09-07-2005, 06:39 AM
preethi Wrote:குருவியார் தன்னுடைய பெயரை அறணையார் என்று மாற்றிக் கொண்டால் எவ்வளவோ பொருத்தமாக இருக்கும். இவர் சம்பந்தா சம்பந்தமில்லாமல் அலங்கார வார்த்தைகளை அள்ளி வீசி அரைத்த மாவையே திருப்பி அரைத்துக் கொண்டு, தன்னுடைய நீண்ட வசனங்களில் இந்த விடயத்தின் தலைப்பையும் தான் சொல்ல வந்ததையும், இடையில் மறந்து விடுகிறார் போலிருக்கிறது.
<b>இந்த விடயத்தை நான் தொடங்கியதன் காரணம், பிராமணியத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக அல்ல. பெரியார், அண்ணா போன்றவர்களாலேயே பிராமணியத்தை வெல்ல முடியவில்லை. என்னுடைய நோக்கம் எல்லாம், எங்கள் மத்தியில், <span style='font-size:25pt;line-height:100%'>எங்கள் தயவில்வாழும் பிராமணர்களின் தமிழ் வெறுப்புத் தன்மையையும், அவர்கள் தாங்கள் தமிழரல்ல, தமிழர்களை விட மேலானவர்கள் என்று நினைப்பதையும், இன்னும் அவர்கள் தமிழையும்., தமிழீழத்தையும், எங்களுடைய விடுதலைப் போராட்டத்தையும் எதிர்க்கும் தமிழ்நாட்டுப் பிராமணர்களான் சங்கராச்சாரி, சோ ராமசாமி போன்றவர்களைத் தான் இன்னும் தங்கள் தலைவர்களாகப் போற்றுகிறார்கள் என்பதைக் காட்டுவதும் தான்.</span>
இந்த 21ம் நூற்றாண்டில் நாங்கள் எதற்காக சாதிப் பாகுபாட்டை ஊக்குவிப்பது மாதிரி, ஒரு சாதியில் பிறந்தவர் என்ற ஓரே காரணத்துக்காக அவருக்குப் பயபக்தி உண்டோ இல்லையோ நாங்கள் மத குருவாக ஏற்றுக் கொள்கிறோம்.
எல்லா மதத்தவர்களும் தங்களுடைய சொந்த மொழியில் க்டவுளை வழிபடும் போது, தமிழ், தமிழர் என்று வாய் கிழியப் பேசும் நாங்கள் எதற்காக எங்களுக்கு எந்த வித தொடர்புமில்லாத வடமொழியை, எங்களுக்குக் கொஞ்சம் கூட விளங்காத யாரோ ஒருவர் முணு முணுக்க நாங்கள் "ஞே" என்று எருமை மாதிரி நின்று விட்டு விட்டு வருகிறோம் என்பது தான்.</b>
[b]நாங்கள் தமிழர்களா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கு குருவியாருக்கு என்ன தகுதியுண்டு
நான் இந்த இணையத் தளத்துக்கு மிகவும் புதிய ஒரு அங்கத்தினராக இருந்தாலும் கூட குருவியாரின் மெத்தப் படித்த மேதாவித் தனத்தால், பல விடயங்களில் தலைப்புக்கு சம்பந்தமில்லாதவற்றையெல்லாம் அவர் அழுது கொட்டுவதைத் தெளிவாகப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.
ஐயா குருவியாரே, நாங்கள் ஒன்றும் சங்ககாலத்து அன்னப் பறவைகள் அல்ல பாலையும், தண்ணீரையும் வேறு படுத்திப் பருகுவதற்கு, அதனால் விடயத் தலைப்புக்கு சம்பந்தமுள்ளவற்றை மட்டும் எழுதினால் மிகவும் நன்றாக இருக்கும்.
பிருத்தி..நீங்கள் முன்வைத்த கருத்துக்குள்ளேயே உங்கள் முரண்பாட்டுக்கு விடை இருக்கிறது... அதற்கு முதல்
குருவிகளோ என்ன உலக மக்களோ மேதாவிகள் அல்ல... அவர்கள் எல்லோரும் மேற்குலகில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் பேசும் தமிழர் அடையாளங்களோடு வாழும் மக்களைத்தான் தமிழர்கள் என்று எண்ணுகின்றனர்...! மற்றும் படி எல்லோரும் சிறீலங்கன்...! இது சர்வதேச நியமங்களில் படிதான் நடக்கிறது...தனிமனித விருப்பு வெறுப்புக்களின் படியல்ல...!
