Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இயக்குனர் சூர்யாவும் சென்சார் போர்ட்டும்
#7
சமீபகாலத்தில் அரசு யந்திரம் சுறுசுறுப்பாக செயல்பட்டது எஸ்.ஜே. சூர்யாவின் 'நியூ' பட விவகாரத்தில்தான். ஐகோர்ட்டு படத்தை தடை செய்ய காத்திருந்தது போல் மளமளவென அவர் மீதும் படத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது

இந்நிலையில், நாங்க மட்டும் சும்மாவா என்பதுபோல் புதுஉத்தரவு ஒன்றை பிறப்பித்தது மத்திய அரசு. 'ஐகோர்ட்டு 'நியூ' படத்தை தடை செய்ததால், சூர்யாவிடமிருந்து படத்தின் தணிக்கை சான்றிதழை திரும்பப் பெறவேண்டும்' என மத்திய அரசு தணிக்கை குழுவை கேட்டுக்கொண்டது.

இது தொடர்பாக சென்னை தணிக்கை குழு சூர்யாவுக்கு இரண்டு கடிதங்கள் அனுப்பின. ஆனால், சூர்யாவிடமிருந்து நோ, ரெஸ்பான்ஸ். இதன் நடுவில், 'நியூ' படத்தை தடை செய்த ஐகோர்ட்டின் தீர்ப்பின் மீது இடைக்கால தடை விதித்து தீர்ப்பு கூறியிருக்கிறது சுப்ரீம் கோர்ட். இந்த வழக்கு ஐந்தாம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.

இதன் இறுதி தீர்ப்பு தனக்கு சாதகமாக அமையும் என நம்புகிறார் சூர்யா. அதுவரை தணிக்கை சான்றிதழை தன்னிடமே வைத்துக்கொள்ள வேண்டும் என அவர் நினைக்கிறார். ஆனால்,சென்னை தணிக்கை குழு அதிகாரி பாபு ராமசாமி இது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்க, அவர்களும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறும்வரை எஸ்.ஜே. சூர்யாமீது போலீஸார் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள் என்றே தெரிகிறது. ஒருவேளை சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, சூர்யாவுக்கு சாதகமாக இருந்தால், மீண்டும் தணிக்கை சான்றிதழை திரும்ப ஒப்படைக்க வேண்டியிருக்கும். இது போலீஸாருக்கு நோஸ்கட் செய்தது போலாகிவிடும். ஆகவே, தீர்ப்புக்காக காத்திருக்கிறார்கள் எஸ்.ஜே. சூர்யாவும், போலீஸும்!

cinesouth.com
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Vishnu - 08-26-2005, 09:24 AM
[No subject] - by அனிதா - 08-26-2005, 09:36 AM
[No subject] - by Mathan - 08-26-2005, 09:40 AM
[No subject] - by Vishnu - 09-03-2005, 07:29 PM
[No subject] - by கீதா - 09-03-2005, 08:14 PM
[No subject] - by விது - 09-03-2005, 10:44 PM
[No subject] - by Thala - 09-03-2005, 10:51 PM
[No subject] - by Vishnu - 09-03-2005, 11:00 PM
[No subject] - by தூயா - 09-04-2005, 02:46 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)