Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உங்களுக்கு எதாச்சும் புரிதா..?
#15
குடும்பங்களை பெரும்பாலும் தாங்கிப் பிடிப்பது உறவுகள். கிராமங்களின் முதுகெலும்பே உறவுகள்தான். இன்றைக்கும் கிராமத்தில் ஒருவருக்கு ஒன்று என்றால் அவரது உறவுக் கூட்டமே ஒரு ஊர்போல ஒன்று கூடும். பிரச் சினைக்கு உடனே தீர்வு காணும்.

நகரங்களில் உறவுகள் என்பது காண அரிதான ஒரு விஷயமாகி இருக்கிறது. பெரும்பாலும் கூட்டுக் குடும்பங்கள் என்ற நிலை என்றைக்கு மாறி, தனிக் குடித்தனங்கள் என்ற நிலைக்கு வந்ததோ, அப்போதே உறவுகளும் கண்காணாத தூரமாகி விட்டது.

தனது வசதிக்காக உறவுகளை சுருக்கிக் கொண்டவர்களும் உண்டு. அதிக வரு மானம், புதிய கவுரவம் என்று சமூகத்தில் தனி அந்தஸ்து கிடைக்கத் தொடங்கியதுமே அதுவரை தங்களுக்கு பலமாக, சகல விஷயங்களுக்கும் பாலமாக இருந்த உறவுக் கூட்டத்தை புறக்கணித்து விடுகிறார்கள்.

பிரிக்க முடியாத பந்தங்கள் என்று சொல்லப்படும் இந்த உறவுகளை பிரிப்பதில் பணம் தான் முதலிடம் வகிக்கிறது. பணம் வந்ததும் சமூகத்தில் வாழும் பெரிய மனிதர்களுடனான இன்னொரு உலகம் இவர்களுக்கு தெரிகிறது. உறவுக் கூட்டம் எல்லாம் அதன் பிறகு சாதாரணமாக தெரிகிறது.

இந்த மாதிரி வசதி, வாய்ப்பு என்று வந்த பிறகு அவர்களின் நடுத்தர மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழான நிலையில் உள்ளவர்கள் `உறவு' என்று சொல்லிக் கொண்டு இவர்கள் இருக்கும் பங்களா கேட்டைக் கூட நெருங்க முடியாது. செக்ïரிட்டி பாய்ந்து அப்புறப் படுத்தி விடுவார்.

இந்த திடீர் பணக்காரர் கஷ்டப்பட்ட நேரத்தில் இந்த உறவுக்காரர் எவ்வளவோ நேரங்களில் ஓசைப்படாமல் உதவியிருப்பார். அப்போ தெல்லாம் இவர்கள் காலில் விழாத குறையாக, `ஜென்ம ஜென்மத்துக்கும் இந்த உத வியை மறக்க மாட்டேன்' என்று சொல்லி நெகிழ்ந்து இருப்பார்கள். ஆனால் இப்போது திடீர் வசதி வாய்ப்பு, பகட்டு வாழ்க்கை தந்த சந்தோஷத் திக்குமுக்காட லில் அப்படியான உறவுகள் இவர் களுக்கு ஒரு பொருட்டாகவே தெரிவதில்லை.

வளர்க்கப்படும் விதம்தான் ஒருவரை அவரது வாழ்க்கை முறையின் போது அடையாளம் காட்டு கிறது. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பலரின் ஏக்கமும் பணக்கார வாழ்க்கையை விரும்பும் ஏக்கமாகத்தான் இருக்கும். இதனால் மனதளவில் தங்களை ஒரு பணக்காரர் போலவே இவர் கள் காட்டிக் கொள்வார்கள். இந்த போலியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், நிஜமாகவே பணம் வரத் தொடங்கும் போது ஒரிஜினல் பணக்காரர் களை விடவும் மேலாக நடந்து கொள்கிறார்கள். இந்நிலையில் கீழ்நிலையில் இருக்கும் தங்கள் உறவுக் கூட்டங்களை இவர்கள் எப்படி மதிப்பார்கள்? `யார் நீங் கள்' என்று அவர்களைப் பார்த்து இவர்கள் கேட்காமல் இருந்தாலே அதிசயம்.