ஒரு இனத்தின் அடையாள அம்சங்கள் என்ன என்ற அடிப்படைக்குள் உங்கள் புதிய சித்தாந்தங்கள் புகுத்தப்பட வேண்டின் அதற்கு சர்வதேச அங்கீகாரம் பெற வேண்டும்..ஆளாளுக்கு விரும்பினபடி இது புதிது அது பழசு என்று ஒரு இனத்துக்கு புதிய தோற்றம் கொடுக்க முடியாது..! உங்களுக்கே தெரியும் தமிழீழத்திற்கான சர்வதேச அங்கீகாரத்துக்காக தமிழர்கள் என்று காட்டுவதற்காக தொலைத்த அடையாளங்களுக்கு சான்றுகளைத் தேடிக்கொண்டிருக்கின்றோம் என்பது...!
எனி உங்கள் விடயத்துக்கு வந்தால் உங்களுக்கு எப்படி மேற்கில் உங்கள் எண்ணப்படி வாழ உரிமை இருக்கிறதோ...அதே உரிமை பிராமணியனுக்கும் தன் எண்ணப்படி வாழ உரிமை இருக்கிறது..! நீங்கள் ஏன் அவர்களைத் தேடிப் போகிறீர்கள்..! இப்போ உதாரணத்துக்கு இஸ்லாமியர்கள்..யூதர்கள் இருக்கினம்...அவையிட்டப் போறியளோ..அர்ச்சனைத் தட்டம் சுமந்து கொண்டு... இல்லை அல்லவா...அதுபோல...அவர்களை அவர்கள் நியமங்களின் படி வாழ விடுங்கள்..உங்களை உங்கள் நியமங்களின் படி வாழ வையுங்கள்...புலத்தைப் பொறுத்தவரை உங்களுக்கு உள்ள உரிமைதான் அவர்களுக்கும்..அவர்கள் உங்கள் உரிமையைப் பறிக்கிறார்கள் என்றால் சட்ட நடவடிக்கை எடுங்கள்...வரவேற்கலாம்..அதைவிட்டு விட்டு அவர்களுடைய நியமங்களை பழிக்க அவதூறாகப் பேச உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது...! அவர்கள் உங்களைப் பழிக்கிறார்கள் வஞ்சிக்கிறார்கள் என்றால் ஒன்றில் அவர்களை நாடாதிருங்கள்..அல்லது சட்டத்தின் மூலம் தீர்வு காணுங்கள்..அதற்கான சகல உரிமைகளும் அந்தந்த நாடுகளால் வழங்கப்பட்டுள்ளது...! அதைப் பாவிக்க முடியவில்லை என்றால் உங்கள் வாதம் வலுவற்ற பொழுதுபோக்குக்கான தனி மனித காழ்புணர்ச்சியின் வெளிப்பாடு...என்றுதான் அர்த்தப்படும்..அதைப் பெரிசு படுத்த வேண்டிய தேவை உலக மக்களுக்கு இல்லை..!
நீங்கள் இன்னும் உலகில் தமிழர் என்ற ஒன்றைச் உச்சரித்து வாழ இருக்கிறீர்களே தவிர..உண்மையான தமிழர்களா என்பது ஆய்வுக்குரிய விடயம்...! அதை ஆய்வு செய்ய யாரும் துணியவும் இல்லை..காரணம் அதிகம் பேர் உங்கள் நிலையில்தான் இருந்து புதுமை பேசிக் கொண்டு... (உலகை அல்ல உலகம் தெளிவாத்தான் இருக்கிறது..நடக்கிறது....) சொந்த சமூகத்தை ஏய்த்துக் கொண்டிருக்கிறீர்கள்..! அதுமட்டுமன்றி தனிப்பட்ட பாதிப்புகளை மையமாக வைத்து சமூகத்தில் ஆத்திரக்காரர்களின் கண்மூடித்தனமான ஆவேசத்தைத் தூண்டி..உங்கள் ஏமாற்றங்களுக்கு வடிகாலாக பிராமணிய எதிர்ப்பையும் ஈழப்போராட்டத்தையும் பயன்படுத்த விளைகின்றீர்கள்..! ஈழப்போராட்ட சக்திகளான எந்த அரசியல் கட்சியாகட்டும்.. விடுதலைப்புலிகளாகட்டும் பிராமணிய எதிர்ப்பை எப்போதும் மக்களுக்கு பகிரங்கமாகச் சொன்னதில்லை...! சொல்வார்கள் என்றும் எதிர்பார்க்க முடியாது..அந்தளவுக்கு அதன் பாதிப்பு என்பது பெரிதுபடுத்த வேண்டிய விடயமும் அல்ல..!
