09-05-2005, 09:16 PM
kuruvikal Wrote:பிராமணியர் தான் கலாசாரம் நாகரிகம் கல்வி பொருளியல் என்று பல விடயங்களில் முன்னேறிச் சென்று சமூகங்களை சீர்ப்படுத்திய ஒரு பகுத்தறிவுக் கூட்டமாக முன்னர் விளங்கினர்..!குருவிகளே நீங்கள் கூறியவாறு பிரமாணர்கள் பல்வேறு துறைகளில் முன்னோறியிருக்கிறார்கள். அதை மறுப்பதற்கில்லை ஆனால்....!
.....................
பிராமணியத்தின் தேவை சேவை இன்று அவசியமற்று இருப்பினும் முன்னர் அவர்களே ஒரு காலத்தின் சமூக வழிகாட்டிகளாகத் திகழ்ந்திருந்தனர் என்பது மறுப்பதற்கில்லை...!
இவர்கள் முன்னர் ஆனாலும் சரி இப்பவானாலும் சரி தாங்கள் மட்டுமே முன்னேற வேண்டும் என்றே செயற்படுகிறார். ஆட்சி அதிகாரங்களைத் தங்களின் கைகளில் வைத்துக் கொண்டு தாங்கள் தவிர்ந்த மற்றைய சமூகங்கள் கல்வி கற்பதையோ அல்லது வேறு எந்த வழிகளிலோ முன்னேறுவதை இவர்கள் தடுத்தே வந்துள்ளார்கள் என்பது இவர்களின் உருவாக்கங்களான புராணங்கள் உள்ளிட்ட இலக்கியங்கள் மூலமாக அறிந்து கொள்ளலாம்.கல்வி கற்றோருக்கு காதில் ஈயம் காச்சி ஊற்றியும், வில்வித்தை கற்றான் என்பதற்காக கைவிரலையும் வெட்டி இவர்கள் மற்றைய சமூகங்களை வழிநடாத்தியுள்ளார்கள்.
அந்த வழிகாட்டிகளுக்கு சேவகம் செய்யுங்கள் உங்களிற்கு பலகோடி புண்ணியங்கள் கிடைக்கும்
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

