09-05-2005, 09:26 PM
சாதி, மதம், கடவுள், பார்ப்பனர், புரோகிதர், புராணம், மூடநம்பிக்கைகள் ஆகியன் இந்தியப் பொருளாதாரத்தை அழிப்பவை. அதன்மீது ஒட்டுண்ணி வாழ்க்கை நடத்துபவை. சாமி, பூசை, உற்சவம், புண்ணியம், யாத்திரை, பிறப்பு முதல் இறப்புவரை செய்யப்படும் பல்வேறு சடங்குகள் ஆகியன தனிமனிதர்களின் வருவாயையும் செல்வத்தையும் பொதுச்செல்வத்தையும் விரயமாக்குகின்றன.
தொழிற்சாலைகள், இயந்திர சாலைகள், உற்பத்திச் சக்திகள் ஆகியவற்றை வளர்ப்பதற்குப் பயன்படுத்தப்படவேண்டிய நிதியாதாரங்களும் மனித உழைப்பும் இவ்வாறு வீணாகிவிடுகின்றன. கோயில்களிலும் மடங்களிலும் மதநிறுவனங்களிலும் முடக்கப்படும் செல்வங்கள், பொருளுற்பத்டியில் பயனுள்ள முறையில் முதலீடு செய்யப்படாமல் போகின்றன.
மதம், சடங்கு, சம்பிரதாயம் என்கின்ற பெயரால் உடலுழைப்பில்லாமல், பாடுபடாமல் வயிறு வளர்க்கின்ற, பொருளீட்டுகின்ற, செல்வம் திரட்டுகின்ற புல்லுருவிக் கூட்டம் வளர்கின்றது. குறைந்த நேரத்தில் அதிக உற்பத்தியும் அதிக வருமானமும் ஈட்டுகின்ற வகையில் சரீரத்தால் பாடுபடுகின்றவர்களின் உழைப்பு நேரத்தைக் குறைப்பது பற்றிய அக்கறை முடக்கப்படுகின்றது.
"பாடுபடுகின்ற மக்களுக்குத் தங்கள் மதக்கடமை, சாதிக் கடமை என்பது மாத்திரமல்லாமல் முன் ஜென்ம கர்மத்தின் பலன் என்னும் எண்ணங்கள் புகுத்தப்பட்டு தங்கள் கஷ்டங்களையும் தரித்திரங்களையும் உணராமல்" செய்யப்பட்டு விடுகின்றது. காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை மண்வெட்டி பிடித்து வேலை செய்யும் ஏழை அதைத் தன் 'தலையெழுத்து' என்று சொல்கிறான்; பாடுபடாமல் பணக்காரனாகிறவன் அதை 'லட்சுமி கடாட்சம்' என்கிறான்.
பெரியார் : சுயமரியாதை சமதர்மம் என்ற நூலிலிருந்து.

<b> . .</b>