Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கூகிள் இணையத்தளத்தால் ஆசிய அரசுகளுக்கு அதிர்ச்சி!
#1
கூகிள் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டிருக்கும் உலக நாடுகளின் உள்ளமைப்புகள் தொடர்பான விரிவான செய்மதி படங்கள் குறித்து சிறிலங்கா உள்ளிட்ட ஆசிய நாடுகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளன.
இது குறித்து சிறிலங்கா இராணுவ பேச்சாளர் பிரிக்கேடியர் தயா ரட்நாயக்க கூறியதாவது:
அரச நிறுவனங்கள், கட்டடங்கள் தொடர்பான இச்செய்மதி படங்களை ஒருவர் இணையம் வழி பெறுவது என்பது கவலையளிப்பதாக உள்ளது. இருப்பினும் இது புது யுகம். இத்தொழில்நுட்ப யுகத்தில் நாம் இதை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இணையம் சார்ந்த வாழ்க்கை முறை இப்போது உருவாகிவருகிறது. குண்டுகள் தயாரிப்பு முதல் விமானங்களை உருவாக்குவது வரை இணையத்திலேயே இருக்கின்றன. இவற்றையும் இராணுவத் தரப்பினர்
உள்வாங்கிக் கொண்டு அதை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது என்றார்.
இந்திய அரசு சார்பில் உத்தியோகப்பூர்வ கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
ஆனால் இது குறித்து பேசிய பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர், இப்பிரச்சனை குறித்து இந்திய அரசு விவாதித்து வருகிறது. இது போன்ற தொழில்நுட்ப வளர்ச்சியை நாம் தடுக்க இயலாது. இந்த இணையத்தில் இந்திய அரசு தலைவரின் இல்லம் உட்பட அனைத்தும் விரிவாக போடப்பட்டுள்ளது. அரசு தலைவர் இல்லத்தில் உள்ள ஒவ்வொரு மரங்களும் கூட பதிவேற்றப்பட்டுள்ளது. எமது பாதுகாப்பு அமைப்புகள் இது குறித்து அவதானமாகவே உள்ளது. ஆனாலும் தொழில்நுட்ப வளர்ச்சியை எப்படித் தடுப்பது என்றார்.
இச்செய்மதி படங்கள் குறித்து தாய்லாந்தும் தென்கொரியாவும் கடும் அதிருப்தியில் இருக்கின்றன.
தாய்லாந்து விமானப் படை பேச்சாளர் மேஜர் ஜெனரல் வீரசக் மனே-இன் கூறுகையில், இந்தப் படங்கள் வெளியிடப்படுவதை தடுக்க அனைத்து முயற்சிகளும் மேர்கொள்ளப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கத்தில் இவை வெளியிடப்படிருக்கக் கூடும் என்றார்.
அதே நேரத்தில் தாய்லாந்து இரணுவம் இப்பிரச்சனை குறித்து தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுடன் விவாதித்து வருவதாகவும், கூகிள் இணையத் தள நிறுவனத்திடம் தமது அரசுக்கு இதுபோன்ற சேவையை அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
தென்கொரிய அரச அதிகாரிகள் இப்படங்கள் குறித்து கூறுகையில், அமெரிக்காவிடம் தமது அரசின் கவலையை தெரியப்படுத்தியுள்ளது என்றனர்.
தென்கொரிய அரச தலைவரின் இல்லம், இராணுவத் தளங்கள் உள்ளிட்டவை கூகிள் இணையதளத்தில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஜப்பான் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
அவுஸ்திரேலிய பாதுகாப்புத் துறையினரும் இது போன்ற அச்சுறுத்தல்களைத் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினர்.
இருப்பினும் அவுஸ்திரேலியா அணுகுண்டு தொழில்நுட்பத்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூகிள் செய்மதி படங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முந்தையவை என்றும் இவை பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

-புதினம் செய்திகளிலிருந்து.
!:lol::lol::lol:
Reply


Messages In This Thread
கூகிள் இணையத்தளத்தால் ஆசிய அரசுகளுக்கு அதிர்ச்சி! - by ANUMANTHAN - 09-07-2005, 02:29 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)