09-07-2005, 08:36 AM
வடநாட்டு நடிகைகள் போல் மது குடிப்பது எனக்கு பிடிக்காது- நடிகை அசின்
விஜய்யுடன் `சிவகாசி', விக்ரமுடன் `மஜா', அஜீத்துடன் `காட்பாதர்', சூர்யாவுடன் `கஜினி', தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஒரு படம் உள்பட 6 படங்களில் நடித்து வருபவர் அசின். அவரை சந்தித்தபோது...
தமிழில் `உள்ளம் கேட்குமே' படத்தில்தான் முதன் முதலாக நடித்தேன். ஆனால் முதலில் வெளிவந்தது `எம். குமரன் சன்ஆப் மகாலட்சுமி'. அதை தொடர்ந்து எனக்கு முக்கிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதை என் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இது தொடர வேண்டும்.
வித்தியாசமான நல்ல வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. எந்த வேடம் கொடுத்தாலும் என்னால் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஒரு நடிகைக்கு உடல் அமைப்பு, உணர்ச்சிகளை காட்டும் இயல்பு வேண்டும். எனக்கு இது இயல்பாகவே இருப்பதாக கருதுகிறேன்.
எனது தந்தையும் தாயும் எனக்கு கிடைத்த வரம். அவர்கள் என்னிடம் நண்பர்கள் போலவே பழகுகிறார்கள். சாப்பிடும்போது கூட எனக்கு பல்வேறு ஆலோசனைகளை சொல்கிறார்கள். எல்லா வகையிலும் எனது வளர்ச்சிக்கு உதவுகிறார்கள்.
சொந்த வியாபாரத்தில் இறங்கியிருந்தால் அதில் அதிக கவனம் செலுத்த வேண்டியது இருந்திருக்கும். எனக்கு `மாடலிங்' பிடித்ததால், அதன் மூலம் சினிமாவுக்கு வந்து விட்டேன். வெற்றியோ தோல்வியோ நமது கையில் இல்லை. மாற்றங்கள் தலையெழுத்து படிதான் அமையும். எனது சினிமா வாய்ப்பும் அதுபோல வந்ததுதான்.
சினிமாவில் நடித்தாலும் எனக்கு பிடிக்காத விஷயங்கள் பல உண்டு. வடநாட்டு நடிகைகளைப்போல் மது குடிப்பது எனக்கு பிடிக்காது. குளிர்பானங்கள், டீ, காபி குடிப்பதை கூட விரும்புவது இல்லை.
ஒவ்வொரு நாளையும் பயன் உள்ளதாக ஆக்கவே விரும்புகிறேன். சிறிது நேரம் கிடைத்தாலும் புத்தகம் படிப்பேன். ஹரிபாட்டர் புத்தகங்கள் மிகவும் பிடிக்கும். மர நிழலில் உட்கார்ந்து இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.
கேரளாவில் இருந்து நடிக்க வந்தாலும், நான் கேரளாவில் இருப்பதை விட சென்னையில்தான் அதிக நாட்கள் இருக்கிறேன். சென்னையை நான் மிகவும் நேசிக்கிறேன். இங்கு திறந்த மனதுடன் பேசி பழகுகிறார்கள். இது மிகவும் பிடித்திருக்கிறது.
எல்லோரும் என்னை நல்ல நடிகை என்று சொல்ல வேண்டும். அந்த பெயரை வாங்குவதே என் லட்சியம் என்கிறார் அசின்.
.

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>