Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நாய் மரணத்துக்கு விசாரணை கமிஷன்
#1
டாக்டர்களின் தவறான அறுவை சிகிச்சையினால் நோயாளி இறந்து விட்டால் உடனே நாம் கோர்ட்டுக்குப் போகிறோம். போதிய ஆதாரத்துடன் தவறான சிகிச்சை யினால்தான் நோயாளி இறந்தார் என்பதை நிரூபித்தால் நஷ்டஈடு கிடைக்கிறது. சிகிச்சை அளித்த டாக்டர்(கள்) மீது நட வடிக்கையும் எடுக்கப்படுகிறது.

இது போல் தங்களது அபிமான செல்லப் பிராணி தவறான சிகிச்சையில் இறந்து போனால் நம்மில் யாராவது வழக்கு தொடுப்போமா?... என்று கேள்வி எழுப்பினால் "மாட்டோம்'' என்பதுதான் பதிலாக இருக்கும். ஆனால் இங்கிலாந்தில் தனது செல்ல நாயை இழந்து போன ஒரு பிரபல நடிகை இப்போது நாய் எப்படி இறந்தது என்பது பற்றி கால்நடை ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் விசாரிக்கவேண் டும் என கோரிக்கை வைத்திருக்கிறார். அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டு விசாரணையும் தொடங்கிவிட்டது.

அந்த பிரபல நடிகையின் பெயர், ஜில் மோஸ். 10 வயதில் இவரிடம் பெல்லா என்ற ஒரு செல்ல நாய் இருந்தது.

கடந்த ஆண்டு ஜில் மோஸ்சின் வீட்டுத் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது பெல்லா அங்கு வந்த ஒரு அணிலைத் துரத்தியது. அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து அதற்குச் சரியான அடிபட்டு விட்டது. உடனடியாக அதை கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனார்,ஜில் மோஸ். அங்கு பெல்லாவிற்குச் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. எனினும் நாய் குணமடையவில்லை. இதனால் நாயை பெட்போர்ட் ஷையர் நகரின் விசேஷ கால்நடை மருத்துவ மனைக்கு கொண்டுபோனார்கள். அங்கே பெல்லாவை பரிசோதனை செய்து பார்த்தபோது, மிர்சா என்னும் ரத்த உண்ணி யால் உருவான நோய்க் கிருமிகள் அந்த நாயை பெரிதும் தாக்கியிருப்பது தெரியவந்தது.

(மிர்சா ரத்த உண்ணி நோய்க்கிருமிகள் கால்நடைகளிடமிருந்து மனிதர்களுக்கு தொற்றிக் கொள்ளக் கூடியதாகும்).

விசேஷ கால்நடை மருத்துவமனையில் பெல்லாவிற்கு அறுவை சிகிச்சை செய்தனர். அதன் பிறகு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்த பின்னரும் கூட பெல்லா பிழைக்கவில்லை. சில நாட்களிலேயே இறந்து போனது. இங்கிலாந்தில் `மிர்சா' நோய்க்கு பலியான முதல் நாய் இதுதான். பெல்லா இறந்த சில மாதங்களுக்குப் பின்னர் இன்னொரு நாயும் இதே நோய்க்கு பலியாகி விட்டது. அந்த நாயும் அறுவை சிகிச்சைக்குப் பின்னர்தான் இருந்திருப்பது நடிகை ஜில் மோஸ்க்குத் தெரிய வந்தது. அது மட்டுமல்ல, பெல்லா இறந்து 18 மாதங்களாகிவிட்ட பின்னர் இது வரை மொத்தம் 310 நாய்கள் இங்கிலாந்தில் மிர்சா நோயால் தாக்கப்பட்டிருக்கின்றன.

எனவே சாதாரண ஒரு காயத்தால் எனது நாய் இறந்திருக்க வாய்ப்பில்லை. அறுவை சிகிச்சை யின்போதுதான் நாய்க்கு ஏதோ ஒரு தப்பு நடந்திருக்கிறது. மேலும் மிர்சா நோய் தீவிரமாக பரவி வருவதால் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஜில் மோஸ் நினைத்தார். இதனால் உடனடியாக அவர் சுற்றுப் புறச் சூழல் உணவு மற்றும் புறநகர் விவகார அமைச் சரவைக்கு தனது நாய் இறந்தது குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இப்போது அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு விசாரணைக் கமிஷனும் அமைக்கப்பட்டு விட்டது.

நடிகையின் நாய் மரணத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்குமா?...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
நாய் மரணத்துக்கு விசாரணை கமிஷன் - by SUNDHAL - 09-04-2005, 06:22 PM
[No subject] - by Danklas - 09-04-2005, 06:26 PM
[No subject] - by SUNDHAL - 09-04-2005, 07:00 PM
[No subject] - by தீபா - 09-04-2005, 07:06 PM
[No subject] - by கீதா - 09-04-2005, 07:38 PM
[No subject] - by RaMa - 09-05-2005, 04:37 AM
[No subject] - by SUNDHAL - 09-05-2005, 11:42 AM
[No subject] - by SUNDHAL - 09-05-2005, 11:44 AM
[No subject] - by வினித் - 09-05-2005, 12:33 PM
[No subject] - by vasanthan - 09-05-2005, 01:19 PM
[No subject] - by Annachi - 09-05-2005, 01:48 PM
[No subject] - by ப்ரியசகி - 09-07-2005, 02:06 PM
[No subject] - by SUNDHAL - 09-07-2005, 02:15 PM
[No subject] - by கீதா - 09-07-2005, 07:22 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)