11-05-2003, 09:41 AM
தமிழ்ப் பத்திரிகை நிறுவனத்தின் வாகனம் ஆமர் வீதியில் ஆயுத பாணிகளினால் கடத்தல்
கொழும்பு ஆமர் வீதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை தமிழ்ப் பத்திரிகை நிறுவனமொன்றின் வானொன்று கடத்திச் செல்லப்பட்டுள்ளது.
கைத்துப்பாக்கி, கத்திகள் ஆகியவற்றுடன் வந்த ஐவர் கொண்ட கோர்;டிýயொன்றே சாரதியைத் தாக்கி விட்டு வானை கடத்திச் சென்றுள்ளதாக கொட்டாஞ்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆட்டோ ஒன்றில் வந்த இக்குழு ஆமர் வீதியில் வீதி சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள இடத்தில் காத்திருந்த வானையே இவ்வாறு கடத்திச் சென்றுள்ளது.
சாரதி ஆசனத்தில் அமர்ந்திருந்த சாரதியை துப்பாக்கி, கத்திகள் ஆகியவற்றைக் காட்டிý கொலை மிரட்டல் விடுத்து வெளியே இழுத்து தள்ளி விட்டு வானுடன் தலை மறைவாகியுள்ளனர்.
இதேவேளை இவர்கள் வந்ததாக சந்தேகிக்கப்படும் ஆட்டோச் சாரதி, காயங்களுடன் கிடந்த வான் சாரதியை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாகத் தனது ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு வேறு வழியில் சென்று வான் சாரதி பொலிஸ் நிலையம் செல்வதையும் தடுத்துள்ளார்.
தான் ஏமாற்றப்பட்டு விட்டதை அறிந்த வான் சாரதி அங்கு ஆட்டோவிலிருந்து பாய்ந்து பின்னர் ஆமர் வீதிப் பொலிஸ் காவல் நிலையத்திற்குச் சென்று முறையிட்டுள்ளார்.
15 இலட்சம் ரூýபா பெறுமதியான இந்த வான் கடத்தல் தொடர்பாக கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சந்தன கலபதி தலைமையிலான குழு விசாரணைகளிலும் தேடுதலிலும் ஈடுபட்டுள்ளது.
தினகரல்