Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அமெரிக்காவை தாக்கிய சூறாவளி
#25
அமெரிக்காவைத் தாக்கிய கத்ரீனா சூறாவளி

<img src='http://news.bbc.co.uk/nol/shared/spl/hi/pop_ups/05/americas_draining_drowned_city/img/1.jpg' border='0' alt='user posted image'>
<b>தேங்கியிருக்கும் வெள்ள நீர் இராட்சத இயந்திரங்கள் மூலம் வெளியேற்றப்படுகின்றது.</b>

கடந்த டிசம்பர் மாதம் இலங்கை, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளைத் தாக்கியது சுனாமி அதன்பின்பு நடந்த இயற்கை அனர்த்தம், அமெரிக்காவின் தெற்குப் பகுதி வளைகுடா மாநிலங்களைத் தாக்கிய, குறிப்பாக நியூ ஆர்லியன்ஸ் நகரைத் தாக்கி அழித்த கத்ரீனா சூறாவளிதான்.

அழிவு என்பதை விட்டுவிட்டுப் பார்த்தால், சுனாமிக்கும், கத்ரீனா சூறாவளிக்கும் இடையில் வித்தியாசங்கள் நிறைய.

இந்துமாக்கடல் நாடுகளை சுனாமி தாக்கப்போவது பற்றி சரியான முன்னெச்சரிக்கை இல்லை, ஆனால் அமெரிக்காவின் வளைகுடாப் பகுதியின் பருவநிலை நன்கு கண்காணிக்கப்பட்டுவரும் ஓரிடம்; அதுவும், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை-செப்டம்பர் மாதக் காலத்தில் இங்கே சூறாவளிகள் தாக்குவது வழக்கம்.

மேற்கிந்தியத் தீவுகள், க்யூபா, க்ரெனடா ஆகிய நாடுகளை அடிக்கடி சூறாவளிகள் தாக்கியுள்ளன.

அமெரிக்காவின் புளோரிடா, அலபாமா போன்ற மாநிலங்களும் சூறாவளித் தாக்குதலுக்குத் தப்பியதில்லை.

ஆக, கத்ரீனா வருகிறது, தாக்கப்போகிறது என்று துல்லியமாகக் கணித்துச் சொல்லியும் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை சரிவர எடுக்க முடியவில்லை என்பதே நிதர்சனம்.

இப்பகுதியில் ஆண்டுதோறும் சூறாவளிகள் வலுப்பெற்று வருகின்றன என்பதை விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்கிறார்கள்.

ஆனால் அதற்குக் காரணம் என்ன? உலகில் தொழில்வளமிக்க நாடுகள் அதிகம் வெளியிட்டு வரும் வெப்ப வாயுக்களால் ஏற்படும் க்ரீன்ஹவுஸ் விளைவு, பருவநிலை மாற்றம் அதாவது உலகம் வெப்பமடைந்து வருவதால்தான், கடல் மட்டத்தில் கொந்தளிப்புக்களை, பலமான சூறாவளிகள் தாக்குகின்றன என்பது ஒருவாதம். இந்த வாதத்தை ஏற்க முடியாது என்கிறார் ஐநா சுற்றுச்சூழல் திட்ட அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானி ஜீன் பலூட்டிகாப்.


சூறாவளிகள் ஆண்டுதோறும் வலுப்பெற்று வருகின்றன என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. ஆனால், பருவநிலை மாற்றத்துக்கும் இதற்கும் நேரடித் தொடர்பு உண்டு என்று கூறமுடியாது. கத்ரீனா சூறாவளியை பொறுத்தவரை, அது அடித்த பாதையில் நியூ ஆர்லியன்ஸ் நகரம் தாழ்வான பகுதியில் உள்ள அந்த நகரம் சிக்கிகொண்டது, அதுதான் பிரச்னை. ஒருவேளை கத்ரீனா சூறாவளி கிழக்காக, அல்லது மேற்காக சென்றிருந்தால் நியூஆர்லியன்ஸ் நகரும் தப்பியிருக்கும் என்கிறார் விஞ்ஞானி ஜீன் பலூட்டிகாப்.

ஆனால் நியூ ஆர்லியன்ஸ் நகர் இத்தகைய பேரழிவை சந்திக்கும் என்று ஏற்கனவே கணித்திருந்தார் புவிவியல் விஞ்ஞானி பாப் மார்ட்டன்.

அதாவது, இந்த நகரை அடுத்த பகுதியில் கடல்நீர் பொங்கினால் அதைத் தாங்கவல்ல ஏரிகள், குளங்கள், காயல்கள் நிறைய இருந்தன, சதுப்பு நிலங்கள் இருந்தன, ஆனால் இவையெல்லாம் மாற்றி சாலைகள், காலனிகள், பேரங்காடிகளை அமைத்துவிட்டதால், நகருக்கு இயற்கையாக இருந்த பாதுகாப்பு போய்விட்டது என்கிறார் இவர்.

தவிர, நகரை அடுத்த கடற்படுகையில் எண்ணெய், இயற்கைவாயு தோண்டும் பணியும் நடந்துவருவதால், பிரச்னை என்கிறார் விஞ்ஞானி பாப் மார்ட்டன்.

எது எப்படியிருந்தாலும், கத்ரீனா சூறாவளி விஞ்ஞானிகளுக்கு ஒரு புதிய சவாலாகத் தெரிகிறது என்பது உண்மைதான்.

BBC தமிழ்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by Malalai - 08-30-2005, 03:00 PM
[No subject] - by Mathan - 08-30-2005, 03:35 PM
[No subject] - by Malalai - 08-30-2005, 03:37 PM
[No subject] - by Mathan - 08-30-2005, 03:57 PM
[No subject] - by ANUMANTHAN - 08-30-2005, 07:25 PM
[No subject] - by RaMa - 08-31-2005, 02:37 AM
[No subject] - by Mathan - 08-31-2005, 11:32 AM
[No subject] - by ப்ரியசகி - 09-01-2005, 03:06 PM
[No subject] - by Mathan - 09-02-2005, 11:43 PM
[No subject] - by Mathan - 09-03-2005, 12:07 AM
[No subject] - by Rasikai - 09-03-2005, 12:09 AM
[No subject] - by Mathan - 09-03-2005, 05:02 AM
[No subject] - by Mathan - 09-03-2005, 05:43 AM
[No subject] - by kuruvikal - 09-03-2005, 05:44 AM
[No subject] - by Annachi - 09-04-2005, 09:39 AM
[No subject] - by Annachi - 09-04-2005, 09:42 AM
[No subject] - by Thala - 09-04-2005, 09:58 AM
[No subject] - by AJeevan - 09-04-2005, 10:05 AM
[No subject] - by Mathan - 09-05-2005, 04:48 AM
[No subject] - by Mathan - 09-05-2005, 04:52 AM
[No subject] - by Mathan - 09-05-2005, 04:58 AM
[No subject] - by Mathan - 09-07-2005, 07:32 AM
[No subject] - by Malalai - 09-08-2005, 07:18 PM
[No subject] - by narathar - 09-09-2005, 11:34 AM
[No subject] - by sinnakuddy - 09-09-2005, 12:18 PM
[No subject] - by Mathan - 09-10-2005, 09:04 AM
[No subject] - by Mathan - 09-17-2005, 08:09 AM
[No subject] - by Senthamarai - 09-17-2005, 01:12 PM
[No subject] - by Mathan - 09-17-2005, 04:20 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)