09-05-2005, 09:01 PM
narathar Wrote:"நான் மனிதனே! நான் சாதாரணமானவன், என் மனத்தில் பட்டதை எடுத்துச் சொல்லி யிருக்கிறேன். இதுதான் உறுதி. இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்று சொல்லவில்லை. ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள், மற்றதைத் தள்ளிவிடுங்கள்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்தக் குணத்தையும் என்மீது சுமத்தி விடாதீர்கள். நான் தெய்வத்தன்மை பொருந்தியவனாகக் கருதப்பட்டுவிட்டால் மக்கள் என் வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்கமாட்டார்கள். "நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள், நான் சொல்லுவது வேதவாக்கு, நம்பாவிட்டால் நரகம் வரும் நாத்திகர்கள் ஆகிவிடுவீர்கள்" என்று வேதம், சாத்திரம், புராணம் கூறுவதுபோலக் கூறி, நான் உங்களை அடக்குமுறைக்கு ஆளாக்கவில்லை, நான் சொல்லுவது உங்களுடைய அறிவு, ஆராய்ச்சி, உத்தி அனுபவம் இவைகளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள். ஒருவனுடைய எந்த கருத்தையும் மறுப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், அதனை வெளியிடக்கூடாது என்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. "
Quotations from Periyar
இது எதனைக் காட்டுகிறது...அப்பட்டமாக பிராமணியர்களின் புத்திக்கூர்மையைக் காட்டுகிறது...! உங்கள் எல்லோரையும் தங்கள் பாதைக்குள் இழுக்கவல்ல கருத்தை விதைத்திருக்கிறார்களே...அதில் தான் பிராமணியத்தின் வெற்றி தங்கி இருக்கிறது...! பெரியார் முழக்கினால் என்ன... அவருடைய கருத்துக்களில் அவருக்கே நம்பிக்கை இல்லை... அதற்கு இது சாட்சி..."நான் மனிதனே! நான் சாதாரணமானவன், என் மனத்தில் பட்டதை எடுத்துச் சொல்லி யிருக்கிறேன். இதுதான் உறுதி. இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்று சொல்லவில்லை. ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள், மற்றதைத் தள்ளிவிடுங்கள்." அதனால்தான் அவர் பிராமணியத்திடம் தோற்றார்...! அறிவிருந்திருந்தால் ஏன் பிராமணியத்தின் வழி அலசாமல் செல்கின்றனர் மக்கள்...! யோசிக்க வேண்டாம் என்ன பெரியார் இவர்...! இன்று கூட அடிப்டைக் கல்வி அறிவில் 59 வீதமாக உள்ள இந்திய மண்ணின் மைந்தர்களிடம் அறிவைப் பயன்படுத்தி சிந்தி என்று சொல்லி ஒரு கருத்தை...அப்போதே வைத்தது எவ்வளவு முட்டாள் தனம்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