இன்னொரு வகையினர் இருக்கிறார்கள். பிறந்தது ஏழைக் குடும்பமாக இருந்தாலும் பணக்காரனாகி விட வேண்டும் என்பதே இவர்கள் விடும் மூச்சாக இருக்கும். நல்லதோ, கெட்டதோ ஒரு சிந்தனை சிறு வயது முதலே மனதுக்குள் அழுத்தமாக பதிந்து போனால் பின்னாளில் அதே நிலையை அவர்கள் எட்டும் வாய்ப்புகள் அதிகம். `இதென்ன உளவியல் கணக்கு' என்பது பலருக்கும் இன்றைக்கு வரைக்கும் புதிர் தான். ஆனால் மனதில் அழுந்தப் பதிந்த அந்த சிந்தனை, ஆசையாக உருமாறி, நிஜ மாகவே நிறைவேறி விடுவதற்கு பின்னணியில் நிச்சயம் கடுமையான போராட்டங்களும், தூங்காத இரவுகளும் இருக்கும் என்பது நிச்சயம்.

கிராமத்தில் வறுமைக்குள் உழன்ற ஒருவர் திடீர் பணக்காரர் ஆனார். நகரம் வந்தார். பணம், பங்களா, கார் என்று வசந்த வாழ்க்கை. கிராமத்தில் இருந்த தன் ஏழைத்தாயை மட்டும் மனைவி சொல் கேட்டு ஏழையாகவே வைத்திருந்தார்.

ஒருநாள் அந்த ஏழைத்தாய் செத்துப் போனார். கிராமமே கூடி அடக்கம் செய்தது. நாலாம் நாள் தான் விஷயம் பணக்காரனை எட்டியது. அம்மா வாயிற்றே. கடைசியில் கூட `முக முழி' பார்க்க முடியாத சோகம் அழுத்தியது. அம்மாவின் கல்லறையிலாவது முகம் புதைத்து கண்ணீருடன் மன்னிப்பு கோர ஓடி வந்தார். ஆனால் அன்னையின் கல்லறை எது என்று அவருக்கு சொல்ல ஊரில் ஒருவர் கூட தயாராயில்லை. பணம் வந்த பிறகு உறவுகளை கிள்ளுக் கீரையாக வைத்திருந்தார் என்பதே இந்த புறக்கணிப்புக்கு காரணம்.

அன்றைக்கு திருந்தினார் அவர். பணத்தையும் மீறியது மனிதநேயமும், உறவுகளின் பிணைப்பும் என்பதை தெரிந்து கொண்டார். அதற்கு அம்மா வின் உயிரை விலையாக கொடுக்க வேண்டியிருந்தது.

உறவுகள் தான் பணத்தையும் தாண்டி கடைசிவரை துணை வரும் என்பதற்கு ஒவ்வொரு முறையும் அனுபவத்தையா பாடமாக எடுத்துக் கொண்டிருக்க முடியும்?

Thnaks:Thanthi...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
[No subject] - by Danklas - 09-04-2005, 02:57 PM
[No subject] - by SUNDHAL - 09-04-2005, 03:03 PM
[No subject] - by SUNDHAL - 09-04-2005, 03:05 PM
[No subject] - by vasisutha - 09-04-2005, 03:15 PM
[No subject] - by SUNDHAL - 09-04-2005, 03:17 PM
[No subject] - by Annachi - 09-04-2005, 04:12 PM
[No subject] - by Annachi - 09-04-2005, 04:17 PM
[No subject] - by Vaanampaadi - 09-04-2005, 04:21 PM
[No subject] - by Vaanampaadi - 09-04-2005, 05:25 PM
[No subject] - by kuruvikal - 09-04-2005, 05:49 PM
உறவுகளை விட்டு விடாதீர்கள் - by SUNDHAL - 09-04-2005, 06:19 PM
[No subject] - by MUGATHTHAR - 09-04-2005, 07:53 PM
[No subject] - by adsharan - 09-04-2005, 07:56 PM
[No subject] - by வியாசன் - 09-04-2005, 10:13 PM
[No subject] - by Vaanampaadi - 09-04-2005, 11:43 PM
[No subject] - by adithadi - 09-05-2005, 01:32 AM
[No subject] - by RaMa - 09-05-2005, 04:00 AM
[No subject] - by RaMa - 09-05-2005, 04:03 AM
[No subject] - by Mathan - 09-05-2005, 05:04 AM
[No subject] - by Mathan - 09-05-2005, 05:11 AM
[No subject] - by Mathan - 09-05-2005, 05:15 AM
[No subject] - by inthirajith - 09-05-2005, 01:52 PM
[No subject] - by ப்ரியசகி - 09-07-2005, 01:23 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)