுக்கு முறைகளும், பிராமணியத்தின் மனித மறுப்பு வன்முறைகளும் பலம் குறைந்திருந்தன. அறமும், மனித நேயமும், அன்பும் வழிகாட்டு நெறிகளாக இருந்து கொண்டிருந்தன. சாதியக் கொடுமை மற்றும் ஒடுக்குதல் தீவிரம் பெறாமல் உழைக்கும் விவசாய, கைத்தொழில் சமூகம் தனக்குரிய இடத்தைப் பெற்றிருந்தது. போரின் தினசரி வன்முறை குறைந்து இருந்தது. தமிழகத்தில் பிற்காலத்தில் கொடூரமாக வளர்ந்த தீண்டாமை அப்பொழுது இல்லை. சாதிப்பிரிவுகள் இருந்த போதும் பிறகு வந்த சாதி வன்முறை, ஒடுக்குதல் அக்கால கட்டத்தில் இல்லை. இன்னும் பலவாறாக காலகட்டம் பற்றிக் கூற முடியும். இனக்குழு, குடிமரபு, வட்டாரச் சமூகங்கள் தன்னுரிமையுடன் தம் வாழ்வைத் தாமே நடத்திக்கொண்டிருந்தன. ஆனால் தமிழக பெருவரலாற்றைப் பொருத்தவரை இது ‘இருண்ட காலம்’. என்ன செய்வது? இந்த இருண்ட காலத்தைப் போக்கத்தான் பிற் காலப் பேரரசுகளும் சைவ - வைணவச் சமயங்களும் அவதரித்துச் செயற்கரியச் செய்தன. அவற்றின் முதல் கட்ட நடவடிக்கை ‘படுகொலை, சமயப்படுகொலை, நகரங்கள், கிராமங்கள் என எங்கும் தீவைப்பும், படுகொலையும் நிகழ்த்தப்பட்டன. திருத்தொண்டர்களின் பேரெழுச்சி இவ்வாறாகத்தான் தமிழக நிலத்தில் ஒரு ரத்தக் களரியை ஏற்படுத்தி பிற்கால சாதி வெறி பிடித்த, தீண்டாமை மற்றும் வருணக் கொடுமை கொண்ட சமூக அமைப்பைத் தோற்றுவித்தது. அறவழியும் அன்புவழியும் முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்டு தின வாழ்வுப் போர்க்களம் உருவாக்கப்பட்டது.
இதன் ஒரு உருவக வடிவம்தான் திருஞான சம்பந்தர் என்னும் படிமம். மதுரை, நாகை, காஞ்சி என்று எல்லா நகரங்களிலும் கலவரங்களைத் தூண்டி, அரசதி காரத்தில் பங்கு பெற்றிருந்த அரசிகள், அமைச்சர்களைக் கூýப்படைகளாக்கி சமண பெüத்தர்களைக் கொன்று குவித்த ஒரு காலகட்ட நிகழ்வின் உருவகம் சம்பந்தர். ‘அந்தணர்கள் ஆம் மாதவர்கள் ஆயிரம் மாமறை எடுப்ப’ ‘புண்ணியத்தின் படையெழுச்சிபோல் எழுந்த’ ‘வேதம் வளர்க்கவும் சைவம் விளக்குதற்கும்’ ‘பரசமயம் நிராகரித்து நீறு ஆக்கவும்’ ‘அந்தணர்க்கு எலாம் அருமறைப் பொருள் என வந்த’ இந்த சம்மந்தர் ஒரு காலகட்டத்தின் கொலை வெறியாட்டத்திற்கு அடையாளமாக விளங்கும் பாத்திரம்.
