09-04-2005, 07:01 PM
KULAKADDAN Wrote:kuruvikal Wrote:குளக்காட்டான் உங்கள் கருத்துக்கு தனிப்படக் கருத்து அவசியம் இல்லை என்று கருதுகின்றோம்..நீங்கள் நாங்கள் முன்வைத்த அவதானிப்பை சரியாக உள்வாங்காமல் சமாளிப்பைப் பிரதிபலிக்கிறீர்கள் என்றே எண்ணுகின்றோம்..!ஏன் என்றால் கும்ப விடயத்தில் தமிழர் காலாசார சின்னம் அல்லது தமிழர் நடைமுறைகள் என்று ஆதரித்துக் கருத்துக் கூறும் நீங்கள் மறு இடத்தில் தமிழர் கலாசார அல்லது நடைமுறை ஆடை விடயத்தில் அவரவர் விருப்பம் போல என்று கலாசார நடைமுறைகளை மறுதலிக்கவும் செய்கிறீர்கள்..! இது கலாசாரக் குழப்பமா அல்லது அந்த இடத்தில் இது தமிழ் சம்பந்தப்பட்ட நிகழ்வு இல்லையா...உங்கள் கருத்துக்களின் பிரகாரம் இப்படி கேட்கவும் ஆட்கள் இருக்கிறார்கள்..!எனது மனதில் பட்டதை சொன்னென் குருவிகளே. அதற்கு யாரிடம் இருந்தும் பதிலை எதிர் பார்த்து கருத்து வைக்கவில்லை.
:
கும்பம் தாயகத்திலும் அனைத்து நிகழ்வுகளிலும் வைக்கப்படுகிறது. ஏன் எமது பாடசாலைக் காலத்திலும் வைக்கப்பட்டிருக்கிறது. தமிழ் மொழித்தினம் கொண்டாடினோம், இன்னும் என்னென்னவோ கோண்டாடி இருக்கிறோம். அங்கு எல்லரும் மேலைத்தெய உடைகளுடன் தான் சென்றும் இருக்கிறொம். அங்கு வராத பிரச்சனை இங்கு மேலைத்தேயத்தில் உடைப்பிரச்சனை ஏன் வந்தது என்று தான் கேட்டேன்.
சமாளிக்க வேண்டிய அவசியம் நமக்கு இல்லை.
மற்றையது யாருக்கும் எதிராக கருத்தாட வெண்டிய அவசியம் எனக்கு இல்லை. எனக்கு பட்டதை , எழுதவேணும் என்று தோன்றுவதை எழுதுகிறேன் அந்தளவே.
கவிதை பற்றிய எனது கருத்தை ,அதை வாசித்த பின்பே வைக்க முடியும்.
குறிப்பாக நாங்கள் முன்வைத்த அவதானிப்புக்களுக்கு வசி மற்றும் மதன் தங்கள் விளக்கங்களைத் தந்தார்கள்...அதில் குறிப்பிடத்தக்க அளவு நியாயப் பார்வை இருந்து...! அதை எவரும் ஏற்றுக்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது...! ஆனால் வேறு சிலர் தங்கள் சுய முரண்பாடுகளோடு வைக்கும் கருத்துகளே பெறப்பட்ட தெளிவைக் கலங்கடித்துக் கொண்டிருக்கிறது..! மற்றும் படி உங்கள் பதிலும் வசியின் பதிலும் கிட்டத்தட்ட ஒரே வகையினதே குளக்காட்டான்...! நன்றி உங்கள் புரிந்துணர்வுக்கு..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

