09-05-2005, 04:40 AM
kirubans Wrote:குருவிகளின் கவிதைகளை வாசித்த கொழுவியின் விமர்சனத்தைக் கீழே தருகின்றேன். நான் காசு கொடுத்து வாங்கும் புத்தகங்களில் உள்ள கவிதைகளை மட்டுமே படிப்பதால் என் கருத்துக்களை எழுதவில்லை. மன்னியுங்கள்.
உண்மையைச் சொன்னால் நாங்கள் காசுக் கவிதைகள் படிப்பதில்லை... தரமான கவிதைகளைக் காண்டால் படிப்போம்.... இப்படியான கவிதைகள் வேண்டுமா... தரமான சஞ்சிகைகள்...பத்திரிகைகள்... மற்றும் சாதாரண கல்விசார்/சாரா நிறுவன மாணவர்களின் சஞ்சிகைகளில்...இன்னும் தரமான இணையத்தளங்களில் இவை தாராளமாகக் கிடைக்கின்றன...! தமிழுக்கு குறைவில்லா வரை கவிதைகளுக்கும் குறைவில்லை...!
கவிதைகள் சிந்தனையில் பிறந்து கற்பனையில் கலந்து உணர்வினில் வளர்ந்து வெளிவருபவை...! கவிஞன் என்பவன் மக்கள் சொத்து மக்கள் அங்கீகாரம்...அவன் படைப்புக்களும் மக்கள் சொத்தே....அதைக் காசுக்கு விற்றல்...மக்களை ஏமாற்றுவது போன்றது...! நாங்கள் எவர் கவிதையையும் அது வைரமுத்து ஆகட்டும் இல்லை எங்கள் புதுவை ஆகட்டும் காசு கொடுத்து வாசிக்கப் போவதில்லை...!
நன்றி... கொழுவி என்று எவரோ கண்ணுக்குத் தெரியாதவர் முன்வைத்திருக்கும் விமர்சனத்தில் தேவையானத்தை...நாங்கள் எப்பவோ உள்வாங்கிக் கொண்டு...மிகுதியை கழித்தும் விட்டோம்... விமர்சனத்தை இன்னும் நாலு பேரைக் கூட்டி வைத்து விமர்சிக்கவில்லையே...! விமர்சகனுக்குரிய மரியாதையை வழங்கித்தான் இருக்கிறோம்...அதுதான் என்னவோ...கொழுவியின் கொழுவல் ஆரம்பத்தோடே மட்டுப்படுத்தப்பட்டு விட்டது...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

