09-05-2005, 03:15 PM
வினித் Wrote:நடிகர் விஜயகாந்தை கைது செய்க„ தொல்.திருமாவளவன்
விளம்பரம்
AனுஏநுசுகூஐளுநுஆநுNகூ
திருமாவளவன்
சென்னை, செப்.5- இயக்குனர் தங்கர்பச்சானை இழிவுப்படுத்திய நடிகர் விஜயகாந்தை கைது செய்ய வேண்டும் என்று தொல். திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்.
விடுதலை சிறுத்தை அமைப்பின் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது„-
போர்„-தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில் வருகிற 21-ந்;தேதி மாநிலம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். தமிழை பயிற்சி மொழியாக்க வேண்டும், ஆட்சி மொழியாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோhpக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படும். சென்னையில் கோட்டை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்தில் நான் (தொல்.திருமாவளவன்), மருத்துவர் ராமதாசு, மருத்துவர் சேதுராமன், பழ. நெடுமாறன் உள்ளிட்ட தமிழ் பாதுகாப்பு இயக்கத் தலைவர்கள் இதில் கலந்து கொள்கிறேhம்.
கட்டப் பஞ்சாயத்து„-நடிகையை பற்றி இயக்குனர் தங்கர் பச்சான் இழிவாக பேசியது தவறுதான். அதற்கு அவர் மேல் போலீசில் புகார் கொடுத்திருக்கலாம். சம்பந்தப்பட்ட நடிகை நவ்யா நாயர் கூட போலீசில் புகார் கொடுக்கவில்லை. அப்படி இருக்கும்போது நடிகர் சங்கத்துக்கு வரவழைத்து தங்கர் பச்சானை இழிவுப்படுத்தி இருக்கிறhர்கள். அங்கு கட்டப் பஞ்சாயத்து நடந்திருக்கிறது. மன்னிப்பு கேட்ட பிறகும் அவரை இழிவுபடுத்தும் செயலில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவரது படத்தை திரையிட விடாமல் நடிகர் சங்கத்தினர் திரையரங்கு உhpமையாளர்களை மிரட்டுகிறhர்கள். நடிகர் சங்கத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்தவர்களை தமிழக அரசு கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கேள்வி„- அப்படியானால் நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்தை கைது செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்களா?
பதில்„- அவர்தான் செய்தார் என்று எல்லோருக்கும் தொpயும். நாங்கள் சொல்வது யார் கட்டப் பஞ்சாயத்து செய்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.
தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக தமிழ் ஆர்வலர்கள் பிறமாநிலத்தவர்களால் இழிவு செய்யப்படுகின்றார்கள். விசயகாந்த் போன்றவர்கள் இப்படி தமிழ் இயக்குனர்களை இழிவுபடுத்துவது மனதிற்கு நெருடலாகவே உள்ளது. ஒரு இணையத்தளத்தில் தங்கர்பச்சான் நடிகைகள் குஸ்ப்பு, விந்தியா ( இவர்கள் இருவரும் தமிழை தாய்மொழியாகக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது) மற்றும் சிறீவித்தியா போன்றவர்களால் இழிவுபடுத்தப் பட்டதாக செய்தி.
எதுவாக இருந்தாலும் தங்கர் பச்சான் தரமான தமிழ் மணம் கமழும் திரைப்படங்களை தங்துள்ளார். அப்படிப்பட்ட ஒருவரை இழித்துப் பேசும் விசயகாந்த், குஸ்ப்பு விந்தியா சிறீப்பிரியா போன்றவர்களை தமிழ் திரை ஆர்வலர்கள் இனம் கண்டுகொள்வார்கள் என்பது திண்ணம்.

