11-04-2003, 05:09 PM
இலங்கை நாடாளுமன்றத்தை முடக்கினார் சந்திரிகா! கொழும்புவைச் சுற்றி இராணுவம்!!
செவ்வாய், 4 நவம்பர் 2003
பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அமைச்சரவையில் இருந்து பாதுகாப்பு, உள்துறை, பத்திரிக்கை தொடர்பு துறைகளின் அமைச்சர்களை தனது அதிகாரத்தை பயன்படுத்தி பதவி நீக்கம் செய்த அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, இலங்கை நாடாளுமன்றத்தை இரண்டு வார காலத்திற்கு முடக்கி வைக்கவும் உத்தரவிட்டுள்ளார்!
இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண தான் மேற்கொண்டுவரும் அமைதி முயற்சி குறித்து அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷிடம் விளக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அமெரிக்கா சென்றுள்ள நிலையில், இலங்கையை அரசியல் - சட்ட நெருக்கடிகளில் ஆழ்த்தும் முடிவுகளை அதிபர் சந்திரிகா எடுத்துள்ளார்.
அதுமட்டுமின்றி, இலங்கையின் ரூபவாகினி தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்கள், முக்கிய மின் மையம் ஆகியவற்றைச் சுற்றி ராணுவத்தை நிறுத்த உத்தரவிட்ட சந்திரிகா குமாரதுங்கா, இலங்கைத் தலைநகர் கொழும்புவைச் சுற்றி இராணுவப் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண வடகிழக்கு மாகாணத்திற்கு இடைக்கால சுய ஆளுமை ஆணையம் அமைப்பது தொடர்பான வரைவுத் திட்டத்தை விடுதலைப் புலிகள் அளித்த மூன்றே நாட்களில் இப்படிப்பட்ட அதிரடி முடிவுகளை சந்திரிகா எடுத்துள்ளது அமைதிப் பேச்சுவார்த்தைக்கு எதிரான நடவடிக்கைகளாக தெரிகின்றது.
விடுதலைப் புலிகள் அளித்த வரைவுத் திட்டம் குறித்து கருத்து கூறிய சந்திரிகா குமாரதுங்காவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் ஈழத்தை அமைப்பதற்கான அடித்தளமே புலிகள் அளித்துள்ள வரைவுத் திட்டம் என்று வர்ணித்திருந்தது.
புலிகள் தங்களது வரைவுத் திட்டத்தில் கூறியுள்ள இடைக்கால சுய ஆளுமை ஆணையம் என்பது இறுதியாக தனி நாட்டை உருவாக்கும் நோக்கம் கொண்டது என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட பின்னணியில் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா எடுத்துள்ள அதிரடி நடவடிக்கைகள் இலங்கையில் அரசியல் - சட்ட நெருக்கடியை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது மட்டுமின்றி, முப்படைகளின் தலைமைத் தளபதி என்கின்ற அதிகாரத்தைப் பெற்றுள்ள அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் கையெழுத்திட்டு நடைமுறையில் இருந்துவரும் போர் நிறுத்தத்திற்கு முடிவுகட்டும் நடவடிக்கையை எடுக்கும் வாய்ப்பும் உள்ளதாக கொழும்பு வட்டாரங்கள் கூறுகின்றன.
அதிபர் சந்திரிகாவின் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் இலங்கையை அரசியல் குழப்பத்தில் ஆழ்த்திவிடும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அமெரிக்காவில் இருந்து எச்சரித்துள்ளார்.
our thanks to webulagam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>