09-06-2005, 01:54 AM
ஈழத்துப் பிராமணர்கள் பல்லுப் பிடுங்கிய பாம்புகள் ஆனால் அவர்களிடம் அதிகாரத்தைக் கொடுத்துப் பார்த்தால் தெரியும், இவர்களின் குணத்தையறிந்து தான் எங்களின் முன்னோர்கள் பிராமணருக்குச் சொந்தமாக எந்தக் கோயிலையும் விட்டு வைக்கவில்லை. அவர்களை கோயிலில் வேலைக்கு மட்டும் அமர்த்திக் கொண்டு திறப்புக் கோர்வையை தங்களிடம் வைத்துக் கொண்டார்கள். ஆனால் இன்று கனடாவில் பிராமணர்களிடம் கோயிலைச் சொந்தமாக விட்டு, அவர்களைத் தாங்களாகவே கனடாவிலுள்ள இந்துத் தமிழர்களின் அதிபதிகளாக முடி சூட விட்டு விட்டு, காசை மட்டும் கொடுத்து விட்டுக் கைகட்டி வாய் புதைத்து நிற்கிறோம்.
இலங்கையில் பிராமணியத்தின் அடக்கு முறை குறைவு என்பது உண்மை. தமிழீழப் போராட்டத்துக்கு உபத்திரவம் தருவது இந்தியப் பிராமணியம். பிராமணர்கள் எங்கிருந்தாலும் பிராமணர் என்ற முறையில் ஒன்று படுவார்களேயொழிய தமிழர் என்ற முறையிலல்ல.
பஞ்சாபி பிராமணரும், தெலுங்கு பிராமணரும், தமிழ்நாடு பிராமணரும், ஈழத்துப் பிராமணரும் ஒன்றாக இணைவார்கள். தமிழீழ விடுதலைக்குத் தொல்லை தரும் தமிழ் நாட்டுப் பிராமணர்கள், தங்களுக்குத் திராவிட இயக்கங்களிலும், இந்தியத் தமிழர்களிலுள்ள கோபத்தில், எங்களைப் பழி வாங்கும் போது, நாங்கள் மட்டும் எதற்காக ஈழத்துப் பிராமணீயம், இந்தியப் பிராமணியம் என்று வேறு படுத்த வேண்டும். எல்லாம் ஓரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். ஈழத் தமிழரையும், ஈழத்தின் பெண் விடுதலைப் போராளிகளையும், இழிவு படுத்தும், தமிழ்நாட்டுப் பிராமணருக்குப் பாடம் படிப்பிக்க, நாங்கள் இலங்கையிலுள்ள பிராமணரை ஆதரிப்பதை நிறுத்த வேண்டும்.
ஈழத்துப் பிராமணர்களின் முகத்திரையைக் கிழித்து அவர்களின் தமிழ்ப் பற்றை அறிய வேண்டும். அதை விட, இந்த 21ம் நூற்றாண்டில் எதற்காக நாங்கள் ஓரு குறிப்பிட்ட சாதியை மட்டும், குருக்களாக அனுமதித்து, அதை ஊக்குவித்துச் சாதியை வளர்க்க வேண்டும். ஏன் எந்த இலங்கைத் தமிழரும் குருக்களாக வரக்கூடியவாறு பயிற்றுவிக்கக் கூடாது. தமிழ் நாடு அரசு, அர்ச்சகர் பயிற்சிக் கல்லூரியில் பிராமணரல்லாத தமிழர்களை பயிற்றுவிக்கிறார்கள். அங்கு கல்வி கற்று முடித்த பயபக்தியுள்ள ஒரு பிறப்பால் பிராமணரல்லாத ஒரு அர்ச்சகரை கனடாவுக்கு ஏன் அழைப்பிக்க கூடாது. கனடாவிலுள்ள பிராமணரின் பேராசையையினாலும், அகங்காரத்தாலும் அருவருப்படைந்த கோயிலுக்குப் போவதை தவிர்த்த பலரை எனக்குத் தெரியும்.
தமிழர்களுக்கிடையிலுள்ள பிரிவினைகளை படம் பிடித்துக்காட்ட இதுவல்ல நேரம், எங்களின் விடுதலைப் போரின் முக்கியமான இந்தக் காலகட்டத்தில் எங்களுக்கிடையில் ஒற்றுமை தேவை. 1879 இல் ஆறுமுக நாவலர் மறைந்து விட்டார். ஆறுமுக நாவலர் தமிழுக்குச் செய்த சேவை அளப்பரியது. ஈழத்தமிழ்ச் சமுதாயம் மாறி விட்டது. நாவலர் காலத்து நிலையில் ஈழத்தமிழர்கள் இல்லை. பெரும்பான்மையான் வெள்ளாளத் தமிழர்களின் ஆதரவில்லாமல், ஈழவிடுதலைப் போராட்டம் இந்தளவுக்கு வளர்ந்திருப்பதாக வாதாடுவது விதண்டா வாதம்.
சிங்களவர்கள் இந்த வெள்ளாள எதிர்ப்பை பாவித்துத் தமிழரைப் பிரிக்க நினைத்துத் தோற்ற பின்பும், ஒரு நூற்றான்ண்டுக்குப் பின்னோடிப் போய் ஆறுமுக நாவலரைக் காட்டி ஈழத்தமிழர்களைச் சாதியடிப்படையில் பிரிக்க நினைக்கும் JUDE இன் அடிப்படை நோக்கம் என்னவென்று ஆண்டவனுக்குத் தான் தெரியும்.