09-06-2005, 08:48 AM
narathar Wrote:பிராமணியம் சிறந்த ஒரு கோட்பாடு என்று இது வரை வாதிட்ட நீர் இப்போது இப்படிப் போராடுங்கள் அப்படிப் போராடுங்கள் என்று சொல்கிறீரே,உமக்கு என்ன நடந்தது.
உமது வாதங்கள் ஏன் எப்போதும் குழப்பமானவயாக இருக்கிறது?
ஆயிதப் போராலேயே அடக்குமுறயய் வெல்லலாம் என்பது நீர் சொல்லித் தெரிய வேண்டியதில்லய்,உமக்கு அப்படி உபதேசிப் பதற்கும் எந்தத் தகுதியும் இல்லை.
எமது போரட்டத்ததை கண்டு பிராமணர் இந்தியாவில் பயப்படுவது, அங்கேயும் அடக்கப் படுவோர் ஆயுதம் ஏந்துவர் என்பதாலேயே. நேற்று நடந்த கண்ணி வெடித் தாக்குதலில் வட இந்தியாவில் 25 பொலிசார் இறந்திருப்பதைக் கேட்டிருப்பீர்,அங்கும் தாழ்த்தப் பட்ட மக்கள் ஆயிதம் ஏந்திப் போராடுகின்றனர்.ஈழ விடுதலை ஒடுக்கப் பட்ட மக்களுக்கு உலகெங்கும் நம்பிக்கயைக் கொடுக்கும்.ஒடுக்கப் பட்ட மக்களாகிய நாமும் ஒடுக்கப் படுவோருடனேயே எமை அடயாளம் காட்டுவோம்.காலம் காலமாக ஒடுக்கிய பிராமணியத்தோடு அல்ல.
பிராமணியர்களும் அவர்களின் பிராமணியம்...ஒரு காலத்தில் சமூகத்தில் செல்சாக்குப் பெற்றிருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை...! மேற்கில் கிறிஸ்தவம் எப்படி சமூகத்தில் செல்வாக்குச் செலுத்தியதோ..அதேபோல்...இதுவும் இந்திய உபகண்டத்தில் செல்வாக்கு மிக்கதாக இருந்தது என்பது உண்மை..!
ஒரு காலத்தில் கிறிஸ்தவ மேலாதிக்கத்துக்குள் வாழ்ந்தாலும் பல மேற்குலக விஞ்ஞானிகள் கிறிஸ்தவக் கோட்பாடுகளுக்கு எதிரான விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களை துணிந்து மேற்கொண்டனர்..தங்கள் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்து சாதித்தனர்...! அவற்றைக் கொண்டு இன்று பெரும் விஞ்ஞான வளர்ச்சிகளையும் புரட்சிகளையும் கண்டுவிட்ட மேற்குலக சமூகத்திடை கிறிஸ்தவமும் அதன் கோட்பாடுகளும் இன்னும் வாழுகின்றதுதான்..இல்லை என்று கூறமுடியாது...! அதற்காக யாரும் அதை எதிர்த்து தங்கள் நேரத்தையும் திறமையையும் இப்படி உங்களைப் போல வீணடிப்பதில்லை...! சாதியம் வேண்டாம் என்பவர்கள்..பெரியாரின் பிராமணியன் என்ற சாதி உச்சரிப்பையும் எதிர்ப்பையும் தூக்கிப் பிடிப்பீர்கள்..அதை நவீன வடிவமாக சமூகத்துக்கு காட்டவும் செய்வீர்கள்..! உங்கள் வெற்றுக் கூச்சல்களை விட்டு நாலு தமிழ் குடும்பத்தை இரண்டு ஆண்டுகள் மேற்குலக மக்களோடு சேர்ந்து வாழ விடுங்கள்..அவர்களிடம் சாதியம் தன்பாட்டில் மறையும் அதிசயம் காண்பீர்கள்..! சாதியத்தை வளர்ப்பது பிராமணியமல்ல...அதை எதிர்ப்பதாகச் சொல்லும் நீங்களே..!
ஒரு காலத்தில் கிறிஸ்தவக் கோட்பாடுகள் முன்னேற்றத்துக்கு தடை போட்டது என்று கிறிஸ்தவத்தை எந்த மேற்குலக பகுத்தறிவாளனும் இன்று எதிர்க்கவில்லை..விரும்பியவர்கள் இன்னும் பின்பற்றுகிறார்கள்..தான்..! அதற்கு சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது..அவர்களை யாரும் தொந்தரவும் செய்வதில்லை..! அதேபோல் கிறிஸ்தவம் இப்படிச் சொல்கிறதே என்று அதை எதிர்த்து தங்கள் நேரத்தையும் திறமையையும் வீணடிக்காமல்..தங்கள் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுப்பதையும்.. தாங்கள் தெரிவு செய்த பாதையில்.. தங்கள் தனித்துவத்துடன்... வசதிகள் தேவைகளை பூர்த்தி செய்யப் பயணிப்பவர்களாகவே மேற்குலக மக்கள் இருக்கின்றனர்..!
ஆங்கிலேயர்கள் இந்திய உபகண்டத்தை ஆண்ட போதும்... அங்கு சிறப்பான சமூக விடயங்களை அவதானித்த போதும்..தங்கள் தனித்துவங்களை விட்டு புதுமை என்று இந்தியக்கலாசாரத்தை உள்வாங்கவில்லை...! உங்களைப் போல போன இடத்தில் கண்டதோடு தொற்றிக் கொள்ளவும் இல்லை..!
