09-07-2005, 01:56 AM
Mathuran Wrote:Jude Wrote:ஈழத்தமிழ் போராட்டத்துக்கு சாதி மத வேறுபாடுகளின்றி ஒட்டுமொத்தமான ஈழத்தமிழரும் ஆதரவளிக்கிறார்கள். காசோலைக்கு மதம் பரப்பும் கிறிஸ்தவர்களும், அந்த மதத்தை சேர்ந்த அடேல் பாலசிங்கமும், கிறிஸ்தவன் மாவீரன் சார்ள்ஸ் அன்ரனி நினைவாக தனது மகனுக்கு அதே கிறிஸ்தவ பெயரிட்டு மகிழ்ந்த தலைவர் தலைமையில், எமது மக்கள் வேளாளரும், பிராமணரும், மற்றும் எல்லாரும் ஒன்றாக ஒரே கொள்கையுடன் இருக்கிறார்கள். பிராமணியம் எமது மக்களுக்குள்ள ஒரு பிரச்சினை. அதை காப்பதும், வளர்ப்பதும் எமது மக்கள் மத்தியில் வேளாளர். அதற்காக அவர்கள் தமிழீழ போராட்டத்தின் எதிரிகள் அல்ல.
அதே வேளை எமக்கு இந்திய ஆதரவு இனிமேலும் தேவையில்லை. இந்திய தமிழரின் பிராமண போர் எமது பிரச்சினையல்ல. எமது தமிழீழ போராட்டத்துக்கு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில், இந்தியாவிலும் பார்க்க நிறைந்த அளவில் மதிப்பும், ஆதரவும் உண்டு. இந்த ஆதரவு இந்திய எதிர்ப்பை சமப்படுத்த போதுமானது. இந்திய பிராமணரை எதிர்த்து, இந்திய ஆதரவு கிடைக்க போவதில்லை. இது எமக்கு தேவையும் இல்லை.
வண்க்கம் ஜுட் அவர்களே!
நீங்கள் யார் என்பதனை இங்கிருக்கும் உண்மையான தமிழர்கள் அறிவார்கள்.
[size=16] ஆகா! நல்லது. நான் எழுதும் கருத்துக்களை படித்து என்னை அறிந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி.
Mathuran Wrote:எதற்கெடுத்தாலும் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தையும் தமிழீழத்தேசியத்தலைவரிடமும் குறைகாண்பதிலேயே குறியாக இருக்கின்றீர்களே உங்களின் நோக்கம் புரியாத முட்டாள் தமிழரல்லர் நாம்.
[size=16]
எங்கே தேசியத் தலைவர் மீதும் அரசியல் ஆலோசகர் மீதும் குறை எழுதியிருக்கிறேன்? எங்கே மீண்டும் ஒரு முறை நான் எழுதியதை படியுங்கள் மதுரன், தமிழ் புரிகிறதா என்று பார்க்கலாம்!.
Mathuran Wrote:சாள்ஸ் அன்ரனி என்னும் பெயரினை தனது மகனிற்கு தேசியத்தலைவர் வைத்து மகிழ்ந்தது, சாள்ஸ் அன்ரனி என்னும் ஓர் சிறந்த மனித நேயம் கொண்ட போர்வீரன் ஈழத்தமிழரின் இன்னைலைத் துடைக்க புறப்பட்டான் . அப்படிப்பட்ட ஒரு போர்வீரனை கௌரவித்து அவரை நினைவுகொள்ளும் முகமாக அப்பெயரினை தேசியத்தலைவர் தனது மகனிற்கு சூட்டியமையானது ஓர் சிறந்த செயலாகவே தமிழர்கள்ளால் பார்க்கப் படுகின்றது.
[size=16]
ஆகா! அருமை! அதைத்தான் நானும் எழுதியிருந்தேன். கருத்தொருமித்து எழுதியிருக்கிறீர்கள். கொஞ்சமாவது உங்களுக்கு தமிழ் அறிவு இருப்பது பற்றி மகிழ்ச்சி.
Mathuran Wrote:இவை அனைத்தும் இருக்க ஜுட் அவர்களே! இவ்வளவு பார்பானுக்கு வக்காலத்து வாங்கும் நீங்கள் ஏன் தமிழ் பெயரல்லாத ஜுடெ என்னும் புனைப்பெயரில் வந்துள்ளீர்கள்?
[size=16]
நீங்கள் மதுரன் என்ற தமிழ் புனை பெயரில் வருகிறீர்கள். களம் அனுமதிப்பதால் வருகிறீர்கள். உண்மைப்பெயர் என்றெல்லாம் பொய் எழுதாதீர்கள். என்ன பிறப்பு அத்தாட்சிப்பத்திரம், கடவுச்சீட்டெல்லாம் காட்டி நிருபிக்க போகிறீர்கள் அப்படித்தானே?
Mathuran Wrote:சாதிகள் இல்லையடி பாப்ப என பாரதியார் பாப்பான்களுக்குதானே சொல்லிச் சென்றார். தயவு செய்து பாரதியின் பாடல்களை ஜுட் போன்றவர்கள் படிப்பது நல்லது.
[size=16]
ஆக பாரதி உங்களுக்கும், வேளாளருக்கும், சாதி வேற்றுமை பாராட்ட வேண்டாம் என்று சொல்லவில்லை ஆகவே நீங்களும் ஆறுமுகநாவலர் வழியில் பள்ளர், பறையர் எல்லாம் எங்கள் வாசல்படி மிதிக்க விடமாட்டோம், எங்கள் கோவில்களில் அண்டவிட மாட்டோம் என்று சொல்கிறீர்கள் அப்படித்தானே?
இப்படித்தானா "உண்மையான தமிழர்களின்" தமிழீழம் அமையப்போகிறது?

