09-07-2005, 05:47 PM
ஒரு நாணயத்தில் எப்படி இரு பக்கமோ அப்படித் தான் ஆண்களும் பெண்களும். சில வீடுகளில் ஆண்கள் மிகவும் புரிந்துணர்வுடன் நடந்து கொள்ளுவார்கள். சில வீடுகளில் பெண்கள் நடந்து கொள்ளுவார்கள். சூழ்நிலைகள் தான் காரணம். ஒரு கணவன் தன்னுடைய மனைவியின் கஸ்டத்தைப் புரிந்து வீட்டு வேலைகளில் பங்கு எடுத்தால் மாமி என்ற உறவு வீட்டில் இருந்து கொண்டு என் மகனை எப்படி வளர்த்தேன்,இவளைக் கட்டிக் கொண்டு வீட்டு வேலை எல்லாம் செய்கிறான் என்று புலம்பல். பல குடும்பங்களில் கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள் வருவது சுற்றியிருக்கும் உறவுகளால் தான். இரண்டு பேரும் வேலைக்கு போய் விட்டு களைப்புடன் வரும்போது இருவரும் புரிந்துணர்வுடன் வீட்டு வேலைகளில் பங்கு எடுத்தால் பல பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு இருக்கலாம்.

