09-05-2005, 09:48 PM
<b>நெருடல் என்ன?</b>
கும்பமா?
குத்துவிளக்கா?
குருக்களா?
இசையா?
நடனமா?
இளைஞனின் உடையா?
பெரியார்
------
பெரியார் வழியில் பிசகல் நடந்திருப்பதாக கூறுவது எதனால்?
இங்கே பெரியார் எங்கு வந்தார்?
இளைஞன் பெரியாரை நேசிப்பதால், இளைஞனை பெரியாராகவோ அல்லது பெரியாரை பின்பற்றுபவனாகவோ கற்பனை செய்துகொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல!!! இளைஞன் பொதுவுடமை பற்றிப் பேசினால், இளைஞனை கார்ல் மார்க்ஸ் ஆக கற்பனை செய்து கொள்ளாதீர்கள்.
நிகழ்வு ஒழுங்கமைப்பு
--------------
நிகழ்வு ஒழுங்கமைப்பு இளைஞனால் மேற்கொள்ளப்படவில்லை.உலகத் தமிழ்க் கலையகமும், அப்பால் தமிழுமே நூல் வெளியீட்டு நிகழ்வை ஒழுங்குசெய்தன. உலகத் தமிழ்க் கலையகம் சார்பாக நிகழ்வை ஒருங்கமைத்தவர் திரு எஸ்.கே.இராஜன் (ஐ.பி.சி). அதேபோல் உலகத் தமிழ்க் கலையகம் சார்பாக நிகழ்வை ஒழுங்கமைத்தவர் திரு. கந்தையா இராஜமனோகரன் (இலண்டன்). அப்பால் தமிழ் சார்பாக நிகழ்வை ஒழுங்கமைப்பில் பங்கேற்றவர் கவிஞர் கி.பி.அரவிந்தன் (பிரான்ஸ்). நூலாசிரியன் இளைஞன் (யேர்மனி).
உலகத் தமிழ்க் கலையகம் சார்பாக இலண்டனில் நிகழ்வை ஒழுங்கமைத்த திரு கந்தையா இராஜமனோகரன் ஒரு தமிழ், சைவப் பற்றாளர் என்பது அவரை அறிந்த பலருக்குத் தெரியும். தமிழ் இலக்கிய நிகழ்வுகள் பலதும் இவர்கள் மூலம் நடத்தப்பட்டிருக்கிறது. இலக்கியத்திற்கு உரிய இடத்தை அளிப்பவர்கள் - அந்த வகையில் இளைஞனின் படைப்பும் அவர்கள் மூலம் வெளியிடப்பட்டது. (சாந்தி அக்காவின் முதல் கவிதை நூலும் இவர்கள் மூலம்தான் இதே மண்டபத்தில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது)
நிகழ்வு அரங்கு மூன்று நிகழ்வுகளை உள்ளடக்கியிருந்தது (நூல் வெளியீட்டை மையமாகக் கொண்டு). கண்காட்சி, நூல் வெளியீடு, கலை நிகழ்வு. ஆரம்பத்தில் நிகழ்ச்சி நிரலில் கலைநிகழ்வு இருக்கவில்லை என்பதை பலரும் அறிந்திருப்பீர்கள். அதற்கு பதிலாக குறும்பட நிகழ்வே இருந்தது. ஆனால் கோவிலில் குறும்படம் திரையிடுவதில் சில சிக்கல்கள் எழுந்தன. அதனாலேயே அந்நிகழ்வு கலைநிகழ்வாக கடைசிநேரத்தில் மாற்றப்பட்டது. கலைநிகழ்வை ஒழுங்குபடுத்தும் பொறுப்பை திரு. கந்தையா இராஜமனோகரன் எடுத்துக் கொண்டார். அவர் இசை மற்றும் நடன நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தினார். எனது மூன்று கவிதைகள் மெட்டமைத்து பாடப்பட்டன (அதில் ஒன்று ஏற்கனவே இறுவட்டில் வந்த பாடல்). இரண்டு நடனங்கள் இடம்பெற்றன. இரண்டும் பரதநாட்டிய வகை.
