09-06-2005, 12:12 AM
stalin Wrote:பார்ப்பானியத்தையோ பாம்பையோ முதல் அடிக்கவேண்டுமென்றால் பார்ப்பனியத்தை அடிக்கவேண்டுமெனபார்... இந்தியன் அரசில் ஈழசார்பு கட்சிகள் இருந்தும் இந்திய பார்ப்பானியம் அரசஇயந்திரம் நிர்வாக த்தில் இருப்பதால் ஈழத்தின்போராட்டத்திற்க்கு எதிராக செயல் படுவதை அவதானிக்கலாம்... பிராமணியம் எவ்வளவு அடக்குமுறையை வைச்சிருந்தது என்பது பழைய இலக்கியகங்கள் வாசிததால் விளங்கும்.அடக்குவர்க்கு எதிராக ஒன்று சேருவது மனிதநேயம்..அதைவிட்டு பெண்ணியம் தொடக்கம் பிராமணியம் வரை அடக்குவர்களுக்காக வார்த்தைகளை கருத்துக்களை தேடு வாதிடும் குருவி போன்றவர்கள் சமூகத்திற்க்கு ஆபத்தானவர்கள் ...இவர்களுடன் சிறிதுகாலம் வாதி்டிருக்கிறேனென நினைக்க வெட்கமாய் இருக்கிறது....
<b>இலங்கையில் பிராமணியத்தின் அடக்குமுறையை அமுல்படுத்துபவர்கள் வேளாளர்கள்.</b> பறையர், நளவர், பள்ளர், கரையார் என்று சாதி சொல்லி, கோவிலுக்குள் விடாதவர்கள், வீட்டு வாசல்படி ஏற விடாதவர்கள், தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்காதவர்கள், காதல், கலியாணங்களுக்கு குறுக்கே நிற்பவர்கள், ஏன் அரசியலில் கூட மேயர் பதவி, போன்ற பதவிகளில் வேளாளர் தவிர மற்றவர்களை வரவிடாமல் தடுக்க முயற்சித்தவர்கள் எல்லாம் யாழ்ப்பாண வேளாளர்களே. இவர்களுக்கு முன்னோடியாக இருந்தவர் ஆறுமுகநாவலர். அவர் தம்மையும், தம்மை சார்ந்தவர்களையும் "உயர்சாதி வேளாளர்" என்று குறிப்பிட்டிருக்கிறார். அவர் வழி வந்தவர்கள் சாதி அடிப்படையிலேயே தமிழீழ விடுதலைப்போராட்டத்தை எதிர்த்தனர். கொல்லப்பட்ட இன்ஸ்பெக்ரர் பஸ்தியாம்பிள்ளை, லக்மன் கதிர்காமர் ஆகியோர் தம்மோடு ஒத்த சிங்கள அதிகாரிகளுக்கு தமிழீழ போராட்டம் கீழ்சாதிகளின் போராட்டம் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். அதை பிரேமதாசாவின் விசேட விசாரணை அதிகாரியாக இருந்த சிங்களவர் ஒருவர் என்னிடம் நேரிலே கேட்டபோது அவருக்கு நான் தெளிவான விளக்கம் கொடுத்திருந்தேன். ( பிரேமதாச சிங்களவர்கள் மத்தியில் ஒடுக்கப்பட்டவர்களின் நண்பன். இவர் கொல்லப்பட்ட உடனேயே கண்டி உயர்சாதி சிங்களவர்கள் வெடி கொழுத்தி கொண்டாடினார்கள்.)
இப்படி சாதித்துவேசத்தால் மறைமுகமாக என்றாலும் தமிழீழ போராட்டத்தை எதிர்க்கும் வேளாளர் நிறையவே இருக்கிறார்கள். இலங்கை தமிழர் மத்தியில் பிராமணர் குறைவு. இருப்பவர்களுக்கும் பெரும் அரசியல் பலம் இல்லை. ஆனால் வேளாளரில் தமிழீழ எதிர்ப்பை உள்ளுக்குள் வைத்து புகையும் வேளாளர் நிறையவே இருக்க கூடும். இவர்களால் ஏற்படும் பாதிப்பு இலங்கை பிராமணரால் ஏற்படும் சாத்தியம் குறைவு.