நீங்கள் களத்துக்குப் புதிதோ பழசோ என்பதல்ல...இங்கு பேச்சு...தனிநபர் விடயங்கள் பழிப்புக்களுக்கு அப்பால் தலைப்போடு பேசுதல் ஆரோக்கியம்..! பண்பாடு...! அந்த அடிப்படை கூட இல்லை என்றால் உங்களோடு மனிதர் என்று கருதிக் கருத்தாடுவதில் பயனில்லை..அந்த வகையில் பிராமணியர் உங்களை எதிர்த்தால் கூட அது நியாயம் என்றே சொல்வோம்..! முதலில் உங்களை பண்பானவர்களாக சக மனிதர்களை அவர்களின் கருத்துக்களை (உங்களுக்கு ஒவ்வாது இருப்பினும்) மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்..அதை ஏற்க வேண்டும் என்பதல்ல தேவை..! மனிதர்களாக மற்றவர்களின் உரிமையில் தலைப்போட விளையாதவர்களாக ஆக்கிக் வாழப்பழகிக் கொள்ளுங்கள்..! நீங்களாக வலிந்து உரிமைகளைப் பறிகொடுத்து விட்டு...ஐயோ பறிக்கிறான் என்று துவேசியம் பேசி எனியும் வாழ நினைக்காதீர்கள்...அதை உலகம் அங்கீகரிக்கப் போவதில்லை..!
எது சட்டத்துக்கும் சர்வதே நியமத்துக்கும் உட்படுகிறதோ அதுவே அங்கீகரிக்கப்படும்...! உங்கள் உங்கள் சுய கற்பனைகளை உங்களோடு கட்டி வைத்துக் கொள்ளுங்கள்...! அதைப்பற்றி உலகம் கவலைப்பட வேண்டும் என்று எண்ணாதீர்கள்...! அதை கண்மூடி அங்கீகரிக்க வேண்டும் என்பது அவசியமில்லை..! உங்கள் பிராமணிய எதிர்ப்பு வாதப்படி பார்த்தால் வெள்ளையர்கள் உங்களை தங்கள் மண்ணில் இருந்து விரட்டி அடிக்க வேண்டும்..அந்தளவுக்கு நீங்கள் அவர்களின் நாட்டை சட்ட ஒழுங்கை துஷ்பிரயோகம் செய்கிறீர்கள்...! ஆனால் அவர்கள் தங்கள் ஆவேச மன உணர்ச்சிகளுக்கு இடமளிப்பதுக்கு அப்பால் சட்டத்துக்கு மதிப்பளிப்பதால் இன்று உங்களால் மேற்கில் அந்த மக்களோடு வாழ முடிகிறது என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்...! அவர்கள் மனிதர்கள்..பண்பாடு அறிந்தவர்கள் குறைந்தது சட்டத்தை மற்றவர்களின் அடிப்படை மனித உரிமைகளை மதிக்கத் தெரிந்தவர்கள்..நீங்கள்..எனியாவது அதைக் கற்றுக் கொண்டு மற்றவர்களோடு நட்புறவு சகோதரத்துவம் பாராட்டி உங்கள் நியமங்களோடு வாழுங்கள்...அப்போ பிராமணியம் என்பது ஒரு பிரச்சனையாகவே தோன்றாது...உங்கள் தனிப்பட்ட பாதிப்புக்களை சமூகப்பாதிப்புகளாக சித்தரித்து சமூகத்தில் ஆத்திரக்காரர்களை உங்கள் பக்கம் வரவழைத்து உங்கள் தவறுகளுக்கு நியாயம் கற்பிக்க விளைவது...உங்களை உங்கள் சமூகத்தை நீங்களே ஏமாற்றுவதாகவும் தவறாக வழிநடத்துவதுமாகவே முடியும்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