நிகழ்வு அரங்கின் வாசலில் கும்பம் வைக்கப்பட்டது. குத்துவிளக்கு வைக்கப்பட்டது. நிகழ்வின் தொடக்கத்தில் மங்கள விளக்கு ஏற்றப்பட்டது. நூல் வெளியீட்டு நிகழ்விற்கு இடம் தந்தவர்கள் என்பதால் அவர்களை கெளரவிக்கும் பொருட்டு வாழ்த்துரை நிகழ்த்த குருக்கள் அழைக்கப்பட்டார் (நிகழ்வு ஒழுங்கமைப்பாளர்களால்).
கோவில் குருக்கள் தன்னை அடையாளப்படுத்தும் உடையில் வந்தார்.
திரு. கந்தையா இராஜமனோகரன் வேட்டி சட்டையுடன் வந்தார்.
இளைஞன் தனதுடையில் வந்தான்.
இவ்வளவும் நடந்தது. இங்கே இளைஞனின் கருத்துக்கும் (கவிதைகள் உட்பட) செயலுக்கும் என்ன முரண்? விளங்கவில்லை?
பரதக் கலை தமிழர் கலையா என்பதில் முரண்பாடுள்ள கருத்துக்கள் இருக்கலாம். தேவதாசிகள் நடனமாக இருக்கட்டும். தமிழர் நடனக் கலையின் வளர்ச்சியடைந்த வடிவமாகக் கூட இருக்கட்டும். கலையை கலையாகத் தான் இளைஞன் பார்க்கிறான். அவற்றில் அந்த இளைஞர்களின் திறமைகளைத்தான் இளைஞன் பார்க்கிறான். அடுத்தவர் கலைகளாயிருந்தாலும் அதனை கலையாக ஏற்றுக்கொண்டு இரசிப்பதில் இளைஞனிற்கு தடையில்லை. எமது தனித்துவத்தை பாதிக்கிறபோது, நம்மீது ஆதிக்கத்தை செலுத்துகிறபோது இளைஞன் அதை ஏற்பதில்லை.
திரு. கந்தையா இராஜமனோகரன் அணிந்தது கூட தமிழர் உடையா என்பதில் மாற்றுக்கருத்துக்களும் உண்டு. அதை விடுவோம். இளைஞன் அணிந்தது மேலைத்தேய உடைதான். (இளைஞன் நுல் வெளியீட்டு நிகழ்வில் மட்டும் தமிழனாக பாவனை செய்யவேண்டியதில்லை. இளைஞன் இயல்பாக எதனை அணிவானோ அதனைத் தான் நிகழ்விறகும் அணிந்தான். இதுதான் இளைஞனின் பண்பு - இது இளைஞனை அறிந்தவர்களுக்குத் தெரியும்.) இதனால் இளைஞனின் கருத்துக்கும் செயலுக்கும் என்ன முரண்பாடு என்பது தான் தெரியவில்லை.
இப்படித்தான் செய்யவேண்டும் என்கிற கட்டாயத்தையும், மூடநம்பிக்கைகளையும் இளைஞன் விரும்புவதில்லை. இப்படியும் செய்யலாம் என்கிற புதுமையைத்தான் இளைஞன் விரும்புகிறான். மங்கள விளக்கேற்றியதில் எந்த முட்டாள்தனமும் எனக்குத் தெரியவில்லை. ஒளியேற்றி நிகழ்வைத் தொடக்குவதில் நிறைவான கருத்து வெளிப்படுகிறது. ஆனால், மங்கள விளக்கேற்றனால் தான் நிகழ்வு நடைபெறுமென்றில்லை - மங்கள விளக்கேற்றாமலும் நிகழ்வை நடாத்தலாம் - அப்படி நடத்தினாலும் நிகழ்வு நடக்கும், நிறைவு பெறும். இளைஞன் இப்படித்தான்.
கோயில் குருக்களை எவரும் மதம் சார்ந்து அழைக்கவில்லை. இடத்தை இலவசமாகத் தந்தவர்கள் என்றமுறையிலேயே அழைக்கப்பட்டார். மதங்களையும் கடவுளையும் அவற்றினூடான மூடத்தையும் தான் இளைஞன் வெறுக்கிறான் - புறக்கணிக்கிறான் - ஒதுக்குகிறான். மனிதர்களை அல்ல!!!
