Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உடல் உறுதி பெற
#1
உங்கள் குழந்தைக்கு நாரிப்பகுதிக்கும் முழங்கால் பகுதிக்கும் இடைப்பட்ட உடல் பாகங்கள் பருத்துக் காணப்படுகிறதா?

அப்படியாயின் உங்கள் குழந்தை

1 ) போதிய அளவு உடற்பயிற்சி செய்வதில்லை.
2) தொடற்சியாக உங்கள் குழந்தை தொலைக்காட்சியை பாற்கின்ற தன்மை.
3) கேம் போய் எனப்படும் விழையாட்டுடன் அதிக நேரத்தை செலவழிக்கிறான்.
4) கணணியோடு அதிக நேரத்தை செலவழிக்கிறான்.

இத்தகைய காரணங்களினால் உங்கள் குழந்தைக்கு நாரிப்பகுதிக்கு கீழேயும் முழங்கால் பகுதிக்கு மேலேயும் பெருத்து காணப்படுவதற்கு காரணங்களாக அமைகிறது.

இதனால் உங்கள் குழந்தையின் கால்கள் அதிக பலமின்றி காணப்படும். இது நன்றன்று. உங்கள் குழந்தையை குறிப்பிட்ட நேரமே இத்தகைய பொழுதுபோக்கில் ஈடுபடுத்துங்கள். அதிக நேரத்தை தற்காலிகமாக உடற்பயிற்சிக்காக ஒதுக்குங்கள். உங்கள் செல்ல மகனோ அல்லது மகளோ உடல் உறுதி குன்றி வளர பெற்றோரோகிய நாம் துணைபோவது நன்றல்ல. குளிர்காலம் ஆரம்பமாகி விட்டது. இனி எம் குழந்தைகள் வீட்டினுள் முடங்கிக்கொள்கின்ற தன்மைகள் தான் அதிகம். அதை தவிற்து அவர்களை வெளியில் அழைத்து செல்வது எமது கடமையாகிறது. இத்தகைய குழந்தைகளிற்கு நீச்சல் நல்லதொரு உடற்பயிற்சியாக அமைகிறது. அடுத்து நாளும் குறிப்பிட்ட தூரத்தை ஓடுதல் நன்று.அடுத்து சயிக்கிள் ஓடுதல். நாரிப்பகுதியும் கால்களும் அதிக உறுதியடைகிறது. உங்கள் குழந்தைகளை இத்தகைய தன்மைகளில் இருந்து காப்பாற்றிக்கொள்வது ஒவ்வொரு பெற்ரோரினதும் கடமையாகிறது.

இந்த காரணங்களிலில்லாத குழந்தைகள் நாரிப்பகுதிக்கு கீழேயும் முழங்கால் பகுதிக்கு மேலேயும் பெருத்து காணப்படுமாயின் அதிக கொழுப்புணவை கொடுக்கிறீர்கள் என்பது பொருளாகிறது.

(மொழிபெயற்பிற்காக போனபோது அறிந்து கொண்டவை.)

நளாயினி தாமரைச்செல்வன்.
[b]Nalayiny Thamaraichselvan
Reply


Messages In This Thread
உடல் உறுதி பெற - by nalayiny - 11-04-2003, 10:04 PM
[No subject] - by vasisutha - 11-06-2003, 12:36 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)