09-04-2005, 06:04 PM
இலங்கை இனப்பிரச்சினையில் ஐ.நா.மன்ற மத்தியஸ்தம் குறித்து பிரஹிமி கருத்து
ஐ.நா.மன்ற சிறப்பு தூதர் லக்தர் பிரஹிமி இலங்கை வந்துள்ளார். இலங்கை இனப்பிரச்சினையில் தற்போது ஏற்பட்டுள்ள தீவிரநிலை காரணமாக ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஐ.நா.மன்றத்துக்கு விடுத்த அழைப்பின் பேரில் பிரஹிமி இலங்கை வந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.
தனது விஜயம் குறித்து தமிழோசைக்கு செவ்வி வழங்கிய பிரஹிமி, இலங்கையின் சூழல் குறித்து தகவல் அறிந்து வருவதற்காக பொதுச்செயலர் கோஃபி அன்னான் தன்னை இலங்கை அனுப்பியதாகக் கூறினார்.
இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வுகாணும் முயற்சிகளில் மத்தியஸ்தம் செய்வதிலிருந்து நோர்வே வெளியேறுகிறது, ஐ.நா.மன்றம் நுழைகிறது என்கிற ரீதியில் ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறு என்று அவர் தெரிவித்தார்.
பிரஹிமி கொழும்பில் தங்கியிருக்கிறார். கொழும்புக்கு வெளியே இலங்கையில் வேறு எங்கும் செல்லும் எண்ணம் இல்லை என்றும், கொழும்பில் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் யாரும் இல்லையாதலால் புலிப் பிரதிநிதி யாரையும் தான் சந்திக்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>