09-04-2005, 10:28 AM
sathiri Wrote:தகவல்களிற்கு நன்றி இளைஞன் எனக்கொரு நூல் அனுப்பி விடும். புத்தக வெளியீட்டில் எனக்கொரு நெருடல் என்று எழுதினேன் உங்கள் நூல்களிற்கு அய்யரின் புசை நடந்தது என்றொரு தகவல் கிடைத்தது அதனால்தான் அப்படி எழுதினேன் பின்னர் நீங்களே விளக்கம் தந்ததால் அந்த தகவல் தவறானது என்று அறிந்தேன் மன்னிக்கவும்
<img src='http://www.appaal-tamil.com/images/stories/News/uraayvu/nool18.jpg' border='0' alt='user posted image'>
நிகழ்ச்சியின் இன்னொரு பகுதிக்குள் கும்பம்..குத்துவிளக்கு...!
<img src='http://www.appaal-tamil.com/images/stories/News/uraayvu/nool14.jpg' border='0' alt='user posted image'>
ஒரே மேடையில் வேட்டி நஷனலில் ஒருவர் விமர்சனம் வழங்க தயாராக இருக்கிறார்...தமிழ் கவிஞர் மேற்கத்தேய உடையில் அருகில் இருக்கிறார்...!
<img src='http://www.appaal-tamil.com/images/stories/News/uraayvu/nool5.jpg' border='0' alt='user posted image'>
குருக்கள்...குருக்கள் தோற்றத்தில்...வாழ்த்துரை வழங்குவது...!
பூசை நடந்ததோ இல்லையோ....பெரியார் வழியில் பிசகல்கள் நடந்திருக்கிறது போலத் தெரியுது...! குறை பிடிப்பதாக எண்ணக்கூடாது..புதிய உலகத்தில் எப்படி, மங்கள விளக்கு அல்லது குத்துவிளக்கு, கும்பம், இந்து அல்லது சைவக் குருக்கள் என்று மூடநம்பிக்கைகளின் அடிப்படைகள் நுழைந்தன...! சாத்திரியார் கேட்ட பின்னர் இவை குறித்து எண்ணினோம்...பிறகு தவறான அர்த்தம் கொள்ளப்படும் என்பதால் கருத்தை வெளியிடவில்லை...!
இது நிகழ்ச்சி தொடர்பான விமர்சனம் அல்ல... எழுத்துக்களிற்கும் நிஜத்திற்கும் இடையே காணப்படும் மாறுபட்ட தோற்றங்களின் அவதானிப்புக்கள் என்பதே சரியாகும்..! எமது அவதானிப்புக்களுக்குள் தவறு அல்லது அவற்றிற்கு நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்களிடம் வேறு அர்த்தம் இருக்கலாம்..அதைச் பகிரங்கமாகச் சுட்டிக்காட்டுதல் எல்லோருக்கும் ஒரு தெளிவை ஏற்படுத்தும்...! ஏனென்றால் குருக்கள், கும்பம். பரத நாட்டிய தாரகைகள்...பண் பாடும் பெண் எல்லோரும் தமிழ் கலாசார பின்னணியில் வந்த இடத்தில் தமிழ் கவிஞனிடம் தமிழ் உடை வரவில்லை....! மாற்றம் சமூகத்துக்கா தனி நபருக்கா..என்பதும் புரியவில்லை...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