அதனால்தான் இன்றும் மேற்குலகம் உலகில் ஆதிக்கம் செய்யவல்ல தனக்கான தனித்துவத்துடன் புதிய நாகரிக நடைமுறைகளை தந்து கொண்டிருக்கிறது..அதைப் பின்பற்றுதலும் உட்செருகுவதும் உங்கள் புதுமையாகியும் உள்ளது..!
இன்று தமிழர்களின் அடையாளம் என்பது மேற்குல அடையாளங்கள் சார்ந்திருப்பது என்ற புதுமை படைக்கப்பட்டு வருகிறது..அதற்கு இளைய தலைமுறையின் இரண்டும் கெட்டான் தெளிவற்ற சிந்தனையை கனகச்சிதமாகப் பயன்படுத்தியும் வருகிறீர்கள்..! உண்மையில் அவை தமிழர்களது புரட்சியும் அல்ல தேடலின் மாற்றமும் அல்ல போன இடத்தில் தவிர்க்க முடியாமல் பொறுக்கிக் கொண்டவை..! தமிழர்கள் மேற்குலக்கத்தினரது கலாசார நடைமுறைகளை கொள்ளை அடித்ததால் தான் அது சாத்தியமானதே தவிர அவை தமிழர்களின் தனித்துவ சிந்தனையின் சிரிஷ்டிப்புக்கள் அல்ல..! அப்படி தமிழர்கள் குறிப்பாக நீங்கள் செய்யப் போவதும் இல்லை..!
தமிழர்களுக்கு என்றிருந்த அவர்களை தனித்துவமாக இனங்காட்டிய ஒரு சில கலாசார தனித்துவங்களையே தமிழர்களே இனங்கண்டு தற்காலிகமாகக் கூடப் பின்பற்ற வெளிப்படுத்த வெட்க்கப்படும் இன்றைய புதிய தமிழர்கள் உலகில்...பழைய பிராமணியம் உங்களை என்ன செய்துவிடப் போகிறது என்று பயந்து வெருண்டு பிதட்டித் திருகிறீர்கள்...என்பதுதான் இன்னும் புரியவில்லை...! உங்களிடம் உங்கள் தனித்துவத்தை பாதுகாக்க வல்ல சிரிஷ்டிப்புக்கு வழியில்லை...மற்றவர்களின் நடைமுறைகளில் மயங்கி அதை உங்களதாக்கி போலிப் பெருமை பேசிக்கொண்டு தமிழன் என்று சொல்லித் திருகிற நீங்கள் பிராமணியத்தை ஏன் கண்டு பயப்பிட வேண்டும்..அது உங்களை எனி எதுவும் செய்யப் போவதில்லை..!
அந்த வகையில் பிராமணியம் உங்களுக்கு ஒரு பெரிய பிரச்சனையும் அல்ல... நிச்சயம் உங்களை நெகிழ்வுத்தன்மை கொண்ட மேற்குலக நாகரிகம் கைவிடாது...அதையே நாளை தமிழரின் அடையாளம் என்று சொல்லி... தமிழன் நானே என்றும் சொல்லத்தான் போகிறீர்கள்...அதுவே புதுமையாகவும் உங்களால் வரவேற்கப்படும்..! பிறகேன் பிராமணியத்தைக் கண்டு இன்னும் அஞ்சுகிறீர்கள்.....ஓ..நீங்கள் அந்த இரண்டும் கெட்டான் நிலையில் இருக்கிறீர்கள் போல..கால வர உங்களுக்கும் பிராமணிய எதிர்ப்பு என்பது தேவையற்றது என்பது புரியும்..!
நன்றிங்கோ...தொடருங்கோ...உங்கள் போலிப் பின்பற்றல்களையும்...ஏமாத்து வித்தைகளையும்...தேவையற்ற எதிர்ப்புப் பிதட்டல்களையும்..! பிராமணியத்தை எதிர்க்க உங்களுக்கு எத்துணை தகுதி இருக்கென்று நீங்களே உங்களைக் கேட்டுக் கொள்ளுங்கள்..! தனித்துவம் காக்கும் பிராமணியமா புதுமை புரட்சி என்று அதைத் தொலைக்கும் நீங்களா உயர்ந்தவர்கள்...தீர்மானியுங்கள்..!
இப்படி வெற்றுக் கூச்சல் போட்டு தமிழன் என்று உரிய அடையாளங்களுடன் தமிழ் பேசி வாழும் சில உண்மைத் தமிழனை தலைகுனிய வைக்காமல் இருந்தீர்கள் என்றாலே அது பெரிய விசயம்...இத்தனை ஆதிக்கத்துக்குள்ளும் பிராமணன் பிராமணியம் காக்கிறான் என்றால் அவனே உங்களை விட உறுதியானவன்...! அதுதான் அவனின் வலிமை...உங்கள் பலவீனம்..! அதுதான் நீங்கள் அடக்கப்பட்டீர்கள்...அவன் ஆள்பவனானான்...! அதையேதான் இன்னும் தொடருறீர்கள்..! மேற்குலகப் பழமைக்குள் புதுமை தேடும் நீங்கள்... புரட்சியாளர்கள்...நன்றி வணக்கம்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

