09-04-2005, 03:55 PM
KULAKADDAN Wrote:இளைஞனின் நிகழ்வு சிறப்பாக அமைந்திருந்து கேட்டு மகிழ்ச்சியடைந்தோம்.ஆனால் அந்நிகழ்வில் நடந்த நிகழ்வுகள், வந்திருந்தோர் பற்றிய விமர்சனங்கள் தொடங்கியுள்ளது.
கும்பம் வைத்தல் , மங்கள விளக்கேற்றல் என்பது தமிழர் நிகழ்வுகளில் உள்ள ஒருவிடயம். அது ஏன் விமர்சனத்துக்குள்ளகிறது . புரியலை?
ஐயர் நிகழ்வுக்கு அழைக்கப்பட்டது தொடர்பில் அழைப்பிதழை பார்த்த போது எனது உள்ளத்திலும் ஒரு கேள்வி எழுந்தது தான். ஆயினும் ஜேர்மனியில் இருக்கும் இளைஞனுக்கு லண்டனில் நிகழ்வை ஒழுங்கு செய்தவர்கள், அங்கு உள்ள நடைமுறைக்கு ஏற்ப அல்லது கோயில் மண்டபத்தை வழங்கியவர் என்றவகையில் ஐயரை கூப்பிட்டதில் தப்பு இருக்கிறதா ?
ஒருவருக்கு தனிப்பட்ட விருப்பு கொள்கைகளும் அவற்றில் பிடிப்பு என்பது, இருப்பது போல் விழாவில் நடைபெற்ற ஏனைய நிகழ்வுகளின் பொறுப்பளர்களது விருப்பு வெறுப்பு, அவர்களது சிந்தனைக்களுக்கும் மதிப்பளிக்க வேண்டியது ஒரு படைப்பளியின் கடமை என நான் நினைக்கிறேன்.
அத்தோடு உடை விடயம் நிகழ்வுக்கு வந்தவர் ஏன் இந்த உடையில் வந்தார் என்பது அவரது விருப்பை பொறுத்தது. நான் வேட்டி உடுக்க விரும்பினால் உடுத்து செல்லலாம்,
அதே போல் மற்றவர்களும் விரும்பிய உடை அணிவது அவரவர் விருப்பம்.
வேட்டியில் அவர் வந்தார், சேலையி இவர் வந்தார். ஏன் நீ அவ்வாறு வரவில்லை என்பது ?????
எமது மண்ணில் நடக்கும் நிகழ்வுகளிலேயே உடை பற்றிய விமர்சனங்களை பார்த்து குறைவு
இங்கு அதுவும் பேசுபொருள் ஆகி உள்ளது????
உங்களுக்குத் தோன்றியதே எனக்கும் தோன்றியது குளம் ,மேலுள்ள கருத்துக்களை வாசித்தவுடன்.
பெரியாரின் கருத்துக்கள் பார்ப்பன ஆதிக்கத்துக்கு எதிரானவயே அன்றி ,பார்ப்பனர் என்கின்ற தனி நபர்களுக்கு எதிரானது அல்ல.இதை பல இடங்களில் பார்த்திருக்கிறேன்.குன்றத்து அடிகளாருக்கும் (பேர் நாபகத்தில் இருந்து எழுதுகிறேன்) திராவிட இயக்கத்தவருக்கும் தமிழர் என்கின்ற உணர்வு ரீதியான பல ஒன்று பட்ட செயற்பாடுகள் இருந்தன.
கும்பம் வைப்பது தமிழரின் அடயாளமே அன்றி அது ஒரு சமய அடையாளம் அல்ல.பல கிரிஸ்த்தவ நிகழ்வுகளில் ,பாடசாலை நாட்களில் இதனை யாழ்ப்பாணத்தில் பார்த்திருக்கிறேன்.
ஒரு கவிஞ்ஞனை விமர்சிப்பதற்கு அவனது படைப்பயே படைக்காமல் இவ்வாறு விமர்சிப்பது காழ்ப்புணர்ச்சி அன்றி வேறொன்றும் அல்ல.
இது ஒரு புதிய விடயமும், அல்ல.இதன் அர்த்தம் இழஞ்ஞன் அவர்கள் ஒரு கவனிக்கப் படக்கூடிய படைப் பாழியாக மாறி வருகிறார் என்பதே.
ஆகவே வாழ்த்துக்கள் இழஞ்ஞரே உங்கள் பாதையில் முன்னேற.