பெüத்தர், சமணர் படுகொலை செய்யப்படுதல், பெüத்த, சமணப் பள்ளிகள் விஹாரைகள் இடிக்கப் பட்டு கோயில்கள் எழுப்பப்படுதல், பெüத்த, சமணம் மற்றும் பிற சமய நூல்கள் எரித்தழிக்கப்படுதல், பெüத்த, சமண சமயங்களைப் பின்பற்றிய மக்கள் வாளின் முனையில் சமய மாற்றம் செய்யப்படுதல், சமயம் மாற மறுத்தோர் தீண்டா மைக்குட்படுத்தல், சமண, பெüத்த சான்றோர் தமிழக எல்லைக்கு வெளியே ஓடித் தப்பிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தல், மீண்டும் பேரரசுகளை உருவாக்குதல் போன்றவை இக்கால கட்டத்தின் செயல்கள். இவற்றிற்கு ஆதாரம் ஆயிரம் இருந்தும் இன்றுவரை தமிழறிவின் மறைக்கப்பட்ட பகுதியாக இவை இருந்து வருகின்றன. சைவமும், வைணவமும் மக்கள் மேல் முதýல் திணிக்கப்பட்டு, பிறகு ஏற்கப்பட்ட சமயங்கள் என்பதை இன்று கூறுவது ஏதோ பயங்கரவாதச் செயல் என்பதுபோல மனித வெறுப்பும், ஆதிக்க வெறியும் கொண்ட, சாதி ஒடுக்கு தலை ஏற்ற அறிவுமரபு ஒன்று இங்கே கூச்சல் இடலாம். ஆனால் உண்மை கூச்சல்களால் மறைக்கப்படுவதில்லை.
பெüத்தம் சமணம் மக்களிடையே இருந்து மறைய வேறு சில காரணங்களும் இருந்திருக்கலாம். அவற்றின் அதீத அறவுணர்வு, சகிப்பு மற்றும் சக உணர்வு, சமத்துவம் போன்றவை ஒரு பகுதி சாதியினருக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருக்கலாம். உடல் இச்சை, பாýயல் கேளிக்கைகள் பற்றிய நெறிப்படுத்தும் வழிமுறைகள் ஆண்வயச் சமூகத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கலாம். சைவமும், வைணமும் அனைத்து வகையான மனநோய்கள், வெறி, வன்முறை, பித்து, அறியாமை போன்றவற்றையும் இறைச் செயலாகக் கொண்டு எப்படியும் இறையடி சேரலாம் என்று கூறியது மக்கள் குழுவினருக்குக் கவர்ச்சியாக இருந்திருக்கலாம். பிள்ளையைக் கொன்றாலும், மனைவியைக் கொலை செய்தாலும், கை காலை வெட்டினாலும், கணிகையருடன் சதா காலம் கழித்தாலும் சிவபதம் கிட்டும் என்றும், எந்தவித குற்றவியல் வன்செயல் செய்தபோதும் இறைப்பதம் அடைய முடியும் என்றும் கூறியதுடன், பாýயல் முறை மீறல்களையும் புனிதப்படுத்திய தன்மை, மக்கள் குழுவினருக்கு கவர்ச்சி நிரம்பியதாக இருந்திருக்கலாம். கோயில்களைச் சுற்றி கணிகையர் வீதிகளை உருவாக்கி தமிழகம் முழுக்க பாýயல் தொழிலைப் புனிதப்படுத்திய பக்தி உத்தி கவர்ச்சி நிரம்பியதாக இருந்திருக்கலாம். இப்படி பல இருந்தபோதும் சாதி வேறுபாடு, ஒடுக்குமுறை, தீண்டாமை என்பவை வேண்டும் என்றும் பிராமண, க்ஷத்திரிய மேலாதிக்கம் மீண்டும் நிறுவப்பட வேண்டும் என்றும் வேண்டி நின்ற சக்திகள்தாம் பெüத்த, சமணத்தை அழித்தன என்பதில் அதிக ஐயம் கிடையாது.
