09-06-2005, 02:48 AM
preethi Wrote:1879 இல் ஆறுமுக நாவலர் மறைந்து விட்டார். ஆறுமுக நாவலர் தமிழுக்குச் செய்த சேவை அளப்பரியது. ஈழத்தமிழ்ச் சமுதாயம் மாறி விட்டது. நாவலர் காலத்து நிலையில் ஈழத்தமிழர்கள் இல்லை.
பெரும்பான்மையான் வெள்ளாளத் தமிழர்களின் ஆதரவில்லாமல், ஈழவிடுதலைப் போராட்டம் இந்தளவுக்கு வளர்ந்திருப்பதாக வாதாடுவது விதண்டா வாதம்.
சிங்களவர்கள் இந்த வெள்ளாள எதிர்ப்பை பாவித்துத் தமிழரைப் பிரிக்க நினைத்துத் தோற்ற பின்பும், ஒரு நூற்றான்ண்டுக்குப் பின்னோடிப் போய் ஆறுமுக நாவலரைக் காட்டி ஈழத்தமிழர்களைச் சாதியடிப்படையில் பிரிக்க நினைக்கும் JUDE இன் அடிப்படை நோக்கம் என்னவென்று ஆண்டவனுக்குத் தான் தெரியும்.
ஆறுமுகநாவலர் மறைந்தாலும், அவர் கொள்கைகளோ, அல்லது அவற்றை தீவிரமாக பின்பற்றுபவர்களோ, இன்னமும் ஈழத்தமிழ் சமுதாயத்திலிருந்து மறையவில்லை. ஆறுமுகநாவலரின் சைவசமய நெறிமுறைகள், பிராமணிய கோட்பாடுகள், சாதி அடக்குமுறைகள் உட்பட இன்றும் ஈழத்தமிழர் மத்தியில் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை பிராமணர் செய்யவில்லை. JUDE உம் செய்யவில்லை. வேளாளர் செய்கிறார்கள். யாருடைய கற்பிப்பு? ஆறுமுகநாவலரின் சாதி அடக்குமுறை கற்பிப்பு. இது ஈழத்தமிழரின் மத்தியில் புரையோடிப்போன பிரச்சினைகளில் ஒன்றேயன்றி பிராமணர் ஈழத்தமிழருக்கு ஒரு பிரச்சினையல்ல.
இன்றைக்கும் ஈழத்தமிழர் மத்தியில், சாதி அடிப்படையில் வாசல்படி மிதிக்க விடாதவர்களும், தண்ணீர் குடிக்க கொடுக்காதவர்களும், பெரும்பான்மையாக இருக்கிறார்கள். இது ஆறுமுகநாவலர் காலத்து கதையல்ல. இன்றைய நிலை.
அதே வேளை ஈழத்து பிராமண குடும்பங்களில் இருந்து விடுதலைப்;புலிகள் அமைப்பில் இணைந்து போராடி மாவீரரான இளைஞர்களும் இருக்கிறார்கள். ஈழத்தில் பிராமணர் தமிழீழ விடுதலைக்கு ஒரு பிரச்சனையல்ல. பிராமணியம் ஈழத்தமிழருக்கும் ஒரு சமுகபிரச்சினை. ஆனால் இங்கு பிராமணியத்தை காத்து வளர்ப்பது வேளாளரேயன்றி பிராமணரல்ல. ஆகவே பிராமணியத்தை வளர்க்கும் வேளாளரே ஈழத்தமிழருக்கு ஆபத்தானவர்கள்.
JUDE பிராமணியத்தையோ, சாதி அடக்குமுறையையோ, சாதி பிரிவினையையோ வளர்க்கவில்லை. ஆறுமுகநாவலரின் சைவநெறிமுறை வளர்க்கிறது. அதை பின்பற்றுபவர்கள் கற்பிப்பவர்கள் வளர்க்கிறார்கள்.

