Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஐ.நா. வை நார்வேக்கு பதிலாக சந்திரிக்கா அம்மையார் ஏன் வரவழைக
#10
இலங்கை இனப்பிரச்சனையில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டால் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழர்களுக்கான தனியரசைப் பெற்றுவிடுவார்கள் என்று ஜாதிக ஹெல உறுமய பொதுச்செயலாளர் ஓமல்பே சோபித தேரர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு ஓமல்பே தெரிவித்துள்ள கருத்து:

அமைதிப் பேச்சுக்களில் நோர்வேயின் அனுசரணைப் பணி முற்றிலும் பக்கச்சார்பானது. இருப்பினும் ஐ.நா. தலையிட்டால் தமிழீழ விடுதலைப் புலிகள் சர்வதேச அங்கீகாரம் பெறுவதற்கு வசதியாக அமைந்துவிடும்.

சிறிலங்காவின் அண்டை நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளை இப்பிரச்சனையில் தலையிடுமாறு அழைக்க வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையை அமைதிப் பேச்சுகளில் தலையிட சிறிலங்கா அரசு அழைத்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழர்களுக்கான தனியரசு பெறுவதற்கு பங்காற்றுவதாக அமைந்துவிடும் என்றார்.

ஜே.வி.பி. கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க இதுகுறித்துக் கருத்துக் கூறும்போது:

ஐக்கிய நாடுகள் சபையை சிறிலங்கா அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க அழைத்துள்ளதன் மூலம் அமைதிப் பேச்சுகளில் நோர்வே தோல்வியடைந்துவிட்டது என்பது தெரியவந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளை நோர்வே தரப்பினர் ஆதரித்தனர். எதிர்காலத்தில் நடைபெற உள்ள அமைதிப் பேச்சுகள் குறித்து ஜே.வி.பி. எதுவும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. புதிய அரசுத் தலைவர் பொறுப்பேற்ற பின்னரே அது குறித்து பேச இயலும். ஐ.நா. தலையீடு குறித்து எதுவும் தற்போது கருத்து தெரிவிக்க முடியாது என்றார் அவர்.

ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச கூறுகையில், எதிர்கால அமைதிப் பேச்சுகள் குறித்து நாம் இப்போது எதுவும் கூறவில்லை. புதிய அரச தலைவர் பொறுப்பேற்ற பிறகு அது குறித்து முடிவு செய்வோம் என்றார்.

Puthinam
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Danklas - 09-04-2005, 04:39 PM
[No subject] - by kuruvikal - 09-04-2005, 04:52 PM
[No subject] - by வினித் - 09-04-2005, 04:52 PM
[No subject] - by வினித் - 09-04-2005, 04:55 PM
[No subject] - by Danklas - 09-04-2005, 04:59 PM
[No subject] - by வினித் - 09-04-2005, 06:04 PM
[No subject] - by SUNDHAL - 09-04-2005, 06:11 PM
[No subject] - by kuruvikal - 09-07-2005, 07:34 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)