பெüத்த, சமணத்தை அந்நிய சமயங்கள் என்றும், பெüத்த, சமணர்களை வேற்று நாட்டவர்கள் என்றும் கூறும் மூடர்கள் தமிழக வரலாற்றில் உள்ளனர். இவை தமிழர்களால் பின்பற்றப்பட்ட, தமிழ் மக்களால் ஏற்று வாழ் நெறியாகக்கொள்ளப்பட்ட சமய நெறிகள். இவை எந்த நிலத்தையும் சாராமல் இந்தியா முழுக்க மக்களால் ஒரு காலத்தில் ஏற்கப்பட்ட நெறிகள். தமிழகத்தில் இவை தனித்தன்மையுடன் பல சிறப்பான கூறுகளைக்கொண்டு மக்களின் அகமும் புறமுமாக இருந்து வந்த சமய நெறிகள். பிராமணியமும் பிற வைதீகமும் தமிழர்களுக்கு உரியன என்பது போலும், பெüத்த, சமணங்கள், பரசமயங்கள், புற சமயங்கள் என்பது போலும் பேசப்படுதல் கேடு நிறைந்த சதிகாரப்பேச்சு, தமிழர்கள் தமது அறவுணர்வுக்கு நெருக்கமாகக் கண்டு பல நூற்றாண்டுகள் கடைபிடித்த, இந்த இரு சமயங்களிலும் சில குறைபாடுகள் இருந்தபோதும் அவை வாழ்முறைகள் மூலம் சரிசெய்யப்பட்டிருக்கக்கூடியவை. ஆனால் அவை அழிக்கப்பட்டன. கழுவேற்றப்பட்டன. கூட்டம் கூட்டமாக கொளுத்தப்பட்டன. மீண்டும் முளைவிடாத வகையில் சிதைக்கப்பட்டன. தமிழர்தம் நினைவிýருந்தே மறைக்கப்பட்டன. இன்றுவரை இவை பொது நினைவுக்குள் வராமலேயே தடுக்கப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில்தான் உ. வே. சா சீவக சிந்தாமணி, சிலம்பு, மேகலை எனக் கண்டறிந்து புலப்படுத்தியது மனநெகிழ்வை ஏற்படுத்துகிறது. அதே சமயம் இரண்டு வரலாற்று பயங்கரங்களும் நினைவுக்கு வருகின்றன. உ. வே. சா. தனக்கு நெருக்கமான மடத்தின் சுவடிச்சாலையில் வளையாபதி, குண்டலகேசி காப்பியங்களைப் பார்த்திருக்கிறார், ஆனால் சில காலம் கழித்து அவற்றை எடுத்துப்படிக்கச் சென்றபோது அவை அழிக்கப்பட்டிருப்பது கண்டு மனம் பதறுகிறார். இதுபோல் இவரால் பதிப்பிக்கப்படலாம் என்று அஞ்சப்பட்ட பல புறசமயச் சுவடிகள் அம்மடத்தில் அழிக்கப் பட்டு ‘தமிழ் காக்கப்பட்டுள்ளது’ உ. வே. சா. தமிழகமெங்கும் தனக்குத் தேவையான சுவடிகளைத் தேடி பலருடைய வீடுகளுக்குச் சென்று சுவடிகளைப் பரிசோதித்து வாசித்து அறிகிறார். பலரிடம் அவர் கூறுகிறார். ‘இவை பயனற்ற சுவடிகள்’ அவை அழிக்கப்பட்டுவிடுகின்றன. என்ன வகையில் அவை பயனற்றவை, தீங்கானவை என்பது யாருக்குத் தெரியும்? உ. வே. சா கண்டுகொள்ளாமல் விட்ட பல சுவடிகள் உரியவர்களால் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அதுவரை இருந்த சுவடிகள் உ. வே. சாவால் வாசிக்கப்பட்ட பின் கொஞ்சம் கொஞ்சமாகவும், ஒரேயடியாகவும் அழிக்கப்பட்டு, தேர்ந்தெடுத்த சில மட்டுமே எஞ்சுகின்றன. என்ன ஒரு பேரவலம் இது. தமிழில் இப்போது உள்ளதுபோல் இன்னும் பலமடங்கு சுவடிகள், நூல்கள் இவ்வாறு அழிக்கப்பட்டு, வரலாற்று நினைவிýருந்து துடைத்தெறியப்பட்டுவிட்டன. பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் கிடைத்த போதும் நூறுபாட்டும் எண்ணூறு தொகையும் மறைந்து போயிருக்கலாம். கருத்தியýன் நினைவிýச் செயல்பாடு எவ்வெவற்றை தீயன, பயனற்றவை என்று கூறியிருக்கும் என்று யாராலும் யூகிக்க முடியாது. நிகழ்ந்துவிட்டது நிகழ்ந்ததுதான். எஞ்சியவை மட்டும் எப்போதும் வரலாறு. இருண்ட காலம் எப்போதும் உண்டு.