Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யுத்தம் திணிக்கப்பட்டால் அனைத்து படைமுகாம்களும் அழிக்கப்படும
#1
எம் மீது யுத்தம் திணிக்கப்பட்டால் அனைத்து படைமுகாம்களும் தாக்கி அழிக்கப்படும் - தமிழன்பன்
றுசவைவநn டில ளுயமெடைலையn ஆழனெயலஇ 05 ளுநிவநஅடிநச 2005

அரசு எம்மீது யுத்தத்தைத் திணிக்குமாக இருந்தால் வடக்கு கிழக்கில் உள்ள படை முகாம்கள் அனைத்தும் தாக்கி அழிக்கப்படும். காலத்திற்கு காலம் விடுதலைப் புலிகள் பலவீனப்பட்டு இருக்கின்றார்கள் என்று அரசு கருதுகின்ற வேளைகளில் எல்லாம் விடுதலைப் புலிகள் மீது யுத்தத்தை முன்னெடுத்துள்ளார்கள் இந்த வகையிலேயே ஈழப் போர் ஒன்று இரண்டு மூன்று என இடம் பெற்றன. ஆனால் இவைகளிலும் விடுதலைப் புலிகள் வெற்றியே பெற்றுள்ளார்கள். இவ்வாறு புலிகளின் குரல் பொறுப்பாளர் திரு. தமிழன்பன் தெரிவித்துள்ளார்.
நல்லூர் ஆலய வீதியில இடம் பெற்ற கேணல் கிட்டு மற்றும் தியாகி லெப்ரினன்ட் கேணல் திலீபன் ஆகியோரின் நினைவாக இடம் பெற்ற சிறப்பு முத்தமிழ் கலையரங்க நிகழ்வு கடந்த மூன்று நாடகளாக இடம் பெற்று வந்தது. இதன் இறுதிநாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே திரு. தமிழன்பன் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:

எமது தலைவரைப் பொறுத்தவரையில் எதிரியின் யுத்த தந்திரத்தை மிகவும் கவனமான முறையில் முறியடித்து வெற்றி கொண்டவர். இந்த வகையில் எதிரி எம்மைப் பலவீனப்படுத்தலாம் என்று நினைத்தால் அது ஆபத்தில் தான் முடியும். கடந்த மூன்று ஆண்டுகால சமாதான ஒப்பந்தம் எம்மைப் பொறுத்தவரையில் எதனையும் கொண்டு வரவில்லை. ஆனால் தென் இலங்கை மக்களுக்கும் இராணுவத்தினருக்குமே இது நன்மையாக அமைந்துள்ளது. இக் காலத்தில் இவர்களே சுதந்திரமாகவும் அச்சுறுத்தல் இன்றியும் வாழ்ந்துள்ளார்கள்.

ஒப்பந்தம் செய்யப்பட்ட காலம் முதல் விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தும் செய்ற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர். உண்மையாக போர் நிறுத்தத்திலும் சமாதானத்திலும் உண்மையான அக்கறை கொண்டவர்களாக அரசு இருக்குமாக இருந்தால் ஏன் எமது போராளிகளையும் பொறுப்பாளர்களையும்; அழிக்கும் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

http://www.sankathi.net/index.php?option=c...=2394&Itemid=41
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
யுத்தம் திணிக்கப்பட்டால் அனைத்து படைமுகாம்களும் அழிக்கப்படும - by வினித் - 09-05-2005, 10:02 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)