09-05-2005, 09:31 PM
Sriramanan Wrote:kuruvikal Wrote:பிராமணியர் தான் கலாசாரம் நாகரிகம் கல்வி பொருளியல் என்று பல விடயங்களில் முன்னேறிச் சென்று சமூகங்களை சீர்ப்படுத்திய ஒரு பகுத்தறிவுக் கூட்டமாக முன்னர் விளங்கினர்..!குருவிகளே நீங்கள் கூறியவாறு பிரமாணர்கள் பல்வேறு துறைகளில் முன்னோறியிருக்கிறார்கள். அதை மறுப்பதற்கில்லை ஆனால்....!
.....................
பிராமணியத்தின் தேவை சேவை இன்று அவசியமற்று இருப்பினும் முன்னர் அவர்களே ஒரு காலத்தின் சமூக வழிகாட்டிகளாகத் திகழ்ந்திருந்தனர் என்பது மறுப்பதற்கில்லை...!
இவர்கள் முன்னர் ஆனாலும் சரி இப்பவானாலும் சரி தாங்கள் மட்டுமே முன்னேற வேண்டும் என்றே செயற்படுகிறார். ஆட்சி அதிகாரங்களைத் தங்களின் கைகளில் வைத்துக் கொண்டு தாங்கள் தவிர்ந்த மற்றைய சமூகங்கள் கல்வி கற்பதையோ அல்லது வேறு எந்த வழிகளிலோ முன்னேறுவதை இவர்கள் தடுத்தே வந்துள்ளார்கள் என்பது இவர்களின் உருவாக்கங்களான புராணங்கள் உள்ளிட்ட இலக்கியங்கள் மூலமாக அறிந்து கொள்ளலாம்.கல்வி கற்றோருக்கு காதில் ஈயம் காச்சி ஊற்றியும், வில்வித்தை கற்றான் என்பதற்காக கைவிரலையும் வெட்டி இவர்கள் மற்றைய சமூகங்களை வழிநடாத்தியுள்ளார்கள்.
அந்த வழிகாட்டிகளுக்கு சேவகம் செய்வகம் செய்யுங்கள் உங்களிற்கு பலகோடி புண்ணியங்கள் கிடைக்கும்
வணக்கம் சிறீரமணன்... நீண்ட காலத்தின் பின் வந்திருக்கிறீர்கள்..! காண்பதில் மகிழ்ச்சி..! என்ன உங்கள் பெயரிலையே பிராமணிய வாசனை அடிக்கிறதே... பாருங்கள்... நவகால புத்திசாலிகளின் அமெரிக்க ஜனநாயக சித்தாந்தத்தை உலகமே மந்தைகள் போல கடைப்பிடிக்கும் போது... பிராமணிய புத்திசாலித்தனத்தின் வெளிப்பாட்டில் வேண்டும் என்றே விதைக்கப்பட்டவற்றை ஏன் கடைப்பிடித்தீர்கள்...அது பிராமணியத்தின் குற்றமா...உங்களின் குற்றமா...! இப்போ அடக்குமுறைக்கு எதிராக சிங்களவன் சொல்லியா போராடுகிறீர்கள்...அல்லது நீங்களாகப் போராட ஆரம்பித்தீர்களா...??! பிராமணியம் விதைப்பது அடிமைத்தனத்தை என்றால்...அதையேன் அடிமைத் தனத்தில் இருந்தோர் எதிர்க்க மறுத்தீர்கள்...காரணம் உங்களுக்கு பிராமணியத்தால்தான் வாழ்வு என்ற இயலாமை எண்ணம் குடிகொண்டிருந்ததால்....! அதற்கு பிராமணியத்தை ஏன் திட்டுகிறீர்கள்...! உங்களை நீங்களல்லவா திட்டி இருக்க வேண்டும்...விழித்தெழச் செய்திருக்க வேண்டும்..! அது யார் தவறு...! நிச்சயமாக பிராமணியத்தின் தவறல்ல...! உங்களின் தவறு...! பிராமணியம் பிழைக்கத் தெரிந்தது பிழைத்துக் கொண்டது...இன்று உலகில் அமெரிக்கர்கள் போல அது அவர்களின் அன்றைய திறமையின் வெளிப்பாடு..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

