09-07-2005, 05:45 AM
preethi Wrote:சோழர் காலத்தில் தான் பெரும்பான்மையான பிராமணர்கள் தமிழர் தேசத்துக்குக் குடியேறினார்கள். சோழர்கள் கட்டிய கோயில்களில் வேலைக்கு வந்த பிராமணர்கள் கொஞ்சம், கொஞ்சமாக, கடவுள் நம்பிக்கை என்ற மாயயைக் காட்டி அதிகமான் அதிகாரத்தைத் தங்களிடம் எடுத்துக் கொண்டார்கள். சமய நம்பிக்கை என்ற அடைப்படையில், தமிழரிடம் இல்லாத சாதி வழக்கததையும் அறிமுகப் படுத்தினார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அதிகாரம் தங்கள் கைக்கு வந்ததும், சாதியைக் காட்டி, தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டதால், அவர்களின் ஆதிக்கத்தில் கலையும், தமிழ் நூல்களும் வந்தன.<span style='font-size:23pt;line-height:100%'>
ஐயா பிரீதி, இதெல்லாம் இந்தியாவில, தமிழ்நாட்டில, நடந்த கதை. ஈழத்துக்கு இதில் எதுவும் பொருத்தம் இல்லை. முதலில் யாழ்ப்பாண இராச்சியம், வன்னி, மன்னார் அரசுகள், சோழ அரசுகளும் இல்லை, பிராமணரை கூப்பிட்டு தலைக்கு மேல் இவை வைக்கவும் இல்லை. இந்த அரசுகள் ஆரியச்சக்கரவர்த்திகள் ஆட்சிக்காலம். ஈழத்து கோவில்களில் பிராமணர் ஆட்சி நடக்கவில்லை. உடைத்த தேங்காயை கூட கோயில் முதலாளியை கேட்டுத்தான் ஐயர் கொண்டு போகலாம். இங்கே அந்த அளவுக்கு கோவிலுக்குள்ளேயே வேளாளார் ஆட்சி நடக்கிறது. பிறகு கல்வி, கலைகளிலெல்லாம் எங்கே பிராமணர்? அவர்கள் கிடைக்கும் தட்சணையில் பங்கு கேட்பதற்கே வேளாளர் காலைப்பிடிக்க வேண்டிய நிலை. ஈழத்திலே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வியை மறுத்தவர்கள் வேளாளர். பிராமணர் அல்ல. ஈழத்திலே சாதிப்பாகுபாட்டை அன்று முதல் இன்று வரை முன்னின்று நடைமுறைப்படுத்துபவர்கள் வேளாளர். பிராமணர் அல்ல. உம்முடைய கதையெல்லாம் ஈழத்துக்கு பொருந்தாதையா! வேறு எங்காவது முயற்சி செய்து பாரும். ஒரு வேளை மலேசியா, சிங்கப்புூர், பீஜீத்தீவு தமிழரிடம் முயற்சி செய்து பார்க்கலாமே? ஆதரவு கிடைக்கும்.</span>

