Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நோர்வே செய்திகள்
#1
<img src='http://www.yarl.com/forum/weblogs/upload/15/1603007486431c2d06f0d7b.jpg' border='0' alt='user posted image'>நோர்வே நாடாளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர் பட்டியலில் தமிழரான பாலசிங்கம் யோகராஜாவின் பெயர் இடம்பெற்றிருக்கின்றது.


கடந்த 2003 ஆம் ஆண்டு நோர்வே நகரசபைத் தேர்தலில், நோர்வே தமிழ் மக்களின் பிரதிநிதியாக தொழிற்கட்சி உறுப்பினரான பாலசிங்கம் யோகராஜா (பாஸ்கரன்) போட்டியிட்டு ஒஸ்லோ வாழ் தமிழ் மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றி பெற்றார்.

இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் இம்மாதம் 12 ஆம் திகதி (செப்.12) நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர் பட்டியலில் பாலசிங்கம் யோகராஜாவின் பெயரும் இடம்பெற்றிருக்கின்றது.

இது நோர்வே தமிழர்களின் அரசியல் பிரவேசத்தின் படிநிலை வளர்ச்சியாகும்.

இவரது பெயர் தொழிற்கட்சி வேட்பாளர் பட்டியலில் 18 ஆவது இடத்தில் இடம்பெற்றிருக்கின்றது. எனவே நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவென்ற போதும், தமிழ் மக்களின் பிரதிநிதி ஒருவரின் பெயர் நாடாளுமன்ற வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றமை எதிர்காலத்தில் நோர்வே நாட்டில் தமிழர்கள் அரசியலில் தடம் பதிப்பதற்கான புடம் போடப்படுகின்றது என்பதையே வெளிப்படுத்துகின்றது.

நோர்வே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பாலசிங்கம் யோகராஜா தெரிவித்ததாவது:

இன்றைய இளைஞர்கள் தான் நாளைய தலைவர்கள். தொலைநோக்கு அடிப்படையில் எமது இருப்பு இங்கேதான் அமையப்போகின்றது என்ற யதார்த்தப் புறநிலையில், நாமும் இந்த நாட்டின் அரசியலில் முக்கிய அங்கமாகின்றோம். இந்த ஆரம்ப முயற்சியை வழிகாட்டலாகக் கொண்டு நோர்வேயில் வாழும் இளைய தமிழர்கள் நோர்வே அரசியலிலும் சமூகத்திலும் ஈடுபாடு கொள்ளவேண்டும், செயல் முனைப்புக் கொள்ளவேண்டும்.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்மக்களின் சார்பில் ஒரு பிரதிநிதியை நோர்வே நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதற்கான முனைப்போடு நாம் உழைக்க வேண்டும்.

புலம்பெயர் நாடுகளில் நாம் அரசியல் உட்பட பல தளங்களிலும் பலமாக வளரும் போதுதான் தாயக மக்களின் கெளரவமான வாழ்வுக்கும் பலம் சேர்ப்பவர்களாக நாம் கடமையாற்ற முடியும்.

இம்மாதம் 12 ஆம் திகதி நடைபெறும் நோர்வே நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் எமது வாக்குரிமையை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

கடந்த 2003 ஆம் ஆண்டு, நகரசபைத்தேர்தலில் 57 விழுக்காடுடைய தமிழ்மக்கள் தமது வாக்குரிமையைப் பயன்படுத்திக்கொண்டார்கள் என்பது நோர்வே அரசியல் தளத்தில் அவதானிக்கப்பட்ட முக்கிய விடயம்.

அதிலும் குறிப்பாக அதிகமான தமிழ்ப் பெண்கள் தேர்தலில் வாக்களித்தமை உயர்வாகப் பேசப்படுகின்றது.

ஆனபோதும் வாக்குரிமையுடைய 43 விழுக்காட்டினர் தமது வாக்குரிமையைப் பயன்படுத்தவில்லை என்பது கவலையளிக்கின்ற விடயமேயாகும்.

எனவே இம்முறை தமிழ்மக்களின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் பயன்படுத்தப்படுமேயானால் எமது வாக்குப்பலம் தேர்தலில் வெகுவாகப் பிரதிபலிக்கும் என்றார் பாலசிங்கம் யோகராஜா.


நன்றி புதினம்
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply


Messages In This Thread
நோர்வே செய்திகள் - by Mathuran - 09-05-2005, 11:27 AM
[No subject] - by Mathuran - 09-05-2005, 11:46 AM
[No subject] - by msuresh - 09-05-2005, 12:00 PM
நோர்வே - by Anandasangaree - 09-12-2005, 12:35 PM
[No subject] - by jeya - 09-12-2005, 12:43 PM
[No subject] - by Anandasangaree - 09-12-2005, 01:19 PM
[No subject] - by iruvizhi - 09-19-2005, 01:41 PM
[No subject] - by Birundan - 09-19-2005, 01:45 PM
[No subject] - by Mathuran - 09-19-2005, 01:54 PM
[No subject] - by Nilavan. - 09-19-2005, 06:22 PM
[No subject] - by Nilavan. - 09-19-2005, 06:23 PM
[No subject] - by Birundan - 09-19-2005, 06:41 PM
[No subject] - by ANUMANTHAN - 09-19-2005, 07:21 PM
[No subject] - by வினித் - 10-17-2005, 08:08 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)