Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இம்மாதம் 30ம் நாள் யாழில் தமிழர் அரசுப் பிரகடனம்!!
#1
இம்மாதம் 30ம் நாள் யாழில் தமிழர் அரசுப் பிரகடனம்!!
றுசவைவநn டில ளுயமெடைலையn ஆழனெயலஇ 05 ளுநிவநஅடிநச 2005

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் தமிழர் அரசுப் பிரகடனத்தை ஏற்கும்படி சர்வதேச சமூகத்தைக் கோரும் பிரகடனம் இம் மாதம் 30ம் நாள் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்படவுள்ளது. இது தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு திருநெல்வேலிச் சந்தியில் அமைந்துள்ள சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை அலுவலகத்தில் இடம் பெற்றுள்ளது.
யாழ். பல்கலைக் கழக சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இச் சந்திப்பு பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத் தலைவர் திரு. விஐயரூபன் தலைமையில் இடம் பெற்றது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு. கNஐந்திரன், திருமதி பத்மினி சிதம்பரநாதன், திரு. சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் பல்கலைக் கழக மூத்த விரிவுரையாளர் முனைவர் சிதம்பரநாதன், சர்வதேச தமிழீழ மாணவர் பேரவைப் பொறுப்பாளர் திரு.ந.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டதாவது:

ஸ்ரீலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 2002ஆம் ஆண்டு பெப்ரவரி 22ஆம் நாள் நோர்வே அரசின் அனுசரணையுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப் பட்டது. அத்துடன் ஆறு சுற்றுப் பேச்சுகளும் நடத்தப்பட்டன. ஆனால், பேச்சுகளின் முடிவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்களை நடை முறைப்படுத்த சிங்கள அரசு தவறியது.

இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைக்கான வரைவை விடுதலைப் புலிகள் முன்வைத்த போது அது குறித்து தொடர்ந்து பேச சிங்கள அரசு முன்வரவில்லை. அதேவேளை, ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணக் கட்டமைப்புக்கு ஸ்ரீலங்கா நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சிங்கள பௌத்த பேரினவாதிகள் தமிழ் பேசும் மக்களுக்குரிய நியாயமான எந்த ஒரு தீர்வையும் முன்வைக்க மாட்டார்கள் என்பது இப்போது அப்பட்டமாக உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. இந்த உண்மை நிலையினை சர்வதேச சமூகத்தின் முன்னால் வெளிப்படுத்தி எமக்கான நியாயத்தைக் கோருகின்றோம்.

வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் இன்று தமிழர் அரசொன்று நடைமுறையில் உள்ளது. அதிலும் சுமார் 70 வீதமான நிலப்பரப்பு தமிழர் படைகளின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. எஞ்சியுள்ள எமது தாயக நிலத்தையும் கடலையும் ஸ்ரீலங்கா இராணுவம் ஆக்கிரமித்து நிற்கின்றது.

இந்நிலையில் தமிழருடைய அரசின் இறைமையை அங்கீகரிக்க வேண்டுமென சர்வதேசச் சமூகத்திடம் நாம் கோரிக்கை விடுக்கின்றோம். அவ்வாறே எமது தாயகப் பரப்பிலிருந்து ஸ்ரீலங்கா ஆக்கிரமிப்புப் படைகள் வெளியேற்றப்பட வேண்டும். ஜனநாயக வழியில் சர்வதேசச் சமூகத்திடம் நாம் விடுக்கும் இந்தக் கோரிக்கையை சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டும். என தெரிவிக்கப்பட்டது.

இந்த எழுச்சி நிகழ்வில் கலந்து கொள்ளும்படி தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வெளிநாட்டு ராஜதந்திரிகள், உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்கள் உட்பட பல முக்கிய பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளது.

இதேவேளை இந்த எழுச்சி நிகழ்வில் பல லட்சக் கணக்கான மக்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என்றும் அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதி உட்பட சகல ஏற்பாடுகளையும் நிகழ்வு ஒழுங்கமைப்புக் குழு மேற்கொண்டுள்ளது
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
இம்மாதம் 30ம் நாள் யாழில் தமிழர் அரசுப் பிரகடனம்!! - by வினித் - 09-05-2005, 09:57 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)