09-05-2005, 11:06 PM
preethi Wrote:கிருபன்,
இந்தியப் பிராமணியம் வேறு, இலங்கைப் பிராமணியம் வேறல்ல, அது அன்று தான். பிராமணீயம் தமிழுக்கும், தமிழருக்கும் எதிர்ப்பு, அது இந்தியாவிலிருந்தாலென்ன, இலங்கையிலிருந்தாலென்ன. பிராமணர்கள் எங்கிருந்தாலும், தாங்கள் தமிழர் என்று நினைப்பதில்லை. ஒரு இலங்கைப் பிராமணன் ஒரு தெலுங்குப் பிராமணனிடம் காட்டும் பரிவையும், நெருக்கத்தையும் இன்னொரு இலங்கைத் தமிழனிடம் காட்டாமாட்டான்.
பிராமணர்கள் இல்லாத கோயில் என்றால் நம்மவர்கள் அங்கு போக மாட்டார்களே. புனிதம் குறைவான இடம் என்று நினைத்துவிடுவார்கள்.
பேசாமல் ஒரு காளி, அல்லது வைரவர் கோயில் ஒன்றை ஆரம்பித்து தமிழில் தேவாரங்களையும் படியுங்கள். வைரவர் மடை, காளிக்கு நேர்த்தி என்றால் கூட்டம் அலை மோதும். அதிக வரும்படியும் கிடைக்கும்.
மாமிசம் சாப்பிடாத ஒருவராகத் தேடிப் பிடிக்கவேண்டும். கஷ்டமாக இருக்காதா? வேள்வி நடத்த்தினால் இந்தப் பிரச்சினையும் இருக்காது.
<b> . .</b>

