09-06-2005, 04:53 AM
ஈழத்தமிழ் போராட்டத்துக்கு சாதி மத வேறுபாடுகளின்றி ஒட்டுமொத்தமான ஈழத்தமிழரும் ஆதரவளிக்கிறார்கள். காசோலைக்கு மதம் பரப்பும் கிறிஸ்தவர்களும், அந்த மதத்தை சேர்ந்த அடேல் பாலசிங்கமும், கிறிஸ்தவன் மாவீரன் சார்ள்ஸ் அன்ரனி நினைவாக தனது மகனுக்கு அதே கிறிஸ்தவ பெயரிட்டு மகிழ்ந்த தலைவர் தலைமையில், எமது மக்கள் வேளாளரும், பிராமணரும், மற்றும் எல்லாரும் ஒன்றாக ஒரே கொள்கையுடன் இருக்கிறார்கள். பிராமணியம் எமது மக்களுக்குள்ள ஒரு பிரச்சினை. அதை காப்பதும், வளர்ப்பதும் எமது மக்கள் மத்தியில் வேளாளர். அதற்காக அவர்கள் தமிழீழ போராட்டத்தின் எதிரிகள் அல்ல.
அதே வேளை எமக்கு இந்திய ஆதரவு இனிமேலும் தேவையில்லை. இந்திய தமிழரின் பிராமண போர் எமது பிரச்சினையல்ல. எமது தமிழீழ போராட்டத்துக்கு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில், இந்தியாவிலும் பார்க்க நிறைந்த அளவில் மதிப்பும், ஆதரவும் உண்டு. இந்த ஆதரவு இந்திய எதிர்ப்பை சமப்படுத்த போதுமானது. இந்திய பிராமணரை எதிர்த்து, இந்திய ஆதரவு கிடைக்க போவதில்லை. இது எமக்கு தேவையும் இல்லை.