நீங்கள் சைவக் குருக்கள் - நான் கடவுளையும் மதத்தையும் ஏற்பதில்லை - எனவே என் நிகழ்வுக்கு வராதீர்கள் - அது தீட்டு - என்று மனிதர்களை புறக்கணிக்கச் சொல்கிறீர்கள்? அப்படியானால் இளைஞனிடம் உள்ள மானுட நேயத்தை எங்கே குழிதோண்டிப் புதைப்பது?
பல கருத்து முரண்பாடுகள் இருக்கலாம் - எதிராளியாகக் கூட இருக்கலாம் - ஆனால் இங்கே இலக்கியம் என்ற ஒன்றில் தான் ஒன்றித்தோம். இதேபோலத்தான் நிகழ்விற்கு எந்தவித பாகுபாடும் காட்டாமல் ஊடகங்களுக்கு அழைப்பு விடப்பட்டது.
ஓரளவு ஊகிக்க முடிகிறது: இளைஞன் பெரியாரின் கருத்துக்கள் சிலவற்றை வெளிப்படுத்துவதால், பெரியாரையே இளைஞனுக்குள் பார்க்க விளைகிறீர்கள். இளைஞன் இளைஞனாகவே இருக்கிறான், இருப்பான். எவரையும் இளைஞன் பின்பற்றுவதில்லை. பெரியாரையும் இளைஞனும் போட்டு குழப்பிக்கொள்ளாதீர்கள்.பிள்ளையார் படத்தை நடுரோட்டில் வைத்து செருப்பால் பெரியார் அடித்தது போல் இளைஞனும் அடிக்கவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். எதிர்பார்த்தால் அது உங்கள் தவறு.
இளைஞன் தமிழன். தமிழனாக இருப்பதில் பெருமை கொள்கிறான். தமிழனாகவே இருப்பான். அதற்காக இளைஞன் தமிழனாக பாவனை செய்வதை விரும்புவதில்லை. இளைஞன் இயல்பாக இருப்பதைத்தான் விரும்புகிறான்.
நிகழ்வு ஒழுங்கமைப்பில் இளைஞனிற்கும் சில உராய்வுகள் உள்ளன. நெருடல்கள் உள்ளன. நிகழ்வின் இறுதிவரை நின்றவர்கள் நிச்சயமாக அறிந்திருப்பார்கள். எனது ஏற்புரையின் போது நான் கூறியது: "...இந்தக் கவிதை நூலின் பெயரும் உராய்வு, நிகழ்வும் உராய்வு...". உராய்வுகள் இருந்தாலும் நிகழ்வு நிறைவாய் அமைந்ததில் இதளைஞனிற்கு மகிழ்ச்சியே. இளைஞனின் கவிதை எழுதலின் ஆரம்ப காலத்தில் உற்சாகப்படுத்தியவர்கள், இளைஞனின் நண்பர்கள், இளைஞனால் நேசிக்கப்படுபவர்கள், இளைஞன் மீது பெரியதொரு எதிர்பார்ப்பை வைத்திருப்போர் என்று பலர் ஒன்றுகூடி நிகழ்வை சிறப்பித்தமை இளைஞனின் மனதுக்கு நிறைவைத் தந்தன.
இளைஞன் தானாக ஒழுங்கமைக்கும் ஒரு நிகழ்வாக இருந்தால், இளைஞனின் புதிய சிந்தனைகள் வடிவம் பெறும் - இளைஞனின் கருத்துக்கள் உருவம் பெறும். அதேபோல் எப்போதும் இளைஞனின் கருத்துக்கும் செயலுக்கும் முரண் ஏற்படுவதை இளைஞன் அனுமதித்ததில்லை - அனுமதிப்பதில்லை. இனளஞனின் செயலோடு முரண்படுமாயின் அதனை இளைஞன் கருத்தாக முன்வைப்பதில்லை.
[*** இளைஞனின் புதிய உலகம் எது? இளைஞனின் கருத்துக்கள் என்ன? என்பதை உள்வாங்காமல் - மேலோட்டமாக இளைஞனின் கருத்துக்களைப் பார்த்து - இளைஞனை பெரியாராக உள்வாங்கியதால் வந்த கருத்தாகவே இவற்றைப் பார்க்கிறேன்.]