Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மலிவு விற்பனை - ஷண்முகி
#1
தொலைபேசி மணி தொடர்ந்து அடித்துக் கொண்டேயிருந்தது.

வேலைக்கு போகும் அவசரத்தில் உடுத்தது பாதி, உடுத்தாது பாதி என்று புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்தவேளையில் , 'இது வேறு' என்று முணு முணுத்துக்கொண்டே போனை எடுத்தாள் பரிமளா.
"ஹலோ.." என்றவுடனே அவள் அறிந்துகொண்டாள். கொழும்பில் இருந்து அவளது தம்பி சுதர்சனன் தான் தொடர்பு கொள்வது என்று.

அதற்குள்ளாக அவனாகவே,
" அக்கா, நான் சுதர்சன்..." என்று பல மைல்களுக்கு அப்பால் இருந்து ஒலித்த அவனது குரல், பரிமளாவின் காதில் வளையமிட்டுக் கொண்டிருந்தது.

"அக்கா , மலிவுவிலை போட்டிருக்கிறம். ஒரு சாறி எடுத்தால் இன்னொரு சாறி இலவசம். அதுவும் இந்த மாசம் மட்டும் தான்.... இந்த விலையில எங்கேயும் எடுக்கமாட்டிங்கள்..." கூறிக் கொண்டே வெவ்வேறு கோலங்களில் ஆன அழகான புடைவைகளை ஒவ்வொன்றாக இழுத்துப்போட்டுக் கொண்டே கவனம் முழுவதையும் விற்பனையில் காட்டிக் கொண்டிருந்தார் விற்பனையாளர்.

அந்த புடைவைகள் மீது நளினியின் கவனம் இருக்கவில்லை. அவர் ' மலிவுவிற்பனை' என்று கூவியழைத்தது தான் அவளின் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது.

சொந்தம் விட்டு போகக்கூடாது என்பதற்காகத்தான் பெண்ணுக்கும் மலிவு விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறதா..?

பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் இலவசமாக இந்த நாட்டு பிரஜாஉரிமை கிடைக்குமா...?

அதற்காகத்தான் இந்த திருமணப்பேச்சும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றதா...?

"ஒரு புடைவை எடுத்தால் இன்னொன்டு இலவசம்.." கடைக்காரர் மீண்டும் உரத்து , தன் வியாபார தந்திரத்தை உபயோகித்து விற்பனை செய்து கொண்டிருக்கிறார்.

நன்றி - சூரியன்

இது சண்முகி அக்கா ஆக்கமா...?!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
மலிவு விற்பனை - ஷண்முகி - by kuruvikal - 09-05-2005, 10:45 AM
[No subject] - by shanmuhi - 09-05-2005, 10:59 AM
[No subject] - by inthirajith - 09-28-2005, 09:03 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)