09-05-2005, 10:05 PM
kirubans Wrote:காலங்காலமாக பிராமணியம் எவ்வாறு மற்றைய சமூகங்களை அடக்கியாண்டு வருகின்றது என்பது பலருக்குத் தெரிந்திருக்கும். தற்போது பிராமணியம் என்பது ஒரு சமூகத்தை மட்டும் சார்ந்ததல்ல. வேறு சாதியினரும் பிராமணக் கொள்கைகளைக் கையாண்டு உழைக்கும் ஏழை மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகின்றனர்.
ஈழத்தில் பிராமணர்கள் என்ற சாதியினர் இவ்வாறு செய்யமுடியாமல் போயிற்று. எனினும் தமிழ் மேட்டுக்குடியினர் பிராமணியக் கொள்கைகளை தம் கையில் எடுத்து மற்றையோரை அடக்கியாண்டனர். 70களின் இறுதிவரை இந்த ஆதிக்கம் இருந்துதான் வந்தது. அவை முற்றிலும் அழிந்து போகாமல் தற்போதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்கின்றன. எனவே பிராமணியத்தை தூக்கிப் பிடிப்பது சிலருக்குத் தேவையாக இருக்கலாம்.
உங்கள் பார்வை சரியோ தவறோ...பிராமணியத்தையோ...அதன் கொள்கைகளால் பயன் பெறுபவர்களையோ வெல்ல வேண்டின்...உங்களை அவர்களுக்கு நிகராக அவர்களின் கொள்கைகளுக்கு வலுவாக எடுத்து வாருங்கள்..! அதைவிடுத்து அவர்களைத் திட்டித்தீர்ப்பதால்..அவர்கள் பலவீனமாகப் போவதும் இல்லை நீங்கள் பலமடையப்போவதும் இல்லை..! அதனால்தான் சாதியம் என்பது போன்ற பிராமணிய விளைவுகள் இன்னும் தப்பிப்பிழைக்க முடிகிறது...! அதன் ஆணி வேர் பிராமணியம் இட்டதாக இருந்தால் அதை ஆதிக்கம் செய்யவல்ல இன்னோர் மரத்தை நீங்கள் நாட்டுங்கள்...அதுதான் தேவை...அவர்களின் ஆணிவேரை நீங்கள் அறுக்க முயல்வது உங்களின் பலவீனத்தை அவர்களுக்கு அடையாளப்படுத்தும்...அதுமட்டுமன்றி அவர்கள் தங்கள் இருப்பை இழக்க இலகுவில் சம்மதிக்கவும் போவதில்லை...! அவர்களை ஆணிவேரறுக்க முனைந்து தங்கள் சிந்தனைகளை தங்களோடே சமாதியாக்கிக் கொண்டனர் சிலர்...அவர்களில் பெரியாரும் அடக்கம்...! எனவே தேவை எதுவோ அதைச் செய்யுங்கள் பகை வளர்ப்பதை விடுங்கள்...அறிவுபூர்வமாக சிந்தனைகளினூடு தேவையான மாற்றங்களை வலியுறுத்துங்கள்...! வரவேற்கலாம்...! பிருத்தி உங்களுக்கும் தான்..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

