09-04-2005, 11:34 AM
kuruvikal Wrote:sathiri Wrote:தகவல்களிற்கு நன்றி இளைஞன் எனக்கொரு நூல் அனுப்பி விடும். புத்தக வெளியீட்டில் எனக்கொரு நெருடல் என்று எழுதினேன் உங்கள் நூல்களிற்கு அய்யரின் புசை நடந்தது என்றொரு தகவல் கிடைத்தது அதனால்தான் அப்படி எழுதினேன் பின்னர் நீங்களே விளக்கம் தந்ததால் அந்த தகவல் தவறானது என்று அறிந்தேன் மன்னிக்கவும்
<img src='http://www.appaal-tamil.com/images/stories/News/uraayvu/nool18.jpg' border='0' alt='user posted image'>
நிகழ்ச்சியின் இன்னொரு பகுதிக்குள் கும்பம்..குத்துவிளக்கு...!
<img src='http://www.appaal-tamil.com/images/stories/News/uraayvu/nool14.jpg' border='0' alt='user posted image'>
ஒரே மேடையில் வேட்டி நஷனலில் ஒருவர் விமர்சனம் வழங்க தயாராக இருக்கிறார்...தமிழ் கவிஞர் மேற்கத்தேய உடையில் அருகில் இருக்கிறார்...!
<img src='http://www.appaal-tamil.com/images/stories/News/uraayvu/nool5.jpg' border='0' alt='user posted image'>
குருக்கள்...குருக்கள் தோற்றத்தில்...வாழ்த்துரை வழங்குவது...!
பூசை நடந்ததோ இல்லையோ....பெரியார் வழியில் பிசகல்கள் நடந்திருக்கிறது போலத் தெரியுது...! குறை பிடிப்பதாக எண்ணக்கூடாது..புதிய உலகத்தில் எப்படி, மங்கள விளக்கு அல்லது குத்துவிளக்கு, கும்பம், இந்து அல்லது சைவக் குருக்கள் என்று மூடநம்பிக்கைகளின் அடிப்படைகள் நுழைந்தன...! சாத்திரியார் கேட்ட பின்னர் இவை குறித்து எண்ணினோம்...பிறகு தவறான அர்த்தம் கொள்ளப்படும் என்பதால் கருத்தை வெளியிடவில்லை...!
இது நிகழ்ச்சி தொடர்பான விமர்சனம் அல்ல... எழுத்துக்களிற்கும் நிஜத்திற்கும் இடையே காணப்படும் மாறுபட்ட தோற்றங்களின் அவதானிப்புக்கள் என்பதே சரியாகும்..! எமது அவதானிப்புக்களுக்குள் தவறு அல்லது அவற்றிற்கு நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்களிடம் வேறு அர்த்தம் இருக்கலாம்..அதைச் பகிரங்கமாகச் சுட்டிக்காட்டுதல் எல்லோருக்கும் ஒரு தெளிவை ஏற்படுத்தும்...! ஏனென்றால் குருக்கள், கும்பம். பரத நாட்டிய தாரகைகள்...பண் பாடும் பெண் எல்லோரும் தமிழ் கலாசார பின்னணியில் வந்த இடத்தில் தமிழ் கவிஞனிடம் தமிழ் உடை வரவில்லை....! மாற்றம் சமூகத்துக்கா தனி நபருக்கா..என்பதும் புரியவில்லை...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
stalin Wrote:தாசியஸ் அவர்கள் ஆரம்ப உரையில் எங்கள் பண்பாட்டில் சமுதாயத்தில் மதிக்கப்படுவபர்,முன்னிலையில் மற்றும் மங்கள விளக்கு ஏற்றுவது அம்சம்----------இதில் பிழை இருப்பதாக தெரியவில்லை....
இந்த நிகழ்வு தனி ஒரு இளஞனால் ஒழுங்கு படுத்தவில்லை..அத்துடன் ஒழுங்கு படுத்தியவர்களெல்லாம் பெரியாரின் கொள்க்கைக்காக கொடுக்கு கட்டிக்கொண்டிருக்க வோண்டியஅவசியமில்லை உடை சம்பந்தமான விமர்சனம் வேண்டுமென்றே சீண்டும் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு ...வளரும் கலைஞனை வாழ்த்துவோம்...
ஒரு படைப்பாளியின் எழுத்திற்கும்...செயலுக்கும்...சொல்லுக்கும்..யதார்த்தத்திற்கும் இடையே வேறுபாடு காணப்படுவது போல் தோற்றமளிக்கும் போது எழும் சந்தேகங்களுக்கும் விமர்சனங்களுக்கும் காழ்புணர்ச்சி என்று முத்திரை குத்துவது அப்படைப்பாளியின் படைப்புகள் மற்றும் எண்ணக்கருக்கள் தொடர்பிலான விமர்சனங்களுக்கு போடப்படும் பகிரங்கத் தடை என்பதாகவே பொருள் கொள்ளப்படும்...! இப்படியான பதப்பியரோகங்கள் மூலம் படைப்பொன்று விமர்சனத்துக்கு சந்தேகத்துக்கு அப்பால் முகமனுக்கு அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதைக் கட்டாயப்படுத்துவதாகவே கருதப்படும்...! இது வளமான விமர்சனங்களால் ஒரு வளர்ந்துவரும் படைப்பாளி புடமிடப்பட உதவாது..!
அதுமட்டுமன்றி...இங்கு காழ்புணர்ச்சிக்கு எதுவும் இல்லை..! இங்கு படைப்புப்பற்றியும் படைப்புத் தொடர்பில் படைப்பாளி பற்றியும் தான் பேசப்படுகிறது...! சஞ்சீவகாந் என்ற தனிநபர் பற்றியதல்ல...அவரின் மேல் காழ்புணர்ச்சி கொள்ள வேண்டிய அவசியம் களத்தில் எவருக்கும் எழப்போவதில்லை என்பதையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்..! இப்படி காழ்புணர்ச்சி பேசுவீர்கள் என்பதற்காகவே பலர் தங்கள் விமர்சனங்களைக் கூட சுதந்திரமாகத் தெரிவிக்கத் தயங்குகின்றனர் என்பதையும் தெரிவிக்க விரும்புகின்றோம்..! அதுமட்டுமன்றி கருத்தியல் உலகில் இளைஞன் எல்லோருக்குமான நல்ல நண்பனும் கூட...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

