09-07-2005, 11:09 AM
kurukaalapoovan Wrote:பிராமணர், பார்பனர் என்று பொதுவாக கூறுகிறோம் ஆனால் இரு பிரிவுகள் ஜய்யர் ஜய்யிங்கர் என இருப்பதாக அறிந்தோன்.
இதில் ஜய்யிங்கர்கள் தான் இராமரை வழிபடுவர்கள் இந்துமதத்தவர்கள், அந்நியன் படத்தில் போல நாமம் போடுபவர்கள். ஜய்யிங்கர்கள் தம்மை உயர் இனத்தவர்கள் (சாதி அல்ல) எண்ணுபவர்கள் அதாவது தம்மை ஆரியராக (இந்திய ஆரியர்களாக Indo-aryans). இவர்கள் பிள்ளையாரை வழிபடுவதில்லை ஆனால் நாம் எல்லோருக்கும் பொதுவாக தெரிந்த பிள்ளையார் சுளியை மதச்சின்னமாக பயன்படுத்துகிறார்கள். ஜய்யிங்கர்கள் ஜய்யர்களையும் தம்மோடு சமனாக பார்ப்பதில்லை, அவர்களையும் திராவிடராகத்தான் பார்க்கிறார்கள். இந்தியாவில் அரசியலில் செல்வாக்குமிக்கவர்கள் மேலாண்மைவாத கொள்கை கொண்ட ஜய்யிங்கர்கள் (உயர் ஆரிய இனமாக தம்மை எண்ணுபவர்கள்). தீவிரவாத இந்துசமய கருத்துக்கள் நடவடிக்கைகளுக்கு பின்னணியில் இருப்பவர்களும் இவர்கள் தான்.
ஜய்யர் என்பவர்கள் சைவசமயத்தவர்கள் சிவனை வழிபடுபவர்கள். இவர்கள் தான் பெரும்பாலும் நான் அறிந்தவரை ஈழத்தில், இலங்கையில் உள்ளவர்கள். இந்தியாவில் ஜய்யர்கள் தமிழ்நாட்டிலும் எனய திராவிட பகுதியையும் தான் புூர்வீகமாக கொண்டவர்கள். இவர்கள் தம்மை ஒரு ஆளும் வர்கமாக உயர் இனமாக எண்ணுவதாக தெரியவில்லை.
ஈழத்தமிழரின் கலாச்சாரத்தில் மதம் மதம்சார்பற்ற மூடநம்பிக்கைள் மனிதத்தன்மைக்கு எதிரான நடைமுறைகள் பழக்கவழக்கங்கள் பல உண்டு. இதற்குக் காரணம் அந்த சமுதாயத்தின் அங்கத்தவராகிய நாம் ஒவ்வொருவருமே. மதம் மதம்சார்பற்ற மூடநம்பிக்கைகளிற்கு அர்த்தம் கொடுத்து அங்கீகரிக்கும் நடைமுறைகளை முதலில் அன்றாட வாழ்விலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தவிர்கமுயலுங்கள். எம்மில் பலர் இன்று நம்பிக்கை இல்லாவிடினும் அது தான் வழமை என்றோ, ஏதே மற்றவர்களை திருப்த்திப்படுத்த அல்லது அவர்களின் விமர்சனங்களிற்கு பயந்தவர்களாக பல அர்த்தமற்றவற்றை செய்கிறோம். முதலில் இந்த கோழைத்தனத்திலிருந்து உங்களை கொஞ்சம் கொஞ்சமாக விடுவித்துக் கொள்ளுங்கள். உங்களிற்கு அந்த தன்நம்பிக்கையும் விடுதலையும் கிடைக்கும் போது உங்களை ஏமாற்றமுடியாது, உங்களின் கடின உளைப்பும் பால் பழம் போன்ற சத்துணவுகள் (ஓவ்வொரு 5 வினாடிகளிற்கும் பட்டினியால் 1 குழந்தை இறக்கும் இந்த உலகில்) அருச்சனை அபிசேகம் என விரையமாக்கப்படாது.
நாம் ஒவ்வொருவரும் நடைமுறையில் இந்த மாற்றங்களை எமது அன்றாட வாழ்வில் கொண்டுவந்தால் எம்மை ஏமாற்றி அடக்கியாண்டு சுரண்டிப்பிழைக்க மதத்தின் பெயரால் நிர்வாகமயப்படுத்தப்பட்ட மூடநம்பிக்கைள் என்னும் அடிமையிலிருந்து விடுதலை பெறலாம். இப்படிப்பட்ட ஒரு தெளிவு இந்தியாவில் வந்தால் பிரீத்தி கூறியது போன்று 3 வீதமானவர்கள் இந்தியாவின் ஆளும் வர்க்கமாக தொடர்வது கேள்விக்குறியாகும். ஈழத்து ஜய்யர் மாரின் வயிற்றில் அடித்து இந்திய மேலாண்மைவாதிகளின் கொள்கையில் மாற்றம் கொண்டுவரலாம் என்பது ஒரு சிறுபிள்ளைத்தனமான வாதம்.
நீங்கள் இங்கே குறிப்பிடும் விடயத்தினை நாம் சைவம் வைஸ்ணவம் என எடுத்துக்கொள்ளலாமா?
ஏனென்றால் சைவர்கள் சிவனையும். அதாவது தென்னிந்தியாவில் அதிகம் வசிப்பவர்கள் சிவனையும். வைஸ்ணவர் (பெரும்பாலானோர் வடந்தியாவில் வசிக்கின்றார்கள்) இராமன் அல்லது விஸ்னுவை வளிபடுகின்றார்கள்.
மடங்களில் கூட பிரிவுகள் உண்டு
அந்த வகையில்த்தான்
காஞ்சிமடம் விஸ்னுவையும். ஆதினம் மடம் சிவனையும் தமது வளிபாட்டு தெய்வங்களாக வளிபடுவதாக நான் கேள்வியுற்றிருக்கின்றென்.

