Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
TRO-USA
#3
அமெரிக்கா சூறாவளி சோகம்: 30 ஆயிரம் டொலர் நிதிதிரட்ட புனர்வாழ்வுக் கழகம் முடிவு!
[திங்கட்கிழமை, 5 செப்ரெம்பர் 2005, 19:35 ஈழம்] [ம.சேரமான்]
அமெரிக்காவைத் தாக்கி ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட கொடும் சூறாவளியான கத்ரீனாவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி வழங்குமாறு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் இணையத்தளம் மூலம் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது.

ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அமெரிக்க மக்கள் அளித்த பாரிய உதவிகளை நினைவுகூரும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தற்போது கத்ரீனாவில் பாதிக்கப்பட்ட அமெரிக்க மக்களுக்கு உதவுகிற வகையில் இந்த நிதி உதவியை அளிக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் அதன் வேண்டுகோள் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நெட் இணையத் தளத்துக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகத் தலைவர் வைத்தியர் ரஞ்சிதன் அளித்த நேர்காணல்:

கத்ரீனா நிதி உதவியாக நாம் 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் டொலரை வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளோம்.

எமது வேண்டுகோளை ஏற்று அமெரிக்கா வாழ் தமிழர்கள் மற்றும் இதர நாடுகளிலிருந்து தொடர்ந்து எம்மை தொடர்பு கொண்டு வருகின்றனர். எமது நிதி திரட்டல் இலக்கை நாம் அடைய முடியும் என்ற நம்பிக்கையை இது உருவாக்கியிருக்கிறது.

இந்த நிதி உதவியை எப்படி எங்கே அளிப்பது என்பது இது குறித்து நாம் இறுதி செய்யவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் வேறு நகரங்களுக்கு இடப்பெயர்வுக்குள்ளாகி இருப்பதால் இது குறித்து நாம் விவாதித்து உரிய முடிவெடுப்போம் என்றார் ரஞ்சிதன்.

அமெரிக்காவின் நியூஆர்லியன்ஸ், லுசியானா உள்ளிட்ட பகுதிகளைத் தாக்கிய இந்தக் கத்ரீனா சூறாவளியால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததுடன் பல லட்சக்கணக்கான மக்கள் இடப்பெயர்வுக்குள்ளாகி இருக்கிறார்கள்.

கத்ரீனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறிலங்கா அரசு 20 ஆயிரம் அமெரிக்க டொலரை அளிப்பதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Reply


Messages In This Thread
TRO-USA - by வினித் - 09-05-2005, 01:24 PM
[No subject] - by Mathuran - 09-05-2005, 01:51 PM
[No subject] - by தீபா - 09-05-2005, 02:18 PM
[No subject] - by adithadi - 09-05-2005, 02:23 PM
[No subject] - by வினித் - 09-05-2005, 02:35 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)